செவ்வாய், 22 அக்டோபர், 2019

நெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund

எம்முடைய தெரிவை விட வாசகர்களின் வேண்டுதலுக்கிணங்க கட்டுரைகள் எழுதும் போது அந்த கட்டுரை மிக பிரபலமாகி விடுகிறது.

அந்த வகையில் நண்பர் ராஜா கேள்விக்கேற்ப  Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா? என்ற கட்டுரை எழுதி இருந்தோம்.

அது அதிக அளவு பார்வையாளர்களை ஈர்த்து இருந்தது.



அதன் விளைவு Quoraவில் கேள்வி பதில்களுக்கு கூட தமிழில் பதிலளிக்க ஆரம்பித்தோம்.

நான்கு நாட்களில் நான்காயிரம் பார்வைகளை பெற்று நல்ல ஆதரவு கிடைத்து இருந்தது.

எமது பதில்களை இங்கு பார்க்கலாம். MUTHALEEDU.IN Quora கேள்வி பதில்கள்

Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா? என்ற கட்டுரையில் Comment பகுதியில் நண்பர் சந்துரு அவர்கள் Gilt Fund பற்றி எழுதுமாறு கேட்டு இருந்தார்.


அதனை பற்றி தொடர்கிறோம்.

Gilt என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தமே மிக குறைவான ரிஸ்க் என்பதாகும்.

பிரிட்டன் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று காமன் வெல்த் நாடுகளால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

அதாவது மத்திய அரசுக்கு எப்பொழுதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ ரிசர்வ் வங்கியை அணுகும்.

ரிசர்வ் வங்கி மத்திய அரசின் சார்பாக பங்கு வெளியீட்டினை நடத்தும். இவை Gilt Funds என்று அழைக்கப்படுகின்றன.

மத்திய அரசு இவ்வாறு திரட்டும் நிதி கட்டமைப்பு மற்றும் இதர வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

கடந்த கட்டுரையில் சொன்ன Liquid Funds என்பது தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

அதனால் அந்த நிறுவனம் திவாலாகும் போது முதலீடு செய்யப்பட நிதி வராமல் போவதற்கு அதிகம் இருக்கிறது.

அப்படித் தான் DHFL, ILFS போன்றவை நிதி மற்றும் வட்டி தொகையை திருப்பிக் கொடுக்கவில்லை.

அதே நேரத்தில் Gilt Funds என்பது அரசிடம் முதலீடு செய்யப்படுகின்றன.

அரசு திவாலாகுவதற்கான வாய்ப்புகள் என்பது மிகக் குறைவே. அதனால் மற்றவற்றை விட பாதுகாப்பானது என்று கருதலாம்.

இந்த பண்ட்களின் முதலீட்டுக் காலம் மூன்று முதல் ஐந்து வருடம் வரை வேறு படுகிறது.

இந்த பண்ட்களில் முதலீடு செய்யப்பட்டு வரும் வருமானத்திற்கு Capital Gain வரி உண்டு.

மூன்று வருடத்திற்குள் முதலீட்டு காலம் இருந்தால் STCG வரியும் அதற்கு மேல் இருப்பின் LTCG வரியும் கட்ட வேண்டும். இந்த வரி 10% அளவு வரும்.

கடந்த மூன்று வருடங்களில் இந்த பண்ட்கள் சராசரியாக வருடத்திற்கு 8% அளவு ரிடர்ன் கொடுத்துள்ளன.

இந்திய பொருளாதரத்தில் வட்டி விகிதங்கள் குறையும் தற்போதைய சூழ்நிலையில் Gilt Fund என்பது ஒரு நல்ல வாய்ப்பு தான்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

5 கருத்துகள்: