கடந்த சில நாட்களாக சந்தை 11000 மற்றும் 10800 புள்ளிகளுக்கு இடையே தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
நம்முடைய நிலைமைக்கு இன்னும் கீழே தான் செல்ல வேண்டும்.
ஆனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏதாவது சலுகையுடன் வருவார் என்று சந்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
அம்மையாரும் இது வரை நான்கு தடவை மீட்டிங் வைத்துள்ளார்கள்.
அதனை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது என்பது தான் யதார்த்தம்.
அதாவது எல்லாமே நிர்வாக ரீதியான பிரச்சினைக்கான தீர்வுகள். பொருளாதார தேக்கத்திற்கான தீர்வுகள் அல்ல.
என்னிடம் ஒரு நிர்வாக பிரச்சினை இருந்தால் ஊரை கூட்டி தீர்த்து விடுவேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. அடக்கமாகவே செய்யலாம்.
சந்தை ஏதோ ஒன்றை எதிர்பார்க்க, இவங்க சம்பந்தமே இல்லாமல் இன்னொரு டிராக்கில் போய் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே அரசிடம் எந்த அளவிற்கு பொருளாதார சலுகைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை முந்தைய ஒரு கட்டுரையில் எழுதி இருந்தோம்.
பார்க்க:
எந்த பக்கம் வழி இருக்கிறது?
ஒன்று, கடன் வாங்கினால் போகட்டும் என்று நிதி பற்றாகுறையை அதிகரித்து பெரிய அளவில் வேலை வாய்ப்பு கொடுக்கும் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
அந்த நிலையில் சந்தை கடன் கூடுகிறது என்று ஒரு வருடம் வீழ்ச்சியை அடையும். அதன் பிறகு மீளலாம்.
இல்லை, இப்படியே இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும். கடைசியில் பொருளாதார தேக்கமும் மீள நீண்ட நாள் ஆகலாம்.
நேற்று நிர்மலா அவர்கள் ஏதோ சொல்வார்கள் என்று அறிவிப்பு வந்தது. ஆனால் பிரஸ் மீட்டிங் வைத்து இ-சிகரெட்டை தடை செய்துள்ளோம் என்று சொன்னவுடன், இது சுகாதார துறை அறிவிப்பாச்சே! ஏன் இவர் சொல்கிறார் என்று தான் நினைக்க தோன்றியது.
தமிழ்நாட்டில் பிரபலமான 110 விதிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ் கூட நிதி அமைச்சர் இந்த அளவிற்கு தாமதிக்க கூடாது. யதார்த்த நிலையே சொல்லி விட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
மீண்டும் சொல்லலாம்.
இந்த மோசமான பொருளாதார தேக்க நிலைக்கு நிர்மலா சீதாராமன் அவர்கள் காரணமில்லை.
முந்தைய காங்கிரஸ்,பிஜேபி அரசுகளின் கொள்கைகளின் விளைவு என்று சொல்லலாம்.
ஆனால் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிலைமையை சமாளிக்க முடியாமல் அதிக அளவில் தடுமாறுகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
அதற்கு அவர் முன் இருக்கும் வாய்ப்புகளும் மிகக் குறைவே.

பாரத் மாதா கி ஜெய்
பதிலளிநீக்கு