திங்கள், 28 டிசம்பர், 2015

விடுமுறைக்கு பின்..வளர்ச்சியும் வேண்டா அரசியலும்

ஒரு நீண்ட விடுமுறைக்கு பின் கட்டுரையை தொடர்கிறோம்.


மருத்துவமனையில் உள்ளோம் என்று சொன்ன பின்னர் அதிக அளவில் நண்பர்கள் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். மிக்க நன்றி!



எமக்கு எந்த வித உடல் பாதிப்பும் இல்லை. குடும்ப உறுப்பினருக்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய நிலை இருந்தது.

அடுத்து சில சுப நிகழ்வுகள் என்று மகிழ்வான நிகழ்ச்சிகளும்  இருந்ததால் சிறிது காலம் இண்டர்நெட்டையும் பங்குச்சந்தையும் விட்டு விலகி இருந்தோம்.

இந்தக் காலக்கட்டத்தில் பங்குச்சந்தையை தினமலர் மற்றும் தந்தியில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் மட்டும் அறிந்து கொண்டோம். அதனால் அதிக அளவில் விமர்சனங்களையும் கொடுக்க முடியவில்லை.

ஆனால் இந்தா கொண்டு வருகிறோம், அந்தா வருகிறது என்று GST மசோதா படும் பாட்டை நினைத்தால் மிகுந்த ஏமாற்றமாகவே உள்ளது. சீர்த்திருத்தம், பொருளாதாரம் என்று சொல்வதற்கான அருகதையை பிஜேபியும் காங்கிரசும் இழந்து விட்டன என்றே சொல்லலாம். அதனால் நமது முதலீட்டு பாதையும் கொஞ்சம் வித்தியாசமாக சித்திக்க வேண்டி உள்ளது.

இனி அரசின் கொள்கைகளால் பாதிக்கப்படாத நிறுவனங்கள் என்று ஒரு பட்டியலை தயார் செய்து அதில் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கும்.

இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை.

ஊரில் நடப்பவைகளை பார்த்தால் சொல்லப்படும் வளர்ச்சி என்பது ஏட்டில் மட்டும் தான் உள்ளதோ என்ற சந்தேகமும் வருகிறது. பத்திரிக்கைகளை திறந்தால் தங்க நகை ஏலம் என்ற பெயரில் எக்கசக்க விளம்பரங்கள்.  தங்கம் விலை குறைந்து விட்டதால் அதனை மீட்பது வீண் என்று மக்கள் நினைத்து விட்டார்கள் போல...

அதனால் NPA என்ற வாராக் கடன்கள் பாமர மக்களையும் கணிசமாக பாதித்து உள்ளது என்றும் சொல்லலாம். பணப் புழக்கமும் பெரிதளவு இல்லை.

எம்மிடம் இருந்த ஒரு ULIP பாலிசியை விட்டு அபராதம் இல்லாமல் விலகுவதற்கான காலத்தை எண்ணிக் காத்திருந்தோம். அது இப்பொழுது கனிந்தது. தனியே இது பற்றி ஒரு பதிவு எழுதுகிறோம்.

நாமே இந்த தொல்லைகள் வேண்டாம் என்ற எண்ணத்தில் சரண்டர் பண்ணினால் அந்த காசை எடுத்து இன்னொரு பாலிசியில் போட வற்புறுத்துகிறார்கள். ஓய்வு காலத்தில் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் வரும் என்று அவர்கள் சொல்லும் வார்த்தைகளிலே பலர் விழுந்து விடுவார்கள். அதுவும் ஒரு திறமை தான். ஆனால் நாம் ஏமாற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அடுத்து ரியல் எஸ்டேட்டை பார்த்தால் ஒரு குருவி கூட வாங்குவதற்கு ஆள் இல்லை. தமிழ்நாட்டில் கிராமங்களில் கூட அதிக அளவு ஏற்றி விட்டதால் மீண்டும் டிமேண்ட்டிற்கு வர இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.

சென்னையில் ஐம்பது லட்ச  ரூபாய்க்கு புறநகரில் கட்டப்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பதினைந்து லட்ச ரூபாய்க்கு கிடைக்கிறது என்று சொல்கிறார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனாலும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லலாம்.

இந்தக் கட்டுரை ஓரளவு நெகட்டிவாக தான் வந்துள்ளது. ஆனால் உண்மை நிலை இதுவென்றே கருதுகிறோம்.

இந்த சூழ்நிலையில் முதலீடுகளில் இருந்து விலகுவது புத்திசாலித் தனமாக இருக்காது. இதில் வாய்ப்புகளை தேடித் பிடிப்பது தான் நமது வேலை.

தங்கம், பங்குகள், ரியல் எஸ்டேட் என்று பல வழிகளும் மலிவாகவே வந்துள்ளன. இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சூழ்நிலையில் நாம் இலவசமாக பரிந்துரை செய்த போர்ட்போலியோ எந்த பாதிப்பும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
பார்க்க: 220% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ

அதில் Abbott India என்ற  மருந்து பங்கு 1300 ரூபாயில் பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது 6500 நிலையை கடந்து விட்டதால் விற்று விட பரிந்துரை செய்கிறோம். மதிப்பீடலில் மலிவை கடந்து விட்டது.

கடந்த இருபது நாட்களாக அதிக அளவில் மெயில்கள் வந்துள்ளன. அவற்றிற்கு ஒவ்வொன்றாக இனி பதில் அனுப்புகிறோம். போர்ட்போலியோ கேட்ட நண்பர்கள் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் எமது சேவையை பெறலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக