புதன், 26 மார்ச், 2014

பங்குகளும், அந்நிய முதலீடும்

எமது போர்ட்போலியோவில் HDFC வங்கியை 607 ரூபாய்க்கு பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது 750 ரூபாயை தாண்டியுள்ளது. அதாவது 23% லாபம்.


விவரங்களுக்கு இங்கு பார்க்க..
REVMUTHAL போர்ட்போலியோ

ஆனாலும் நாம் எதிர்பார்த்தது இதை விட சிறிது அதிகம் லாபம். இந்த 23% லாபத்தில் 10% லாபம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வந்துள்ளது. அதற்கு முன் இந்த பங்கு மந்தமாக வர்த்தகம் செய்து வந்தது.

கடந்த வருடத்தில் பொருளாதார தேக்கம், சாதகமில்லா வட்டி விகிதங்கள் என்று பல பிரச்சனைகள் இருந்தாலும் இந்த வங்கிக்கு இன்னொரு முக்கிய காரணம் இருந்தது.

அது தான் வெளிநாட்டு முதலீடு வரையறை என்ற பிரச்சனை.

இந்திய வங்கித் துறையில் 49% மட்டுமே நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. அதற்கு மேல் அரசின் ஒப்புதலுடன் 74% வரை முதலீடு செய்யலாம்.



கடந்த இரு மாதங்கள் முன்பு என்று நினைக்கிறேன்.

HDFC வங்கியின் நேரடி அந்நிய முதலீடு 49% என்ற வரையறையைத் தொட்டு விட்டது. இதனால் RBI அந்நிய முதலீட்டாளர்களுக்கு தடை போட்டு விட்டது.

இதனால் பங்கு கடந்த சில மாதங்களாகக மிக மந்தமான வர்த்தகம் செய்து வந்தது.

நாமும் இந்த பங்கில் இருந்து விலகி விடலாமா என்று யோசித்தது உண்டு.

ஆனால் எம்மைப் பொருத்த வரை பெரிய வங்கிகளில் கடின காலத்திலும் மிக நல்ல நிதி முடிவுகளை கொடுத்த வங்கி HDFC வங்கியே.

மற்ற வங்கிகள் லாபம் ஒற்றை இலக்கத்தில் இருக்க, HDFC வங்கி 25% அளவு லாபம் சம்பாதித்து வந்தது. NPA மதிப்பு மற்ற வங்கிகளைக் காட்டிலும் நன்றாக இருந்தது.

அதனால் நிறுவன செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து கொஞ்சம் காத்து இருக்கலாம் என்று விட்டு விட்டேன்.

நினைத்துப் பாருங்கள்...பங்குகளை வாங்குவதற்கு ஆள் இருக்க, அரசின் கொள்கை முடிவுகள் எந்த அளவு பங்கு லாபத்தை பாதிக்கிறது.

ஆனால் தற்போது ஒரு வித நம்பிக்கை வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக வேகமாக கொடுக்கப்படும் அரசின் அந்நிய முதலீடு தொடர்பான ஒப்புதல்கள் இந்த நம்பிக்கையைக் கொடுக்கின்றன.

அதாவது அரசு,
~ AXIS வங்கிக்கு 49% என்ற வரையறையை 62% என்று உயர்த்தி உள்ளது.
~ Federal வங்கிக்கு 49% என்பதை 74% என்று உயர்த்தி உள்ளது. இதனால் பங்குகள் ஒரே நாளில் மட்டும் 5% அளவு உயர்ந்தன.

HDFC வங்கி தொடர்பானதும் ஏற்கனவே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய தேர்தல் நேரக் கட்டுப்பாடுகளால் அரசு புதிய முடிவுகளை எடுக்க முடியாமல் உள்ளது.

தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் பட்சத்தில் HDFC வங்கிக்கும் இந்த சாதகமான முடிவுகள் அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் அரசின் ஒப்புதல் பெற வேண்டிய விதி முறைகள் HDFC வங்கியைப் பொறுத்த வரை பொருந்தியே வருகின்றன.

அப்பொழுது பங்கு எளிதாக 850 என்ற இலக்கைத் தொடும் என்று நம்புகிறோம்.

இதனால் முதலீடு  செய்யும் போது "Share Holding Pattern" என்ற ஒன்று எல்லா பங்குகளுக்கும் இருக்கும். அதனையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

இது நான் அடிக்கடி செய்யும் தவறு. திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக