புதன், 11 செப்டம்பர், 2019

OLA, UBER மட்டும் தான் காரணமா? - Video

நேற்று நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆட்சியின் நூறு நாள் சாதனைகளை கூறும் போது, ஆட்டோ துறையின் வீழ்ச்சிக்கு OLA, UBER போன்றவை காரணம் என்று கூறி இருந்தார்.

அவர் கூறியது போல் ஒலாவும் ஊபரும் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதுவே முக்கிய காரணமாக இருக்க முடியாது.



நாமும் பல வளர்ந்த நாடுகளில் பார்த்து இருக்கிறோம்.

இந்த அளவிற்கு Taxi Aggregators நிறுவனங்களுக்கு எங்கும் வரவேற்பு இருந்ததில்லை.

சாலையில் நிற்க, டாக்ஸிக்கு கை நீட்டினால் மீட்டர் கட்டணத்தில் சொல்லும் இடத்திற்கு சென்று விடுவார்கள். அதனால் OLA, UBER தேவையும் குறைவு தான்.

ஆனால் இங்கு நிலைமை வேறு.

இப்பொழுதும் ஆட்டோவில் செல்லும் போது உங்களது வருமானத்தில் 30%, 40% இழப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று டிரைவர்களிடம் சொல்வதுண்டு.


அந்த அளவிற்கு முறையில்லாமல் கட்டணம் வசூலித்தது தான் மக்களை ஒலாவை நோக்கி தள்ளியது.

சரி. இது வேண்டாம் என்று மக்கள் சொந்த கார்களை வைக்கலாம் என்றால் சிட்டிக்களில் சாலை குண்டும் குழியும்.

வேலை பார்த்து விட்டு வரும் அலுப்பை விட அங்கிருந்து வீட்டுக்கு வண்டி ஓட்டி வருவது என்பது சவாலான விடயம்.

இதற்கு யார் என்று காரணம் பார்த்தால் அரசே.

எப்படி நம்மிடம் லைசென்ஸ் இல்லை என்றால் சட்டம் போட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் அரசு ரோடு மோசமாக இருந்தால் யாருக்காவது இழப்பீடு தருகிறதா?

போக்குவரத்து கட்டமைப்பில் எந்தவித முறைப்படுத்துதலும் கிடையாது.

இந்த ரோட்டில் பத்து லட்ச ரூபாய் செலவழித்து கார் வாங்கி அதற்கு மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் பராமரிப்பு செலவு என்றால் என்ன லாபம்?

அப்படியே சென்றாலும் பார்க்கிங் வசதிகள் கிடையாது.

எல்லோரையும் ஓரிடத்தில் குவிய வைத்து போக்குவரத்து நெருக்கடி வந்துள்ளது.எங்கு சென்று வண்டியை நிறுத்துவது?

இப்படி மக்களை செலவு செய்யாமல் தடுத்ததில் அரசுக்கு பெரும்பங்கு உண்டு. இந்த சிரமங்களை களையும் பொறுப்பு வரி வாங்கும் அரசுக்கே உள்ளது.

அந்த அரசு என்பது முந்தைய, இன்றைய அரசுகளை சேர்த்து தான். பத்து சதவீதம் கூட தொலை நோக்கு பார்வை என்பது கிடையாது.

ஒலாவும், உபரும் பயணிகள் வாகனங்களுக்கு தான்.

Ashok Leylend கடந்த மாதத்தில் மட்டும் 70% வாகன வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கனரக வாகனங்களை தயாரிக்கும் நிறுவனம் ஏன் ஒலாவால் பாதிக்கப்பட வேண்டும்?

ஒரு பெரிய பொருளாதார தேக்கமே சூழ்ந்துள்ளது. பணப்புழக்கம் அதிகமாக இருந்தால் மக்களும் அங்கும் இங்கும் மாறுவார்கள்.

அப்பொழுது தான் Logistics துறையும் பலன் பெறும். அது இந்த கனரக வாகன நிறுவனங்களுக்கும் பலனை தரும்.

இதை போல் விவசாயத்தில் வருமானம் இல்லை. வேலைவாய்ப்பு இல்லை என்று அரசு மீது பழி  போட ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளது.

ஆனால் அப்படி ஒன்றே இல்லாதது போல் நடிப்பது பெரிய விளைவுகளை கொடுத்தாலும் ஆச்சர்யமல்ல.

இந்த கட்டுரை தொடர்பான வீடியோ கீழே உள்ளது. நண்பர்கள் தொடர SUBSCRIBE செய்து கொள்ளவும்.





« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக