கடந்த கட்டுரையில் மூடி ரேட்டிங் உயர்வு எவ்வாறு பலன் கொடுக்கும்? என்பதை பார்த்தோம்.
ஆனாலும் சந்தைக்குள் ஒரு பயம் இருப்பதால் அந்த ரேட்டிங்கை உயர்வை பொறுமையாகத் தான் அணுகுகிறது.
அந்த ஒரு பயத்திற்கு குஜராத் தேர்தலும் ஒரு காரணம்.
22 வருடங்கள் தொடர்ச்சியான பிஜேபி ஆட்சி. அதனால் மக்களுக்கு சலிப்பு வந்திருக்குமா? என்ற ஒரு சந்தேகத்தில் பலர் முதலீடு செய்ய தயங்குவதும் சந்தையை மேல் நோக்கி எடுத்து செல்வதை தடுக்கிறது.
உத்தர பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் பிஜேபியின் இந்துத்துவா கொள்கை வெற்றிக்கு முக்கிய பலமாக இருந்தது.
ஆனால் குஜராத்தில் இந்துத்துவா அந்த அளவு பலமான காரனியா? என்பதில் குழப்பம் இருக்கத் தான் செய்கிறது.
குஜராத்தை பொறுத்தவரை வரி கட்டாமல் வியாபாரம் செய்யும் சேட்டுக்கள் அதிகமாக உள்ள இடம். அவர்களுக்கு தான் GST மற்றும் டிமானிட்டேசன் மூலமாக ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். அதனால் அவர்கள் எதிராக மாறவும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியவில்லை.
IMF இந்தியாவின் தரத்தை கூட்டியது, மூடி இந்திய நிதி நிலைமையை உயர்த்தியது போன்றவை தற்போது பரவலாக விளம்பரப் படுத்தப்படுகிறது.
ஆனால் பாமர மக்கள் ஒட்டு போடும் இடத்தில் எவ்வளவு தூரம் இருக்கும் என்பதில் ஐயப்பாடு இருக்கத் தான் செய்கிறது.
இதற்காக GSTயில் பெருமளவு வரிக் குறைப்பு செய்யப்பட்டது. ஆனால் உணவகங்கள் போன்றவை அதன் பலனை பெரிதளவு நுகர்வோருக்கு கடத்தவில்லை என்பதும் உள்ளது.
இன்று பெங்களூரில் Faasos உணவகத்திற்கு சென்றால் GST வரியை 5% என்று மாற்றிக் கொண்டு, உணவில் விலையை கூட்டி விட்டார்கள். கீழே பார்க்க..மெனு விலைகளை உட்கார்ந்து அழித்து இருக்கிறார்கள். (CBEC இணையதளத்தில் புகார் செய்து இருக்கிறோம்)
அடிப்படையில் பிரச்சினை இருக்கும் இந்த நாட்டில் மாற்றத்தின் பலன்கள் வருவதற்கு சிறிது காலம் பிடிக்கத் தான் செய்கிறது.
இந்த நிலையில் குஜராத் தேர்தல் என்பது தவறான நேரத்தில் பிஜேபிக்கு வந்து இருப்பதாகவே கருதலாம்.
ஆனால் காங்கிரஸ் எதிர் முகாமோ 22 வருடங்கள் தொடந்து ஆட்சியில் இல்லாததால் கவர்ச்சியான அரசியல் தலைகள் இல்லாமல் தவிப்பது ஒரு பெரிய குறை தான்.
தொழில் ரீதியாக காங்கிரஸ் தலைகள் மறைமுகமாக பிஜேபியில் தொடர்பு வைத்து இருப்பது பாதகமானது.
ஆக, வலுவில்லாத காங்கிரஸ் கட்சி தான் பெரும்பாலும் பிஜேபிக்கு வலுவைக் கொடுக்கிறது.
இந்த நிலையில் ஹர்திக் படேலால் பிரியும் படேல் சமுதாய வாக்குகள் எங்கு செல்கிறது என்பதை பொறுத்து முடிவுகள் மாறலாம் என்று தெரிகிறது.
கருத்துக் கணிப்புகள் அனைத்தும், பிஜேபி வெற்றி பெரும் என்றே சொல்கிறது. அவ்வாறு நடந்தால் சந்தையில் அடுத்த கட்ட உயர்வுகளை பெருமளவு பார்க்கலாம்.
அதே நேரத்தில், எதிர்மறையாக வந்தால் அடுத்த லோக்சபா தேர்தலில் மோடி வெற்றி பெறுவது கடினம் என்று கருதி சந்தை கீழே செல்லவும் வாய்ப்பு உள்ளது.
குழப்பமான இந்த சூழ்நிலையில் ரிஸ்க் எடுப்பவர்கள் பாதி பணத்தை மட்டும் இப்பொழுது முதலீடு செய்து அதன் பிறகு சூழ்நிலை அறிந்து மேலும் முதலீடு செய்யலாம்.
Futures வர்த்தகம் செய்பவர்கள் பெரிய அளவு Long Positions எடுக்காமல் பணத்தை பணமாக வைத்துக் கொள்வது நல்லது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக