திங்கள், 23 செப்டம்பர், 2019

அவதார புருஷர்கள்

கடவுளின் மனித ரூபமே அவதார புருஷர்கள்!

ஆனால் இன்று ஊருக்கு ஊரு, மாநில அளவில், நாடு அளவில் அவதார புருஷர்கள் புகழ் பாடுவது என்பது மிக அதிகமாகி விட்டது.



நேற்று பிகில் திரைப்படத்தின் இசை விழாவை சன் டிவியில் பார்க்க முடிந்த்தது.

நொடிக்கு நொடி, விஜயை புகழ்ந்து கொண்டே இருந்தது மிகப் பெரிய சலிப்பை தான் கொடுத்து இருந்தது.

திரைப்படங்களை ப்ரொமோட் செய்வதற்கு கதையை பற்றி சொல்லாமல் விழா முழுவதும் அவர் அப்படி, இப்படி என்று தேவலோகத்தில் இருந்து குதித்தவர் ரேஞ்சிற்கு மேலே கொண்டு வைக்கிறோம்.


இதே போல் ரஜினி காந்தின் திரைப்பட விழா.

ஒவ்வொரு படம் வெளிவருமுன் அரசியல் தொடர்பான பேச்சுக்கள்.

ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுகளில் கமல் ஹாசனுக்கு பிக் பாஸ் நிகழ்வில் புகழ்ச்சி விழா.

நேற்று ஹவுதி மோடி என்று அமெரிக்காவில் பாராட்டு விழா.

இந்திய பிரதமர் ஒருவர் வெளிநாட்டு அதிபர் தேர்தலில் ஒருவருக்கு ஆதரவளிக்கிறார் என்பது இந்தியாவே ஆதரவு அளிப்பது போல் தான்.

அடுத்த தேர்தலில் ட்ரம்ப் தவிர வேறு யாராவது ஜெயித்து விட்டால் இந்தியா மீது அதிருப்தியே இருக்கும்.

கேள்வி கேட்க யாருமில்லை.

அநேகமாக கலைஞர் ஆரம்பித்து வைத்ததை, அம்மா வழியில் மோடி வரை இந்த புகழ் பாடுதல் சென்றது என்பது சோக நிகழ்வு தான்.

ஒரு நாட்டின் தலை எழுத்தை ஒரு தனி மனிதனால் தீர்மானிக்க முடியும் என்பதே முட்டாள் தனம்.

என்னால் எதுவும் முடியாது. நீர் தான் இனி எல்லாம் என்று நமது உரிமைகளை அவர்கள் காலில் கொண்டு செல்கிறோம்.

அத்தகைய மிதப்பு வரும் போது முடிவுகளும் தான்தோன்றி தனமாகத் தான் இருக்கும்.

ஆட்சி செய்பவருக்கு எதிர்ப்பு இல்லாததோ அல்லது எதிரி இல்லாததோ என்பதே ஜனநாயகத்தின் மிகப் பெரிய வீழ்ச்சி தான்.

நம்முடைய சுய நம்பிக்கையை இழந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அடுத்தவர் காலடியில் வீழும் ஒரு காலக் கட்டத்தில் தான் நாம் இருக்கிறோம்.

எந்தவொரு வளர்ந்த நாட்டிலும் இப்படியொரு நிலை இருந்ததில்லை. அதிபர் போவார், வருவார் ! ஆனால் நாடு என்றும் இருக்கும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

8 கருத்துகள்:

  1. மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான வரிகள், சரியான கணிப்பு....

    பதிலளிநீக்கு