வியாழன், 16 ஜூலை, 2020

மியூச்சல் பண்ட் தேர்ந்தெடுக்க சில அடிப்படைகள்


கூகுள் வோடாபோனில் முதலீடு செய்யுமா?  என்ற கட்டுரையில் இருக்கும் சாத்தியக்குறைவுகள் பற்றி எழுதி இருந்தோம். நேற்றைய ரிலையன்ஸ் AGM மீட்டிங்கில் முகேஷ் அம்பானி கூகிள் ஜியோவில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்தார். அதனால் வோடாபோனுக்கு இனி வாய்ப்பு இல்லை என்ற சூழ்நிலையில் இன்று வோடாபோன் பங்கும் 10% விலை குறைந்துள்ளது. 

எமது முந்தைய கட்டுரை வோடாபோன் முதலீட்டில் இருந்து நண்பர்கள் வெளியேற உதவியிருக்கும் என்று நம்புகிறோம். 

அண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது உங்கள் பழைய கட்டுரைகளை தேடி பிடித்து படிப்பது கடினமாக இருக்கிறது என்று கூறி இருந்தார்.

அதன் பிறகு தான் ஆயிரம் கட்டுரைகள் இந்த தளத்தில் இருக்கும் போது அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து படிப்பதில் இருப்பதன் கஷ்டத்தை புரிந்து கொண்டோம். 



இந்த தளத்தில் உள்ள 70%க்கும் மேற்பட்ட  கட்டுரைகள் பொதுவானது தான். அதாவது படிப்பினை கட்டுரைகள் தான். அதனால் சூழ்நிலை அல்லது தொடர்பான செய்திகள் வரும் போது மேற்கோள் காட்டி எழுதுகிறோம். 

இது போக, சில முக்கியமான கட்டுரைகளை தற்போதை சூழ்நிலைக்கு தக்கவாறு மீள்பதிவு செய்து எழுதி இருக்கிறோம். அதனையும் பகிர்கிறோம்.

அதில் ஒன்று மியூச்சல் பண்ட் தொடரில் இருக்கும் ஐந்து கட்டுரைகளும். 2013ல் மியூச்சல் பண்ட் தொடர்பாக ஒரு தொடரை எழுதி இருந்தோம். அந்த கட்டுரை பயனாக இருந்தது என்பதை அறிந்து கொண்டதால் தற்போதைய சூழ்நிலைககு ஏற்றவாறு மீண்டும் எழுதி இருக்கிறோம்.

அண்மையில் எமக்கு QUORA வழியாக ஒரு கேள்வி வந்தது. அதற்காக கொடுத்த பதில் புதிதாக மியூச்சல் பண்ட் முதலீடு செய்பவர்களுக்கு பயனாக இருக்கும் என்று நம்புகிறோம். அதில் மீள்பதிவு செய்த கட்டுரைகளும் தேவைப்படும் இடத்தில இணைக்கப்பட்டுள்ளது. கீழே பார்க்க. 

கேள்வி:
பரஸ்பர நிதியை (mutual fund) எதன் அடிப்படையில் தேர்ந்து எடுக்க வேண்டும்? எப்படி ஒரு பரஸ்பர நிதியை பகுப்பாய்வு (analyse) செய்வது போன்ற ஒரு சில அடிப்படை விஷயங்கள் கூற முடியுமா?

பதில்:
பொதுவாக ஏஜென்ட்கள் சொல்லை கேட்டு அப்படியே முதலீடு செய்வது இருக்கும் சூழ்நிலையில், உங்கள் கேள்வியில் உள்ளவாறு பரஸ்பர நிதியை அடிப்படை பகுப்பாய்வு செய்வது என்பது மிக முக்கியமானது.

முதலிலே, எந்தவொரு தனிப்பட்ட மியூச்சல் பண்ட்டிற்கும் சென்று ஆய்வு நடத்தாமல் நமக்கு எது தேவை என்பதை உணர வேண்டும். மியூச்சல் பண்ட்டில் பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொருவர் வயது, தேவைக்கேற்றவாறு தகுந்த பிரிவு கொண்ட மியூச்சல் பண்டை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை விளக்கமாக எந்த மியூச்சல் பண்ட் நமக்கு தேவை? - 2 என்ற கட்டுரையில் எழுதி உள்ளோம்.

இது போக சில சுய கேள்விகளும் மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3 என்ற பதிவில் பட்டியலிடப்பட்டு உள்ளன. அதற்கு விடைகள் தேடுவதன் மூலம் 200க்கும் மேற்பட்ட மியூச்சல் பண்ட் இருப்பதை 20க்கும் குறைவான பட்டியலில் சுருக்கி கொள்ளலாம்.

அதன் பிறகு ஒவ்வொரு தனிப்பட்ட பரஸ்பர நிதியை மதிப்பிடலாம். இதற்கு முந்தைய வரலாறு, நடத்தும் நிறுவனம், மேலாளர் என்று பல குறியீடுகள் உள்ளன. அதனை அடிப்படையாக வைத்து ஒரு நிதியை தேர்ந்தெடுக்கலாம். இந்த டெக்னீகல் குறியீடு தொடர்பான மேலதிக விவரங்களுக்கு மியூச்சல் பண்ட்டை அளவிடுவது எப்படி? -4 என்ற பதிவில் பார்க்கலாம்.

கடந்த ஒரு வருட லாபம் மட்டும் பார்க்காமல் கடைசி மூன்று அல்லது ஐந்து வருடங்கள் அந்த மியூச்சல் பண்ட் சமச்சீரான ரிடர்னை கொடுத்து இருக்கிறதா? என்பதையும் கவனிப்பது அவசியம்.

இளம் வயதில் இருந்தால் DIVIDEND என்பதற்கு பதிலாக GROWTH முறையை தேர்தெடுக்கலாம். இறுதியில் ஒரு நல்ல ரிடர்ன் தொகை கிடைப்பதற்கு பெரிதும் உதவும்.

இறுதியாக ஒரே மியூச்சல் பண்டில் முதலீடு செய்யாமல் Large Cap Fund, Balanced Fund, Small Cap Fund என்று மூன்று நிதிகளில் பிரித்து போடுவது நல்லது. ஒரு நிலையான வருமானம் வருவதற்கு பெரிதும் உதவும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக