வெள்ளி, 17 ஜூலை, 2020

ரயில்வே தனியார் மயமாக்கல் IRCTC பங்கை பாதிக்குமா?

நண்பர் தட்சிணா மூர்த்தி எமது muthaleedu@gmail.com முகவரிக்கு மெயில் அனுப்பி இருந்தார். ரயில்வே துறை வேகமாக தனியார் மயமாக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் IRCTC பங்கை வைத்து இருக்கலாமா? என்று கேட்டு இருந்தார்.

சரியான கேள்வி என்றே பார்க்கிறோம்.



பொதுவாக வெளியில் இருந்து பார்க்கும் போது IRCTC பங்கிற்கு இந்த தனியார் மயமாக்கல் எதிர்மறை மாற்றமாகவே தோன்றும். ஆனால் உள்ளே சென்றால் கொஞ்சம் வித்தியாசமாகவே உள்ளது.

IRCTC IPOவாக வரும் போதே நாம் பரிந்துரை செய்து இருந்தோம். அதற்கு முக்கிய காரணமாக குறிப்பிட்டது இதன் monopoly தன்மை. ஒரு நிறுவனம் போட்டியே இல்லாமல் செயல்படுகிறது என்றால் அதுவே பாதி வெற்றி தான். பல நண்பர்களுக்கு ஏற்கனவே நல்ல ரிட்டர்ன் கொடுத்து இருக்கும் என்று நம்புகிறோம்.


IRCTC என்னவென்று பார்த்தால் Indian Railway Catering and Tourism Corporation என்பதன் சுருக்கமே.

ரயில்வே துறையில் டிக்கெட் கொடுப்பதில் இதன் 30% அளவு வருமானம் வருகிறது. ரயிலில் சாப்பாடு உபசரிப்பு Catering கொடுப்பதில் 30% வருகிறது. மீதி வருமானம் ரயில் நீர், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சுற்றுலா திட்டமிடல் போன்றவற்றின் வழியாக கிடைக்கிறது.

ஒரு தகவலுக்காக கூறுகிறோம். ரயில் நீர் வழியாக 30% லாபம் IRCTCக்கு கிடைக்கிறது. தண்ணீர் பாட்டிலில் ரயில் நீர் என்பது மிகவும் மலிவானது. ஒரு லிட்டர் 10 ரூபாய் என்று தான் நினைக்கிறோம். அதிலே 30% லாபம் என்றால் ஒரிஜினல் விலை 7 ரூபாய் தான். அப்படி என்றால் ஒரு லிட்டர் 20 ரூபாய் விற்கும் நிறுவனங்களின் கொள்ளையையும் நினைத்து பாருங்கள்.

மீண்டும் மேலே வருவோம். அரசு ரயில்வே தனியார் மயமாக்கல் என்பதை புதிதாக ரயில்கள் விடுவதில் தான் அறிவித்து உள்ளது. ஆனால் ரயிலுக்காக டிரைவர், Guard போன்ற முக்கிய பணியாளர்கள் ரயில்வே துறை தான் கட்டுக்குள் வைத்து இருக்கும். அதே போல் ரயில் தண்டவாளங்கள் கட்டமைப்பு போன்றவை ரயில்வே துறையின் கீழ் தான் இருக்கும்.

தனியார் வேலை என்னவென்றால் ரயில் இயககுவதற்கான முதலீடு மற்றும் ரயில் பராமரிப்பு செலவுகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இது போக ரயில் டிக்கெட் புக்கிங் போன்றவை IRCTCயின் கீழ் தான் இருக்கும். ரயில் டிக்கெட் புக்கிங்கில் IRCTCக்கு 85% அளவு மார்ஜின் லாபம் கிடைக்கிறது. தனியாருக்கு செல்லும் போதும் இந்த ரயில் டிக்கெட்டிங் முறையில் மாற்றம் இருக்காது என்றே நினைக்கிறோம். அந்த நிலையில் அதிக அளவு டிக்கெட் புக்கிங் ஏற்றத்தை காணலாம்.

Catering முறையில் 30% அளவு மார்ஜின் லாபம் கிடைக்கிறது. இது தனியார் ரயில் நிர்வாகத்தினர் கையில் செல்லுமா? என்று சரியாக தெரியவில்லை. அவ்வாறு தனியார் நிர்வாகத்தினர் கையில் சென்றால் இதில் ஏற்படும் இழப்பு ஆன்லைன் ரயில் டிக்கெட்டிங் வழியாக கிடைக்கும் அதிக பட்ச லாபத்தில் ஈடு செய்யப்படலாம். அப்படியே Catering  தனியாருக்கு சென்றாலும் IRCTCக்கு கமிஷன் போன்று ஏதாவது கிடைக்க வாய்ப்புள்ளது.

இது போக, ரயில் நீர் வருமானம், ரயில்வே நிலையத்தில் விற்கும் உணவு நிலையங்கள் வழியாக கிடைக்கும் குத்தகை பணத்தில் மாற்றம் இருக்காது. அதிக பயணிகள் எண்ணிக்கை கூடும் போது இதன் லாபம் கூடவே செய்யலாம்.

அதனால் ரயில்வே தனியார் மயமாக்கல் என்பது பாதிக்காமல் பலனை கொடுக்கலாம் என்றே கருதுகிறோம். பஸ், விமான டிக்கெட்டில் இருப்பது போன்று RedBus, Cleartrip போன்ற தனியார் நிறுவனங்கள் வராத வரை IRCTC  தனித்து நிற்கவே அதிக வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் தற்போது கொரோனா சீசன் இருப்பதால் இந்த வருடத்தில் வருமானம் என்பது ஒன்றுமே இருக்காது. இதனை காரணமாக வைத்து பங்கு விலைகள் கணிசமாக சரிந்தால் வாங்கி போடலாம். எதிர்காலத்தில் ரிஸ்க் இல்லாத ரிடர்ன்  தரும் ஒரு முதலீடாக இருக்க வாய்ப்புள்ளது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. I am a contractor on Railways.
    On my opinion in view, the passenger ticket collection is getting only 59% on operate of a train.else being generated by goods revenue only.
    Now goods services are with railways only. They decided the loss making passenger category only sent to private. And ticket issuing commission will very less for irctc towards maintaining the booking system. Catering only the way irctc will earn profit wisely. Any way irctc is monopoly and waiting for the correction to buy����

    பதிலளிநீக்கு