செவ்வாய், 3 செப்டம்பர், 2019

எந்த பக்கம் வழி இருக்கிறது?

கடந்த வெள்ளியன்று எழுதியது போல் இன்று சந்தை பெரு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஜிடிபி குறைவு, ஆட்டோ விற்பனை வீழ்ச்சி போன்று பல எதிர்மறை விடயங்களை கடந்த வார இறுதி நாட்கள் சேர்த்து வைத்து இருந்தன.



ஆனாலும் ET போன்ற சில மீடியாக்கள் Mild Start எதிர்பார்க்கலாம் அல்லது மேலே போகலாம் என்று சொன்னது ஆச்சர்யமே அளித்தது.

இவ்வளவுக்கும் நேற்று சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்சில் நேற்றே ஒரு சதவீதத்திற்கும் மேல் சரிந்து இருந்தது.


கடந்த இரு வாரங்களாக அரசு ஏதாவது பண்ணி விடும் என்ற எதிர்பார்ப்பை மீடியாக்கள் உருவாக்கி வருகின்றன.

அதை நம்பி, உள்நாட்டு முதலீடுகள் உள்ளே வருகின்றன. ஆனால் FIIகள் தொடர்ந்து வெளியே செல்கிறார்கள்.

அதற்கு காரணமில்லாமல் இல்லை.

அரசுக்கு கையில் இருக்கும் வாய்ப்புகள் என்பது மிக குறைவே.

இப்பொழுது எதிர்பார்ப்பு என்ன?

ஆட்டோ துறையில் 35%க்கும் மேல் விற்பனை குறைந்து விட்டது.

அதற்கு GST வரியைக் குறைக்க வேண்டும்.

ஆனால் இது வரை ஒரு லட்சம் கோடி GST வரி வந்து கொண்டிருந்தது. அதுவும் தற்போது 98000 கோடிக்கு சென்று விட்டது.

வரி வருமானம் குறைந்து வரும் சூழ்நிலையில் எங்கு போய் வரிகளைக் குறைக்க முடியும்?

அடுத்து ஒரு பெரிய அளவில் பொருளாதார Stimulus Package எதிர்பார்க்கிறார்கள். அதாவது குறைந்தது ஒரு லட்சம் கோடிக்காவது பல திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

அந்த நிலையில் வேலை வாய்ப்புகள் கூடி வாங்கும் சக்தியாவது கூடலாம்.

ஆனால் அரசு ஏற்கனவே போட்ட பட்ஜெட்டில் 1.75 லட்சம் கோடி துண்டு விழுந்த நிலையில் இந்த புதிய ஒரு லட்சம் கோடிக்கு எங்கு செல்வது?

அதற்கு தான் ரிசர்வ் வங்கி மீது கை வைத்து 1.76 லட்சம் கோடியை வாங்கவுள்ளார்கள்.

அது துண்டு விழுந்த  1.75 லட்சம் கோடியை ஈடு செய்யத் தான் பயன்படுமே தவிர புதிய ஒரு லட்சம் கோடிக்கு உதவாது.

அந்த நிலையில் கடன் வாங்க செல்ல வேண்டும்.

கடன் வாங்கினால் நிதி பற்றாக்குறை 3.3% சதவீதம் என்பதில் இருந்து கணிசமாக அதிகரிக்கும்.

அது பங்குசந்தைக்கு நல்லதில்லை.

நிதி பற்றாக்குறை கூடினால் தரம் குறைந்து வாங்கும் கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டும். அது நிறுவனங்களுக்கு நல்லதல்ல.

ஆக, எதுவாக இருந்தாலும் பங்குசந்தையில் ஒரு தொடர் சரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக