திங்கள், 13 நவம்பர், 2017

GST வரி குறைப்பு, கச்சா எண்ணெய், சந்தை சரிவு - என்ன செய்வது?

கடந்த கட்டுரை எழுதிய பின் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதனை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.


தற்போது சந்தையில் காளையின் பிடியா? கரடியின் பிடியா? என்றே தெரியமுடியவிலை.

அந்த அளவிற்கு டெக்னிகல் சார்ட்கள் குழம்பி போய் உள்ளன.



இந்த சூழ்நிலையில் நீண்ட கால முதலீடு என்று செய்தவர்கள் சந்தையை பார்க்காமல் இருந்து விடுவார்கள். அது பிரச்சினை இல்லாத ஒன்று.

ஆனால் வர்த்தகம் செய்பவர்கள் தான் மாட்டி உள்ளனர்.

Aurobindo போன்ற சில பங்குகள் நல்ல நிதி முடிவுகள் கொடுத்துள்ளன. ஆனால் ஆபெரேட்டர்கள்  பங்கை பத்து சதவீதத்திற்கும் கீழ் இழுத்து சென்றுள்ளனர்.

ஆனால் SBI போன்ற பொது துறை வங்கிகள் மிக நல்ல நிதி முடிவுகளை கொடுத்துள்ளன என்று சொல்ல முடியாது. ஆனால் சந்தை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி உள்ளனர்.

அந்த பங்குகள் பத்து சதவீதத்திற்கும் மேல் சென்றுள்ளன.

ஆக, தற்போது சந்தை முதலீட்டாளர்கள் பிடியில் இல்லை. ஸ்பெகுலேடர்கள்  பிடியில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சூழ்நிலையில் வர்த்தக நோக்கம் செய்பவர்கள் கையில் நிறைய பணமாக வைத்துக் கொண்டு ட்ரேடிங் செய்வது நல்லது. அல்லது மார்ஜின் கட்ட பணமில்லாமல் Square Off செய்ய இழுத்து விட்டு விடுவார்கள்.

இனி முதலீட்டாளர்கள் பார்வையில் பார்ப்போம்.

கடந்த வாரம் GSTயில் சில பொருட்களது வரி 28% என்பதில் இருந்து 18% என்று குறைக்கப்பட்டது. இந்த பங்குகள் கூட சந்தையின் சரிவிற்கு தப்பவில்லை.

இவை வாங்கும் வாய்ப்புகள் என்பதை உணரலாம்.

சோப்பு, சாம்பூ, ரிடேர்ஜென்ட், எலெக்ட்ரிக் சாதன பொருட்கள், பேட்டரி, ட்ராக்டர், உணவகங்கள்  போன்றவை தொடர்பான வரிகள் தற்போது கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த பங்குகளில் தற்போது முதலீடு செய்யலாம்.

எமது கட்டண சேவை போர்ட்போலியோவிலும் இதனை கருவாக கருதி மினி போர்ட்போலியோவைக் கொடுக்கிறோம். தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

அடுத்து, கச்சா எண்ணெய்..

சவுதியில் ஊழல் வழக்கு காரணமாக மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு, லெபனான் நாட்டு பிரச்சினை என்று பல காரணிகள் கச்சா எண்ணைய் விலையை மேலே கொண்டே செல்கிறது.

ஏற்கனவே OPEC நாடுகள் உற்பத்தியை கட்டுப்படுத்தி விலையை கூட்ட முயற்சிக்கும் சூழ்நிலையில் இது கூடுதலாக இணைந்துள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் டிசம்பர் மாத ப்யூச்சர் வர்த்தகத்தில் பேரல் 80$ என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

இது தற்போதைய 65$ என்பதில் இருந்து மிக உயர்வு என்பதால் இந்தியாவிற்கு மிக எதிரமறையான செய்தி தான்.

அப்படி 80 டாலருக்கு சென்றால் இந்திய அரசு எப்படி கையாளும்? என்ற விவரங்கள் தெளிவாகாத வரை இந்த சந்தை சரிவுகள் 10,000 நிப்டி புள்ளிகளில் தான் புழங்கி கொண்டிருக்கும்.

சரி. ஒரு எதிர்மறை செய்திக்கு இன்னொரு நேர்மறை செய்தியையும் பார்ப்போம்.

இந்த காலாண்டில் இது வரை நிறுவனங்கள் கொடுத்த நிதி முடிவுகள் நன்றாக உள்ளது என்பது தான்.

நிகர காலாண்டு லாபம் என்பது சராசரியாக 14% அளவு கூடி உள்ளது. இது கடந்த காலாண்டுகளை விட மிக அதிகம்.

இது சந்தை முதலீட்டாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு என்பது குறிப்பிட்டத் தக்கது.

ஆக, கச்சா எண்ணெய் உயர்வினால் ஏற்பட்ட வாட்டத்தின் ஒரு பகுதியை இந்த செய்தி சமநிலைப் படுத்த உதவுகிறது.

கொஞ்சம் பொறுமையாக, புத்திசாலித்தனத்தோடு பங்குகளை தேர்தெடுக்கும் தருணமிது..

கச்சா எண்ணையை சார்ந்து இருக்கும் நிறுவனங்களை தவிருங்கள்!

நல்ல நிதி முடிவுகள் கொடுத்த நிறுவனங்களை மலிவு விலையில் வாங்கி போடுங்கள்!

GST வரியால் பலன் பெற்ற நல்ல நிறுவனங்களில் தொடர்க!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக