கடந்த வாரம் ஒரு பதிவில் வருமான வரியினை cleartax.in என்ற தளம் மூலம் இலவசமாக எளிதாக பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருந்தோம்.
பார்க்க: வருமான வரியை பதிவு செய்ய ஒரு எளிய வழி
அதன் பிறகு நண்பர்கள் ITR என்ற பெயரில் பல படிவங்கள் இருப்பதை குறிப்பிட்டு அவை என்ன? என்று கேட்டு இருந்தார்கள்.
அதனைப் பற்றி சுருக்கமாக இங்கு பகிர்கிறோம்.
ITR என்பது Income Tax Return என்பதன் சுருக்கம் ஆகும்.
அதில் ITR-1, ITR-2, ITR-2A, ITR-3, ITR-4, ITR-4S என்ற பெயரில் தேவைக்கு ஏற்றவாறு பல படிவங்கள் இருக்கின்றன.
இங்கு ITR-1 என்பது மாத சமபள வருமானம், பென்ஷன் மற்றும் வீட்டு வாடகை பெறுபவர்கள் மட்டும் பயன்படுத்துவதற்கானது.
அடுத்து ITR-2 என்பது ITR-1ல் குறிப்பிட்ட மாத சம்பள வருமானத்துடன் பங்குகள் மூலம் கிடைக்க பெற்ற Capital Gain வருமானத்தையும் கொண்டுள்ளவர்கள் பயன்படுத்த வேண்டும்.
இதில் பங்குகளை ஒரு வருடத்திற்கு மேல் வைத்து இருந்து விற்று இருந்தால் அதில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அதனையும் வருமான வரி படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
ITR-2A என்பது ITR-1ல் குறிப்பிட்ட வருமானத்துடன் ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் மூலம் வாடகை வருமானம் கிடைத்து இருந்தால் இந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும்.
மற்ற ITR-3, ITR-4, ITR-4S போன்ற படிவங்கள் தொழில் நடத்துபவர்கள், வீட்டில் இருந்து பகுதி நேர வருமானம் பெறுபவர்கள் போன்றவர்களுக்கானது.
ஆனால் cleartax.in என்ற தளத்தை பயன்படுத்தும் போது எதில் இருந்து வருமானம் வந்தது என்பதை மட்டும் கொடுத்து கொண்டு இருந்தால் அதற்கேற்றவாறு தேவையான படிவத்தை தானாகவே நிரப்பி விடுகிறது. இது நமது நேரத்தை சேமிக்க பெரிதும் உதவுகிறது...
இந்த கணினி காலத்தில் வருமான வரித் தளத்தில் இத்தகைய முறையிலே தகவல்களை பெற்று பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கலாம். ஆனால் தேவை இல்லாமல் படிவ மற்றும் விதி எண்களை குறிப்பிட்டு மண்டையைக் காய வைக்கிறார்கள்.
cleartax.in தளத்தில் பதிவு செய்த பிறகு பின்வரும் மூன்று முறைகளில் ஏதாவது ஒன்று மூலம் நமது அடையாளத்தை சரி பார்ப்பார்கள்.
1) இணைய வங்கி தளங்கலில் Login செய்து அதில் உள்ள வருமான வரி முறை மூலம் Verify செய்து கொள்ள வேண்டும்.
2) ஆதார் அட்டைகளில் குறிப்பிட்ட மொபைல் எண் மூலம் OTP எண்ணை பெற்று Verify செய்து கொள்ள வேண்டும்.
3) வருமான வரி தளத்தில் பதிவு செய்த மொபைல் எண் மூலமும் Verify செய்து கொள்ளலாம்.
இப்படி மேலே சொன்ன முறைகளில் முடியாவிட்டால் அந்த படிவத்தை பிரிண்ட் எடுத்து வருமான வரி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அதற்கு தேவை இருக்காது என்றே நினைக்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக