சனி, 29 ஜூன், 2019

FundsIndia நிறுவனர்கள் வெளியேற்றம், என்ன செய்வது?

FundsIndia என்பது இந்தியாவின் ஆரம்ப கட்டங்களில் இருந்து ஆன்லைன் வழியாக ம்யூச்சல் பண்ட் முதலீடுகளுக்கு உதவி செய்து வரும் நிறுவனம்.


சந்திரசேகர், ஸ்ரீகாந்த் மீனாட்சி என்ற இரு தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தான்.



இது வரை நன்றாகவே சென்று கொண்டு இருந்தது.

நாமும் எமது தளத்தில் சில வருடங்கள் முன்பு ஒரு முறை பரிந்துரை செய்து இருந்தோம்.

தற்போது ம்யூச்சல் பண்ட் முதலீடு Direct முறையிலும் செய்யலாம். அல்லது டிமேட் கணக்கு வழியாக கூட செய்து கொள்ளலாம்.


இந்த மாதிரியான பல முறை வழிகளால் அதன் வளர்ச்சி என்பது முன்பை விட குறைவாக சென்றது.

அதனால் FundsIndia நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும் நிறுவனர்களுக்கும் அடுத்து நிறுவனத்தை எப்படி நடத்துவது என்பதில் கருத்து வேறுபாடு உருவாகி உடனே அவர்களை வெளியேற்றும் நிலைக்கு சென்று விட்டது.

ஆனால் பொது வெளியில் இவ்வளவு விரைவு வெளியேற்றம் என்பது பல சந்தேகங்களை தான் தோற்றுவிக்கிறது.

இனி புதிதாக வந்திருக்கும் CEO வழிகாட்டுதலின் படி தான் நிறுவனம் செயல்படும்.

ஆனால் நிறுவனர் அளவிற்கு பற்று இருக்குமா? என்பதும் சந்தேகம் தான்.

வெறும் வளர்ச்சி கோஷத்தை மட்டும் சென்றால் நிலைத்தன்மை கூட பாதிக்கப்படலாம்.

அதனால் புதிய முதலீடுகளை FundsIndia வழி செய்வதை தவிர்க்கலாம்.

அதே நேரத்தில் ஏற்கனவே செய்த முதலீடுகளுக்கு பாதிப்பில்லை.

ஒரு முறை ம்யூச்சல் பண்ட் முதலீடுகளுக்கு Polio No வந்து விட்டால் அதன் பிறகு பண்டை நடத்துபவர்களுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு உருவாக்கி விடுகிறது.

அதனால் பிரச்சினையில்லை.

ஆனால் புதிய முதலீடுகளை தவிர்க்கலாம்.

அதற்கு டிமேட் வழியாக கூட முதலீடு செய்யலாம்.

டிமேட் கணக்கு தேவையிருப்பின் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக