வியாழன், 21 மே, 2020

பங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்

நேற்று முதல் சந்தை பச்சை வண்ணத்திற்கு திரும்பி உள்ளது.

ஏதேனும் சாதகமான சூழ்நிலைகள் திரும்பி விட்டதா என்று பார்த்தால் ஒன்றுமில்லை.நிர்மலாஜி 20 லட்சம் கோடி தந்த போது கூட சந்தை இப்படி துள்ளி குதிக்கவில்லை. சிறிது உயர்ந்து அப்புறம் கீழே வந்து விட்டது. எப்படியும் எதுவும் கொடுக்க போவதில்லை என்ற நம்பிக்கையும் இருந்து இருக்கலாம்.

ஆனாலும் தற்பொழுது சந்தை ஏன் உயருகிறது என்று உன்னிப்பாக கவனித்தால் செபி நேற்று கொண்டு வந்த ஒரு விதிமுறை கண்ணுக்கு வருகிறது.


என்னவென்றால் செபியால் Short Selling முறையானது Ban செய்யப்பட்டுள்ளது.

ட்ரேடிங் தெரியாத நண்பர்களுக்காக ஒரு சிறு விளக்கம்.

Futures முறையில் நாம் பங்குகள் கையில் இல்லாமலே விற்க முடியும். இதனை Short Selling என்று அழைப்பார்கள்.

அதாவது சந்தை அல்லது பங்கு சரியும் என்று கணித்தால் இந்த Short Selling முறையில் முதலில் அதிக விலைக்கு விற்று பிறகு குறைந்த விலைக்கு வாங்கினால் லாபம் பார்க்க முடியும்.

இதில் அதிக லாபம் சம்பாதித்தவர்களும் உண்டு. நல்ல யுக்தி உடையவர்கள் தொடர்ந்து மாதக் கணக்கில் SHORTS எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதற்கு Roll-Over என்றும் பெயர்.

இதனை தான் செபி தடை செய்து உள்ளது.

இதன்படி,
  • Short செய்பவர்கள் Roll-over செய்து அடுத்த மாதத்திற்கு கொண்டு போக முடியாது.
  • Intraday முறையில் விற்க முடியாது.
  • புதிதாக Short Positions எடுக்க முடியாது.

இந்த விதி முறைகளால் Roll-over செய்ய முடியாதவர்கள் Square-off செய்வதற்காக பங்குகளை வாங்க போய் தான் நேற்றைய சந்தை கூடியுள்ளது.

தற்காலிகமாக சந்தையின் சரிவுகளை இந்த நடைமுறை தடுத்து நிறுத்தலாம். ஆனால் கொரோனாவின் பாதிப்பு என்பது ஒரு குறுகிய காலத்தில் முடிவது என்பது மிகக் கடினமான காரியம்.

அந்த சூழ்நிலையில் Short Selling Ban என்பது  சில வாரங்களில் பெரிய அளவு வீழ்ச்சிகளை Free-Fall முறையில் விழ வைக்கும்.

டிரேடிங்கில் LONG முறையை வைத்துக் கொண்டு மறறொன்றை தடை செய்வது என்பது செயற்கையான முறையில் சந்தையை தூக்கி நிறுத்துவது போல் தான்.

கிட்டத்தட்ட டெலிவரியில் பங்குகளை வாங்கி கொள்ளலாம். ஆனால் விற்க கூடாது என்று சொன்னால் என்ன நடக்குமோ அதற்கு ஈடானது தான் இது.

அதனால் சந்தையில் ஏதோ நல்லது நடந்து விட்டது என்று பணத்தை போட்டு விட வேண்டாம். இது வெறும் Short Trap அல்லது Short Covering போல் தான். இங்கு Buying Interest கொண்டு உண்மையாக வாங்குபவர்களை ஒன்றும் பார்க்க முடியவில்லை.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக