திங்கள், 11 ஜூலை, 2016

L&T Infotech ஐபிஒவை வாங்கலாமா?

இன்று (11-07-16) முதல் L&T நிறுவனத்தின் மென்பொருள் நிறுவனமான L&T Infotech சந்தையில் ஐபிஒ வெளியீட்டிற்கு வர ஆரம்பித்துள்ளது.


L&T நிறுவனத்தின் மொத்த அளவில் பத்து சதவீதம் L&T Infotech என்று சொல்லலாம்.



இன்போசிஸ், டிசிஎஸ் போன்று பெரிய அளவில் மென்பொருள் நிறுவன நிலையை இன்னும் அடைய முடியாவிட்டாலும் மற்ற நிறுவனங்களின் போட்டி நிலையை சமாளித்து இன்னும் நிலை பெற்றுக் கொண்டிருப்பது ஒரு முக்கியமான விடயம்.

ஆனால் மற்ற நிறுவனங்களை விட சிறப்பான விடயம் என்னவென்றால் ஏதேனும் ஒரு துறையை சார்ந்த மென்பொருளை மட்டும் தயாரிக்காமல் எல்லா துறைகளிலும் பரவலாக செயல்பட்டு வருகிறது.

அதே போல், அமெரிக்காவை மட்டும் சாராமல் ஆசியா, ஐரோப்பா என்று பல நாடுகளிலும் வியாபரத்தை மேற்கொண்டு வருகிறது.

அடுத்து, இந்த நிறுவனத்தில் ஒரு முறை வந்த நுகர்வோர்கள் மீண்டும் வருவது என்பது 98% அளவு உள்ளது என்பது சாதகமான விடயம்.

அதே நேரத்தில் புதிய கிளின்ட்களின் வளர்ச்சி பெரிதளவு இல்லை என்பதும் எதிர்மறையான விடயம்.

பொதுவாக மென்பொருள் துறையில் வளர்ச்சி என்பது ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளது என்பது நிதர்சனமாக இருக்கும் சமயத்தில் இந்த பங்கும் விதி விலக்காக இருக்காது.

அதே போல், புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த மென்பொருள் நிறுவனங்களே ஜொலித்து வரும் சூழ்நிலையில் L&T Infotech நிறுவனத்தில் பெரிய அளவு கண்டுபிடிப்புகளும் புதிய தொழில் நுட்பங்களும் இல்லை என்பதும் ஒரு குறைபாடே.

ஆனால் இந்த ஐபிஒவில் நிர்ணயித்து இருக்கும் விலை என்பது மிகவும் மலிவான விலை. அதிலும் ரீடைல் வர்த்தகர்களுக்கு 10 ரூபாய் என்று குறைத்தும் அறிவித்து உள்ளார்கள்.

மற்ற மென்பொருள் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பங்கு விலை 710 என்பது P/E மதிப்பு 12க்கு அருகில் வருகிறது. இதுவும் பங்கிற்கு வைக்கப்பட்ட மிகவும் குறைவான விலையாகும்.

இதுவரை நன்றாக சென்று கொண்டு இருக்கும் நிறுவனம் மலிவான விலையில் வருகிறது. ஆனால் வளர்ச்சி விகிதம் என்பது பெரிய அளவில் இல்லாததால் மலிவு விலையில் வாங்கி நல்ல விலைக்கு விற்று விடுவது ஒரு நல்ல அணுகுமுறையாக இருக்கும்.

ஆனால் நீண்ட கால நோக்கில் வைத்துக் கொள்ள அவசியம் இல்லை.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: