திங்கள், 18 ஜூலை, 2016

வருமான வரியை பதிவு செய்ய ஒரு எளிய வழி

இந்த முறை மத்திய அரசு பல வழிகளில் வருமான வரிகளை திரட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது,


இதற்கான கடைசி தேதி ஜூலை 31 என்பதால் இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது.



முன்பு போல், வருமான வரி அலுவலகத்தை நாடி செல்லும் நிலை முற்றிலும் நீங்கி விட்டதால் வருமான வரி செலுத்தாத நிலை இருந்தாலும் பதிவு செய்வது பல வழிகளில் உதவும்.

வங்கி கடன் வாங்குதல், எதிர்காலத்தில் வருமான வரித் துரையின் கேள்விகளுக்கு பதில் அளித்தல், விசா விண்ணப்பித்தல் என்று பல நிலைகளில் தேவைப்படுகிறது.

ஆன்லைன் மூலமாக வருமான வரித் தளத்திலே பதிவு செய்யலாம்.


ஆனால் அந்த தளத்தில் படிவங்கள் கடினமான விதி முறை எண்களைக் குறிப்பிட்டே பெரும்பாலும் இருப்பதால் குழப்ப நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் cleartax.in என்ற இந்த தளத்தை பயன்படுத்தினால் கொஞ்சம் எளிதாக உள்ளது. எளிமையான விளக்கங்களுடன் பதிவு செய்ய இந்த தளம் பெரிதும் உதவுகிறது.

அதிலும் பங்குச்சந்தை லாபம் போன்ற வருமானங்களை கொண்டிருப்பவர்களுக்கு ITR-2 படிவத்தை பயன்படுத்த வேண்டிய நிலை வரலாம். அந்த சூழ்நிலையில் இந்த தளம் நன்கு எளிதாக பதிவு செய்த உதவுகிறது. மற்றவர்களுக்கு ITR-1 படிவம் போதுமானது.

இந்த முறை நாம் பதிவு செய்து பெற்ற அனுபவமும் நன்றாகவே அமைந்தது.

முதலில் cleartax.in தளத்தில் பதிவு செய்து, அதன் பிறகு நெட் பேங்கிங் மூலம் verify செய்து கொண்டால் படிவங்களை வருமான வரி அலுவலகத்திற்கு தபாலில் அனுப்ப வேண்டிய தேவையில்லை. நாம் இலவசமாகவே இந்த தளத்தை பயன்படுத்த முடிந்தது.

பயன்படுத்தி பாருங்கள்!

இணைப்பு இங்கே: cleartax.in

மேலும் தேவையான வருமான வரி தொடர்பான கட்டுரைகளை இந்த இணைப்பில் பெறலாம்.

http://www.revmuthal.com/p/income-tax-saving-india.html


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக