பொது மக்கள் பணம் எப்படி தனியார் நிறுவனங்களால் சூறையாடுப்படுகிறது என்பதை இந்த கட்டுரை விளக்கும்.
IndiaBulls நிறுவனம் வங்கி சாராத கடன்களை அளிக்கும் ஒரு நிறுவனம்.
நண்பர் ஒருவர் IndiaBulls நிறுவனத்திடம் வீட்டுக் கடன் வாங்குவதற்கு Approval இல்லாததால் எண்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து கடன் வாங்கி இருந்தார்.
அப்பொழுதே நாம் SBIக்கு லோ லோ என்று அலைந்து கடன் வாங்கும் சூழ்நிலையில் IndiaBulls போன்ற நிறுவனங்களுக்கு இந்தக் கடன் எப்படி லாபமாக இருக்கும் என்று நினைத்தது உண்டு.
ILFS, DHFL போன்ற நிறுவனங்கள் கூட இதே முறையில் தான் மக்கள் பணத்தை ஆட்டையை போட்டுள்ளன.
நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
என்னவென்றால்,
Indiabulls Housing Finance Limited நிறுவனம் வீடு மற்றும் கட்டுமான பணிகளுக்கு கடன் கொடுக்கும் ஒரு நிறுவனம்.
வங்கிகளிடம் பணத்தை பெற்று மற்றவர்களுக்கு சிறிது அதிக வட்டியில் கடன் கொடுக்கும்.
இந்த நிறுவனம் Reliance ADAG, DLF போன்ற நிறுவனங்களுக்கு பெரிய அளவில் கடன் கொடுப்பதாக கொடுத்து அதில் ஒரு பகுதியை மீண்டும் தங்களுக்கு திருப்பி உள்ளார்கள்.
Reliance ADAG நிறுவனத்திற்கு 1580 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார்கள். அதில் 570 கோடியை Indiabulls துணை நிறுவனங்களுக்கு Reliance ADAG மீண்டும் முதலீடு முறையில் கொட்டி உள்ளார்கள்.
இதே போல் DLF நிறுவனம் 1705 கோடி கடனை வாங்கி உள்ளது. இதனை செயல்படாத எதிர்மறை மதிப்பை கொண்டுள்ள தமது துணை நிறுவனங்களுக்கு வாங்கி உள்ளது. அதில் 66 கோடியை Gehlaut என்ற நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளார்கள். இந்த நிறுவனம் Indiabulls நிறுவனத்தின் முகவரியில் செயல்படும் இன்னொரு நிறுவனம்.
இதே போன்று Vatika Group, Americorp Group போன்ற குழுமங்கள் வழியாகவும் பணம் மாற்று வழியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு பயன்பெற்ற நிறுவனங்களான Iphito Real Estate, Myrina Real Estate, Myrina Builders, Orthia Real Estate, EMU Constructions போன்ற அனைத்தும் Indiabulls நிறுவன முகவரியில் செயல்படும் நிறுவனங்கள்.
IndiaBulls நிறுவனத்தின் முகவரியில் மட்டும் 12000 செயல்படாத நிறுவனங்கள் இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது.
NBFC துறையில் அடுத்து ஒரு பெரிய முறைகேடு, ஊழல் வெளிவர அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தற்போதைக்கு 10000 கோடி ரூபாய் வரை பட்டியல் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே சுப்ரமணிய சுவாமி ஒரு லட்சம் கோடி வரை IndiaBulls நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக கூறி இருந்தார்.
நெருப்பில்லாமல் புகையாது. ஏதோ ஒன்று இருக்க வாய்ப்பு உள்ளதால் இதில் சம்பந்தப்பட்டுள்ள பங்குகளை தவிர்க்கலாம்!
நேற்று IndiaBulls, DLF அதிக வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்னும் கூட வீழலாம்.
இப்பொழுதெல்லாம் ஊழல் என்று நடந்தால் லட்சம், கோடி என்றால் மதிப்பில்லை. ஆயிரம் கோடிகளுக்கு தான் அதிக டிமெண்ட்.
குறிப்பு:
MUTHALEEDU.IN தளத்தின் முதல் YouTube videoவை இன்று வெளியிட்டு உள்ளோம். வரும் காலங்களில் மேலும் மெருகேற்றி தரமான தகவல்களை தருவோம் என்று உறுதி கூறுகிறோம். நண்பர்கள் Channel Subscribe செய்து ஆதரவை தொடர வேண்டுகிறோம்.
கீழே video உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக