வியாழன், 2 நவம்பர், 2017

பங்குச்சந்தையில் ஒரு Rights Issue அனுபவம்

இன்று Karur Vysya Bank மூலம் Rights Issue வழியாக பங்குகளை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது.


அதனை அனுபவம் மற்றும் படிப்பினை கட்டுரையாக இங்கு பகிர்கிறோம்.பொதுவாக நிறுவனங்கள் தங்களுக்கு இன்னும் அதிகமாக நிதி தேவைப்படின், பங்கு பத்திரங்கள், கடன்கள் என்று பல வழிகளில் நிதியை திரட்டும்.

அதில் ஒன்று தான் Rights Issue.


Rights என்ற வார்த்தைகளிலே ஒளிந்துள்ளது. இது சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமானது என்று அறிந்து கொள்ளலாம்.

அந்த குறிப்பிட்ட பிரிவினர் என்பது ஏற்கனவே அந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்து இருப்பதைக் குறிக்கும்.

ஏற்கனவே பங்குகளை வைத்து இருப்பவர்களுக்கு சலுகை விலையில் பங்குகளை கொடுத்து நிதியை திரட்டுவார்கள்.

இதனால் பங்கு வழங்கும் நிறுவனத்திற்கு புதிதாக திரட்டும் நிதிக்கு வட்டி கட்ட வேண்டிய தேவையில்லை.

அதே நேரத்தில் நன்றாக செல்லும் நிறுவனத்தின் பங்குகளை மலிவான விலையில் வாங்கலாம் என்பது பங்குதாரர்களுக்கும் பலன் தரும்.

இப்படித் தான் கரூர் வைஸ்யா வங்கி 700 கோடி நிதியை திரட்டுகிறது. இந்த நிதி அந்த வங்கியில் புதிதாக கடன் வழங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

தற்போது கரூர் வைஸ்யா வங்கியின் ஒரு பங்கு 130 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது.

ஆனால்  Rights Issue மூலம் தமது பங்கினை ஏற்கனவே வைத்து இருப்பவர்களுக்கு ஒரு பங்கு 76 ரூபாய்க்கு தர முன் வந்தது.

அதாவது, தாங்களிடம் இருக்கும் ஒவ்வொரு ஆறு பங்குகளுக்கும்  ஒரு பங்கினை 76 ரூபாய் என்ற சலுகை விலையில் பெறலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் 600 பங்குகளை வைத்து இருந்தால் 100 பங்குகளை 76 ரூபாயில் பெறலாம்.

இதனால் கிட்டத்தட்ட 40% அளவு மலிவான விலையில் பங்கினை பெற முடிகிறது.

கரூர் வைஸ்யா வங்கியை பொறுத்த வரை வேகமாக வளர்ந்து வரும் நூற்றாண்டு கண்ட வங்கி.வாராக் கடன்களை பார்த்தால் மற்ற வந்கிகளுடம் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.

அதனால் டிமேண்ட் என்பது அதிகம்.

நாமும் எமது கட்டண சேவை மற்றும் Angel Broking டிமேட் கணக்கு திறந்தவர்களுக்கு கொடுக்கும்  இலவச சேவைகளில் அதிக அளவு பரிந்துரை செய்து உள்ளோம்.

இந்த வருடம் மட்டும் இந்த பங்கு 80 ரூபாயில் இருந்து 130 ரூபாய்க்கு உயர்ந்து வந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த Rights Issue பெறுவதற்கு October 12, 2017 என்பதை Record Date என்று வைத்து இருந்தார்கள்.

அதாவது அக்டோபர் 12 அன்று பங்குகளை வைத்து இருப்பவர்கள் மட்டுமே இதற்கு வின்னைப்பிக்க முடியும்.

அந்த வகையில் Angel Broking வழியாக எமக்கு நினைவு படுத்தி இருந்தார்கள். நாமும் எமது கிளின்ட்களுக்கு விண்ணப்பிக்க சொல்லி பரிந்துரை செய்து இருந்தோம்.

அதற்கான படிவம் வரும் வீட்டுக்கு வரும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் வரவில்லை.

அதற்கு பதிலாக உங்கள் Rights Issue பங்குகளை நாங்கள் வாங்கி கொள்கிறோம். அதற்கு கமிசன் தருகிறோம் என்று சொல்லி ஒரு கிரே மார்க்கெட் ப்ரோக்கரிடமிருந்து கடிதம் வந்து இருந்தது.

எப்படித் தான் முகவரியை பெற்றார்கள் என்று தெரியவில்லை.

அதே நேரத்தில் மின் அஞ்சல் வந்து இருந்தது. அதில் இன்டர்நெட் வழியாக CAF என்று சொல்லப்படும் Composite Application Form பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டு இருந்தது.இந்த படிவமானது மூன்று பக்கங்களில் ஏற்கனவே நமது பெயர், எத்தனை பங்குகளுக்கு தகுதி போன்றவை நிரப்பப்பட்டு இருந்தது.

அதனால் நாம் புதிதாக விண்ணப்பிக்கும் பங்குகளுக்கான தொகையை கொடுக்கும் செக் விவரங்களை மட்டும் கொடுத்தால் போதுமானது.

பூதக் கண்ணாடி வைத்து பார்க்குமளவு இந்த படிவத்தின் எழுத்துக்கள் சிறிது என்பதையும் குறிக்க.

கரூர் வைஸ்யா வங்கியின் சில குறிப்பிட்ட கிளைகளில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று கூறி இருந்தார்கள். அதில் பெங்களுர் ஜெயாநகர் கிளையும் இருந்தது.

ஒரு மணி நேர பயணத்திற்கு பின் வங்கி கிளையை அடைந்தால். அங்கு Rights Issue பார்ப்பதற்கென்று அலுவலரை நியமித்து இருந்தார்கள்.

அவரிடம் பூர்த்தி செய்யப்பட படிவத்தையும், காசோலை விவரங்களையும் கொடுத்தோம். அதன் பின் ஒரு ரசீது கொடுத்தார்.

அவ்வளவு தான்.

நவம்பர் 10 வரை கடைசி தேதி. அதன் பின் பங்கு கிடைத்த விவரங்கள் தெரிய வரும்.

உண்மையில் ஒரு அரை மணி நேர வேலை தான். ஆனால் 40% உடனடி லாபம்.

இறுதியில் நண்பர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது,

பங்குசந்தையில் 90% பேர் நஷ்டம் அடைகிறார்கள். மீதி 10% அவர்களது நஷ்டத்தை தங்களுக்கு லாபமாக்கி விடுகிறார்கள்.

அதற்கு சில Financial Discipline என்பது தான் முக்கியம். இதே போன்று Rights Issue முறைகளும் அதில் ஒரு பகுதி தான்.

வீணாக்க வேண்டாம்! உங்களது லாபத்தை புரோக்கர்கள் கொள்ளையடிக்க தயாராக உள்ளார்கள்.

மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

எம்மிடம் டிமேட் கணக்கு திறந்தவர்களுக்கு வாட்ஸ்ஆப் வழி ஏற்கனவே தகவல்கள் பகிரப்பட்டு விட்டது.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக