புதன், 1 பிப்ரவரி, 2017

எதிர்பார்ப்பை விடாமல் பார்த்துக் கொண்ட ஜெட்லீ பட்ஜெட்

நேற்று முன்பு தான் எதிர்பார்ப்பு தவறினால் வீழ காத்திருக்கும்  சந்தை என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருந்தோம்.


ஆனால் ஜெட்லீயின் இன்றைய பட்ஜெட் எதிர்பார்ப்பை தவற விடாமல் பார்த்துக் கொண்டதால் சந்தையும் உற்சாகத்தைக் கொண்டாடியது.




கடைசி ஐந்து ஆண்டுகளில் வரலாறை பார்த்தால் பட்ஜெட்டிற்கு முன்பு உயரத்தில் சென்ற போதெல்லாம் பின்பு வீழ்ந்தது விட்டது. அதற்கு எதிர்பார்ப்பு பொய்த்தமையே ஒரு முக்கிய காரணமாக சொல்ல முடியும்.

ஆனால் ஜெட்லீ இந்த முறை வளர்ச்சி, நிதி பற்றாகுறை என்ற இரன்டையும் நன்கு சமநிலைப் படுத்தி கொண்டு சென்றுள்ளார்.

நிதி பற்றாக்குறையை 3.2% என்ற அளவில் குறைத்துக் கொண்டு வளர்ச்சிக்கும் அதிக நிதி ஒதுக்கி விட்டார்.

இந்த முறை பட்ஜெட் முழுமையாக உள்கட்டமைப்பு துறை, விவசாயம், மற்றும் கிராமப்புற சலுகலைகளையே மையப்படுத்தி இருந்தது.

உள்கட்டமைப்பு துறைக்கு நிதி 79% அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதன் மூலம் சாலை போடும் நிறுவனங்கள், துறைமுக கட்டுமான நிறுவனங்கள், விமான நிலைய கட்டுமான நிறுவனங்கள் போன்றவை அதிக அளவில் பலன் பெறும். இதனை நாம் ஏற்கனவே முந்தைய ஒரு பதிவில் சொல்லி இருந்தோம். வாங்கி இருந்தால் இந்த நேரம் ஐந்து முதல் பத்து சதவீத அளவு லாபம் உயர்ந்து இருக்கும்.

அடுத்து விவசாயத் துறையில் நிதி கிட்டத்தட்ட 15% அளவு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் 5000 கோடி ரூபாய் சொட்டு நீர் பாசன முறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் அண்மைய காலமாக போர்ட்போலியோவில் பரிந்துரை செய்த ஒரு பங்கு பலன் பெறுவது மகிழ்ச்சி.

பார்க்க: முதலீடு தள கட்டண சேவை 

கார்ப்பரேட் வரியானது குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50 கோடிக்குள் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் 5% வரி பலன்கள் கொடுத்து முடித்துக் கொண்டார். இதனால் பங்குசந்தையில் உள்ள நிறுவனங்கள் பலன் எதுவும் பெறப் போவதில்லை.

அதே சமயத்தில் தனி நபர் வருமான வரியில் 2.5 முதல் 5 லட்சம் வருமான விளிம்பிற்கு ஏற்கனவே 10% வரி இருந்தது. அதனை 5% குறைத்துள்ளார். இதனால் 12,500 வரை ஒவ்வொருவரும் சேமிக்க முடியும். இது பற்றி இன்னொரு பதிவில் விவரமாக பார்ப்போம்.

பொதுத் துறை வங்கிகளுக்கு பத்தாயிரம் கோடி அளவு முதலீடு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த வங்கிகளின் பங்குகளில் நேர்மறை தாக்கத்தை பார்க்க முடிந்தது.

அடுத்து பாதுகாப்பு துறை நிறுவனங்களும் 6% அளவு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நிறுவனங்கள் பெரிய எதிர்விளைவை காட்டவில்லை.

எதிர்மறையாக பார்த்தால் பொதுவான மருந்துகளின் விலையை குறைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இது ரெட்டி, சன் போன்ற நிறுவனங்களுக்கு லாப மார்ஜினை குறைக்கலாம்.

அதே போல், சிகெரெட்களுக்கு 6% அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ITC நிறுவனம் அதிகளவு பாதிக்கப்படலாம்.

இறுதியாக பார்த்தால் சந்தை இன்றோடு கணிசமான அளவு உயர்ந்து விட்டது. அதனால் ஒரு 5% அளவாவது திருத்தம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம். பங்கினை வாங்க நினைப்பவர்கள் ஓரிரு வாரங்கள் காத்து இருந்து வாங்குவது நல்லது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக