HomeLoan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
HomeLoan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

ஜெய்பேயின் கட்டி முடிக்காத பிளாட், யாருக்கு சொந்தம்?

பெரு நகரங்களில் இது மிகவும் சாதாராணமான விடயம் தான்.

செவ்வாய், 10 ஜனவரி, 2017

மானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு

ரூபாய் ஒழிப்பு நடவடிககைகளால் நொந்து போய் இருக்கும் ரியல் எஸ்டேட்  துறை ஆறுதலுக்க்காக பிரதம மந்திரி மோடி அவர்கள் இந்த வருட புத்தாண்டு நிகழ்வாக வீட்டுக் கடன்களுக்கான வட்டியில் அரசு மானியம் என்று ஒரு திட்டத்தை அறிவித்தார். அதன் பெயர் Pradhan Mantri Awas Yojana 2017 (PMAY).


இந்த திட்டமானது குறைந்த பட்ஜெட்டில் வீடு வாங்கும் மக்களுக்கு அதிக பலனைத் தரவல்லது.

அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.



இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே, குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தான். இதில் மூன்று லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும், ஆறு லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்றும் அழைக்கப்படுபவர்.


இந்த திட்டம் சொந்த வீடு இல்லாத மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தீட்டப்பற்ற திட்டம். அதனால்   தங்களுக்கோ, அல்லது உடனடியான குடும்ப உறவுகளான மனைவி, மணமாகாத மக்கள் பெயரிலோ எந்த வித வீடும் வைத்து இருக்க கூடாது என்பது முக்கிய நிபந்தனை.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

எந்த வங்கியில் எவ்வளவு சதவீத வட்டி?

தற்போது ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்து வருகிறது.


வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் பெறும் வட்டி இந்த வருடத்தில் மட்டும் 0.5% குறைக்கப்பட்டுள்ளது.

ஆயினும் வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்காமலே இருந்தன.



கடந்த வாரம் ரிசர்வ் வங்கி கொடுத்த எச்சரிக்கை காரணமாக  ஒவ்வொரு வங்கிகளும் வட்டி விகிதத்தை அவசரமாக குறைத்து வருகின்றன.

இந்த நிலையில் பல வங்கிகள் வழங்கும் வீட்டு கடன்கள் வட்டிகளை ஓரிடத்தில் தொகுத்தால் ஒப்பிட ஏதுவாக இருக்கும். அதனால் இங்கு பகிர்கிறோம்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

தனியார் வங்கி வீட்டுக் கடனில் ஒரு டிப்ஸ்

நண்பர் அனந்த குமார் அவர்கள் எழுதிய கட்டுரை ஹிந்து தமிழ் நாளிதழில் வெளிவந்துள்ளது. அவர் மின் அஞ்சல் மூலம் கட்டுரையை பகிர்ந்துள்ளார். இங்கு பகிர்கிறோம்.





வட்டி குறைந்தால் தவணை குறையுமா?

தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. வீட்டுக் கடன் பெற்று தவறாமல் மாதத்தவணை கட்டி வரும் அனைவருக்கும் இந்தக் கட்டுரை ஒரு விழிப்புணர்வைத் தரும்.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

வீட்டு லோன் மூலம் பங்குச்சந்தையில் சரியான நேரத்தில் முதலீடு செய்வது எப்படி?

பங்குச்சந்தையில் LIQUIDITY என்ற ஒரு பிரபலமான வார்த்தை உண்டு. இதனை கையிருப்பு பணம் என்று கருதிக் கொள்ளலாம்.

புதன், 19 பிப்ரவரி, 2014

வருமான வரியும் சின்ன வீடும்..

இந்த கட்டுரையில் வீட்டுக் கடன் மூலம் எப்படி அதிக பட்ச வருமான வரி பலனைப் பெறலாம் என்று பார்ப்போம்.

புதன், 8 ஜனவரி, 2014

CRR, Repo, Reverse Repo..அப்படின்னா என்ன?

இந்தக் கட்டுரையில் பாரத வங்கியின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முக்கியமான ஆயுதங்களான பண இருப்பு விகிதம், ரெபோ, தலைகீழ் ரெபோ (Reverse Repo Rate) போன்ற வட்டி விகிதங்களை பற்றி விரிவாக பகிர்கிறோம்.

இதற்கு முன் இந்த விகிதங்கள் தொடர்பான ஒரு கட்டுரை எழுதி இருந்தோம்.அந்த கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது. அதனைப் படிக்காதவர்கள் இந்த இணைப்பில் படிக்கலாம்.


அதன் தொடர்ச்சியாக நண்பர்கள் கேட்டதற்கிணங்க இந்த கட்டுரையை எழுதுகிறோம்.

இரண்டு கயிறும் முக்கியம் 


பொருளாதாரத் துறையினர் மட்டுமல்லாமல் பாமரரும் ரிசர்வ் வங்கியின் இந்த விகிதங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியமானது.

ஏனென்றால் அதற்கு சில காரனங்களை சொல்லலாம்.

  • இன்று வங்கியில் கடன் வாங்காதவர்கள் மிகக் குறைவு. நமது வங்கிக் கடன் மீதான  வட்டி விகிதங்கள் மேலே சொன்ன விகிதங்களின் அடிப்படையிலே நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த தருணங்களில் Fixed Rate போகலாமா?, Floating Rate போகலாமா? என்ற பல கேள்விகளுக்கு இந்த விகிதங்களை அடிப்படையாக வைத்து நாம் முடிவு எடுத்துக் கொள்ளலாம்.  

  • நாம் வங்கியில் வைக்கும் நீண்ட கால முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டியும் இந்த விகிதங்களைப் பொறுத்தே மாறுபடுகிறது. இதே போல் நாம் முதலீடு செய்யும் பணத்தை வங்கிகள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதையும் ஒரு முதலீட்டாளனாக அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. 

  • கடைசியாக இந்த விகிதங்கள் மாற்றம் செய்யப்படும்போது பங்குச்சந்தையில் அதனுடைய தாக்கம் சில நாட்கள் மிக அதிகமாகக் காணப்படும். அதாவது சென்செக்ஸ் 200, 300, 500 புள்ளிகள் வரை கூடும் அல்லது குறையும். அப்படியென்றால் சிறு முதலீட்டாளர்கள் இந்த விகிதங்களைப் பற்றி அறிவதும் மிக அவசியம்.

இந்த அடிப்படைக் காரணங்களுக்காக  பாரத வங்கியின் CRR, Repo, Reverse Repo போன்ற விகிதங்களை அறிந்து கொள்வது மிக அவசியமாகிறது.

இந்த விகிதங்கள் ஒன்றும் எட்டாக் கனியாக உள்ள புரிந்து கொள்ள முடியாத விடயங்கள் அல்ல. ஆனால் இந்த விகிதங்களைத் தாங்கி நிற்கும் ஆங்கில சொற்கள் நம்மிடமிருந்து அந்நியமாக நிற்கிறது என்பதே உண்மை. அதனால் எம்மால் இயன்ற வரை தமிழில் எளிமையாகக் கூற முற்படுகிறோம்.

புதன், 25 டிசம்பர், 2013

வீட்டுக் கடன் அலைச்சலைக் குறைக்க ஒரு எளிய வழி

பல நேரங்களில் வங்கிக் கடன்கள் வாங்கும் போது அதிக அளவு அலைச்சல் ஏற்படுகிறது. இந்தக் கணனியுகத்தில் சில smart வழிகள் உள்ளன. அதனைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பகிர்கிறோம்.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

SBI, HDFC வீட்டுக்கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளது

இந்த மாதத்தில் RBI வங்கிகளுக்கான Repo Rate, Reverse Repo Rate என்று எதிலும் மாற்றம் செய்யவில்லை.

புதன், 4 டிசம்பர், 2013

வீட்டு கடன் வட்டியை அதிகரித்த HDFC வங்கி

HDFC வங்கியில் வீட்டு கடன் திட்டமிடுபவர்களுக்காக இந்த பகிர்வு. HDFC வங்கி தனது வீட்டுக் கடன் வட்டியை 0.10% அதிகப்படுத்தி உள்ளது.

புதன், 10 ஜூலை, 2013

அதிக பயன் தரும் SBI MAXGAIN வீட்டுக்கடன்

வீட்டுக்கடனை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு SBI MAXGAIN ஒரு நல்ல தேர்வு.