நாளை வெள்ளிக்கிழமை. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நல்ல நாள்.
நிதி அமைச்சராக பதவி ஏற்ற பிறகும் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகும் இவர் பேட்டி கொடுக்க மாட்டார்களோ என்று பத்திரிகையாளர்கள் அலைந்தனர்.
ஆனால் ஒரு சில வாரங்களில் நடந்த மாற்றங்கள் வாரந்தோறும் பிரஸ் மீட் வழியாகவே மினி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.
அந்த வகையில் கடந்த இரு வாரங்களாக வெள்ளிக் கிழமை தோறும் நான்கு மணிக்கு பேட்டிக்கு வந்து விடுகிறார்.
அந்த செய்தி வரும் சூழ்நிலையில் நிப்டி ஒரு சதவீதமாவது ஏறி விடுகிறது.:)
ட்ரேடிங் செய்பவர்களுக்கு தெரிந்து இருக்கலாம்.
MACD Curve என்று உள்ளது.
அதில் இரண்டு வளை கோடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஒரு புள்ளியில் முட்டிக் கொள்ளும்.
அந்த புள்ளி அடுத்து Long எடுக்கவா? short எடுக்கவா? என்பதை தீர்மானிக்கும்.
கடந்த இரு வாரங்களாக NIFTY வியாழக்கிழமை தோறும் Short எடுப்பதற்கு மிக அருகில் வருகிறது.
அதன் பிறகு நிர்மலா அவர்களின் பேட்டி சூழ்நிலையை மாற்றி விடுகிறது.
இதை அடிப்படையாக வைத்து கூட நீங்கள் ட்ரேடிங் பண்ணலாம். :)
மேலும் ஒரு போனஸ்.
ட்ரம்ப் எப்பொழுது ட்விட் போடுவார் என்று தெரிந்தால் கூட அதை வைத்து வர்த்தகம் பண்ணலாம். :)
இன்னும் பாக்கி இருப்பது ஆட்டோ மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் தான்.
இன்று நிதின் கட்காரி கொடுத்திருக்கும் பேட்டியை பார்த்தால் நாளை ஆட்டோ துறைக்கு ஏதாவது இருக்கலாம் என்று தெரிகிறது.
சந்தை எதிர்பார்ப்பது போல் GST வரியை 28% என்பதில் இருந்து 18% ஆக குறைப்பது கூட இருக்கலாம்.
அப்படி நடந்தால் நிப்டியில் ஒரு உயர்வை காண முடியும்.
அந்த சூழ்நிலையில் 50000 கோடி ரூபாய் அளவு அரசு வருமானத்தை இழக்க வேண்டி வரும்.
அதை அரசு எப்படி அணுக போகிறது என்பதை பொருத்து சந்தையின் நீண்ட காலத்திற்கான அடுத்தக் கட்ட நகர்வுகள் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக