வெள்ளி, 1 ஜனவரி, 2016

சென்னை மழையால் பாதிக்கப்படும் ஐடி நிறுவனங்களின் லாபம்

நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த 2016 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2015 போல் இல்லாமல் இந்த வருடம் பங்குச்சந்தை நன்றாக நேர்மறை லாபங்கள் அதிகம் கொடுக்க இறைவனை பிராத்திப்போம்!
அடுத்து,

கடந்த டிசம்பரில் பெய்த மழை ஐடி நிறுவனங்களின் லாபத்தில் கணிசமாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரு காலாண்டுகளாக ஐடி நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவு நிதி நிலை அறிக்கைகளை கொடுக்கவில்லை. அது இந்த காலாண்டிலும் தொடரலாம் போல் தெரிகிறது.

இந்திய ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் வைத்து இருப்பது போல் சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் அதிக அளவு பொறியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.

அதிலும் TCS, HCL, விப்ரோ போன்ற நிறுவனங்கள் கணிசமான அளவு பணியாளர்களை சென்னையில் கொண்டுள்ளன.

கடந்த டிசம்பரில் பெய்த மழையால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இந்த நிறுவனங்கள் முழுமையாக செயல்பட தவித்தன.

இந்த இரண்டு வாரங்களுக்கும் கிளின்ட் நிறுவனங்களிடம் இருந்து பில்லிங் கிடைப்பது கடினமே. இது இந்த காலாண்டு நிதி அறிக்கையில் எதிரொலிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் தினத்தை முன்னிட்டு வருட இறுதியில் இரண்டு வார விடுமுறை அளிக்கப்படும். அதனால் பொதுவாகவே நான்காவது காலாண்டு என்பது ஐடி நிறுவனங்களை பொறுத்தவரை நன்றாக இருக்காது.

இது போக, அமெரிக்கா விசா கட்டணத்தைக் கூட்டியதும் இந்த காலாண்டில் எதிரொலிக்கும்.

அதில் சென்னை மழையும் இந்த முறை கூடவே சேர்வதால் பாதிப்பு அதிகமாக தெரியலாம்.

அதனால் முன் கூட்டியே நாமும் எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்வது நல்லது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக