வெள்ளி, 14 மார்ச், 2014

சாப்ட்வேர் நிறுவனங்களின் கடினமான காலக்கட்டம்

இந்த கட்டுரை சாப்ட்வேர் நிறுவனங்களின் தற்போதைய கடினமான காலக்கடத்திப் பற்றியும், ஒரு முதலீட்டாளராக என்ன பண்ணலாம் என்பதற்காகவும் எழுதப்பட்டுள்ளது.


இன்போசிஸ் நிறுவனத்தைப் பற்றி முந்தைய ஒரு பதிவில் விளக்கமாக எழுதி இருந்தோம்.
தலைமுறை இல்லாமல் தவிக்கும் இன்போசிஸ்

அந்த கட்டுரையின் சாராம்சம் இதுவே. "வெறும் நாராயண மூர்த்தி என்ற தனி மனிதர் இணைந்ததால் மட்டும் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி உயர்ந்து விடாது என்பதே.."

இதனை தற்போது அவருடைய விரக்தியான பேட்டி உணர்த்தி உள்ளது.

நேற்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தமது பேட்டியில் இந்த வருடம் தாம் எதிர்பார்க்கும் லாபத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கூறியுள்ளார்.

அதாவது நாஸ்காம் அறிக்கையின் படி, இந்திய தகவல் தொழில் நுட்பத் துறை இந்த ஆண்டு 13 சதவீத வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்போசிஸ் எதிர் பார்ப்பதோ 11% மட்டுமே. அதாவது சராசரிக்கும் கீழே உள்ள வளர்ச்சி.

இது போக கடந்த இரு ஆண்டுகளாக டாலர் மதிப்பு அதிகமாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் HCL, TCS போன்ற சில ஐடி நிறுவனங்கள் அதிக அளவு வருமானம் ஈட்டி தங்கள் வைப்புத் தொகையை அதிகப்படுத்திக் கொண்டன.

ஆனால் இன்போசிஸ் கடந்த இரு வருடங்களில் வெறும் 5% அளவே வளர்ச்சி அடைந்து வருடங்களை வீணாக்கி விட்டது என்பதும் அவரது பேச்சின் மற்றொரு பகுதி.

இதனை "நிறைய லாபம் எதிர் பார்க்காதீங்க.."என்று காரணத்தை கடந்த காலத்தின் மீது போடும் முயற்சியாகக் கருதி கொள்ளளலாம்.தற்போதுள்ள பிரச்சனை ஏதோ இன்போசிஸ் நிறுவனத்துக்கு மட்டும் வந்ததாக கருத முடியாது. மற்ற ஐடி நிறுவனங்களையும் பாதிக்கலாம். அதனால் தான் HCL, TCS போன்ற நிறுவன பங்குகள் விலையும் கடந்த ஒரு வாரமாக வீழ்ந்து கொண்டு இருக்கிறது.

சில பொதுவான காரணங்களை முதலீட்டாளராக நாமும் பார்க்கலாம்.

~ ரூபாய் மதிப்பு தற்போது உயர்ந்து வருகிறது. இது நாட்டுக்கு நல்லது. ஆனால் ஐடி நிறுவனங்களுக்கு நல்லதல்ல. ரூபாய் மதிப்பு 58க்கும் கீழ் போகலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. அப்படி் சென்றால் ஐடி நிறுவனங்களின் லாபம் 6% அளவு குறையும்.

~ நாஸ்காம் தகவல் தொழில் நுட்பத் துறையில் எதிர் பார்க்கும் வளர்ச்சி 13% மட்டுமே. ஒரு காலக் கட்டத்தில் 20% அளவு இருந்த வளர்ச்சி இன்று 13 சதவீதமாக சுருங்கி உள்ளது. இது நீண்ட கால நோக்கில் ஐடி நிறுவனங்களுக்கு ஒரு பெரிய பின்னடைவே.

~ தற்பொழுது இந்திய அளவு திறமையான பணியாளர்கள் சீனா, பிலிப்லைன்ஸ், ருசியா போன்ற நாடுகளில் இதே அளவு ஊதியத்திற்கு கிடைக்கின்றது. இப்படி போட்டி அதிகமான சூழ்நிலையில் லாப விகிதத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்திய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

  அதனால் பணியாளர்களுக்கு ஒற்றை இலக்க ஊதிய உயர்வே இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதனால் திறமையான பணியாளர்கள் மற்ற நிறுவனங்களுக்கு மாற்றமடைத்து செல்வார்கள். இதுவும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

~ இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள உள்நாட்டு சந்தையைக் குறி வைக்கலாம். ஆனால் எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் இந்திய அரசின் ஆமை வேக மின்னணு மயமாகும் திட்டங்கள் ஒத்து வர மறுக்கிறது.

~ இந்திய ஐடி நிறுவனங்களை பொறுத்தவரை காலம் காலமாக ஆள் பிடித்துக் கொடுக்கும் சேவை நிறுவனங்களாக இருக்கின்றனவே தவிர தயாரிப்பு நிறுவனங்களாக மாற முயற்சி செய்ததே இல்லை.

   நான்கு வருடத்திற்கு முன் வந்த whatsapp ஒரு தனியாக மென்பொருள் தயாரிப்பை வெளியிட்டு ஒரு லட்சம் கோடி மதிப்பிற்கு தமது நிறுவனத்தை விற்க முடிகிறது.

  ஆனால் அதிக அளவு அனுபமுள்ள இந்திய ஐடி நிறுவனங்களிடம் இத்தகைய "Packaged Software" தயாரிப்புகளில் அதிக அளவு இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் கீழே உள்ள படத்தில் உள்ள தரவுகளைப் பாருங்கள். மென்பொருள் சேவைப் பிரிவை விட  தயாரிப்புகளுக்கே அதிக அளவு வளர்ச்சி இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.இப்படிஅதிக அளவு எதிர்மறை செய்திகளால் மென்பொருள் துறை சூழப்பட்டு உள்ளது.

சாப்ட்வேர் பங்குகளை என்ன பண்ணலாம்?


சாப்ட்வேர் பங்குகளை முதலீட்டாளராக ஒரே அடியாக புறந்தள்ளவும் முடியவில்லை. ஏனென்றால் 13% வளர்ச்சி என்பது பல துறைகளை விட இன்னும் அதிகப்படியான வளர்ச்சியே.

அதாவது மருந்து துறை 11% என்றும் நுகர்வோர் துறை 8% என்ற அளவிலே வளர்ச்சி அடைந்து வருகின்றன. அவற்றுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் ஓகே வளர்ச்சி என்று சொல்லலாம். ஆனால் முந்தைய அளவு வளர்ச்சி எதிர்பார்க்கமுடியாது. அதனால் அதிக அளவு ரிடர்ன் எதிர்பார்க்க முடியாது.

அதனால் போர்ட்போலியோவில் சாப்ட்வேர் பங்குகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கணிசமாக குறைத்து வங்கித் துறை போன்ற வளரும் துறைகளில் அதிக அளவு முதலீடு செய்யலாம்.

எமது போர்ட்போலியோவில் சாப்ட்வேர் முதலீட்டை 15% என்பதை 10% என்று குறைக்க முயற்சி செய்து வருகிறேன்.« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

 1. Hi, Thanks for your useful posts. Can u explain what is hedging, few IT companies say they are not affected by $ rise/fall as they follow hedging.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எமது இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. இணைப்பு இங்கே உள்ளது.
   http://www.revmuthal.com/2014/04/hedging.html

   நீக்கு
 2. sir, long back i bought FCS SOFTWARE company shares , @ 16 rupees, then they incresaed the shares and reduced the price,, now it is at zero level , what to do sir? i lost n burnt my finger

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Now Nothing to loose from your side on this stock. After seeing P&L statement, it seems to be sales is improving. But due to expenses, loss is continuing..wait for another 2 quarters to see the performance improvement

   நீக்கு