வியாழன், 3 டிசம்பர், 2015

சென்னை வெள்ள பாதிப்பிற்கு முதலீடு தள சமூக உதவி

நமது முதலீடு தளத்தில்  போர்ட்போலியோ மற்றும் பிற சேவைகள் மூலம் வருமானத்தில் 5% பகுதியினை சமூக உதவிகளுக்கு தருவதாக உறுதி அளித்து இருந்தோம்.


கடந்த 2014ம் ஆண்டு இந்த உதவியை ஆப்ரிக்காவில் எபோலா நோய் பாதிக்கப்பட்ட சமயத்தில் உலக சுகாதார தொண்டு நிறுவனம் மூலம் பகிர்ந்து அளித்து இருந்தோம்.

பார்க்க: 'முதலீடு' சமூக உதவி: 'எபோலா' ஆப்ரிக்கா நாடுகளுக்கு செல்கிறது



இந்த முறை நூற்றாண்டு காணாத மழை பாதிப்பில் சிக்கி இருக்கும் சென்னை மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு பயன்படும் விதத்தில் உதவி செய்து உள்ளோம்.

முதலீடு தளம் சார்பில் 7592 ரூபாயும் எமது தனிப்பட்ட பங்களிப்பாக 2408 ரூபாயும் சேர்த்து மொத்தம் 10,000 ரூபாயை பண உதவியாக செய்கிறோம்.

இந்த உதவி படுக்கை, விரிப்பு மற்றும் உணவு போன்ற  உதவிகளுக்கு சென்னையை சார்ந்த பூமி (BHUMI) என்ற NGO அறக்கட்டளை மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடையும்.


பூமி அறக்கட்டளை சென்னையை மையமாக வைத்து செயல்படுகிறது. இந்த அறக்கட்டளை சென்னை வெள்ள பாதிப்பிற்கு SocialCops போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்து ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த உதவிக்கான ரசீது அடுத்த சில நாட்களில் எமக்கு வந்தடையும். அப்பொழுது பொதுவில் பகிர்கிறோம்.

ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் எமது தாயக மக்களுக்கு உதவி செய்வதில் முதலீடு தளம் அதிக அளவில் மன நிறைவு கொள்கிறது. 

சில நண்பர்கள் சென்னை வெள்ள பாதிப்பிற்கு உதவி செய்ய வழியைப் பற்றி கேட்டிருந்தனர். பூமியும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு NGO அமைப்பு. செய்யும் உதவிகளுக்கு 80G வரி விலக்கும் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை மற்றும்  கடலூர் மாவட்டங்கள் விரைவில் மழை பாதிப்பில் இருந்து மீண்டும் சகஜ நிலைமைக்கு திரும்ப இறைவனை வேண்டுகிறோம்!

Reference:
http://www.dnaindia.com/india/report-chennai-rains-how-this-group-organised-rescue-and-rehabilitation-for-thousands-of-people-2149135


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக