நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு IPO வெளியீடு வந்துள்ளது.
Rossari Biotech என்ற நிறுவனம் தனது IPO வெளியீட்டின் விண்ணப்பங்களை இன்று ஜூலை 13 முதல் பெற ஆரம்பித்துள்ளது. இதனை பற்றிய ஒரு விரிவான பார்வையை பார்க்கலாம்.
இந்த நிறுவனம் மார்ச் மாதத்திலே IPOவிற்கான அறிவிப்பை வெளியீட்டு இருந்தது. ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக IPO நிகழ்வை தள்ளி வைத்து இருந்தது.
தற்போது கொரோனாவிற்கு பிறகு வெளிவரும் முதல் ஐபிஓவாகும். பங்குசந்தையில் 500 கோடி அளவு பணத்தை திரட்ட உள்ளது. இந்த பணம் நிறுவனத்தின் ப்ரோமோட்டர்களுக்கு செல்கிறது.
Rossari Biotech நிறுவனத்தை பற்றி பார்ப்போம். இது ஒரு Specialty Chemical நிறுவனம். அதாவது டெக்ஸ்டைல், நுகர்வோர் பொருட்கள் போன்றவற்றிற்கான கெமிக்கல் மூலப் பொருட்களை தயாரித்து வரும் நிறுவனம். இது போக, வீட்டு வளர்ப்பு விலங்குகளுக்கான உணவு பொருட்களுக்கான மூலப் பொருட்களையும் தயாரித்து வருகிறது.
நுகர்வோர் பொருட்களில் ரிடெர்ஜென்ட், சோப்பு, பெயிண்ட், டைல்ஸ் போன்றவற்றின் மூலப்பொருட்கள் வழியாக 46% வருமானம் வருகிறது. டெக்ஸ்டைல் மூலப்பொருட்கள் வழியாக 43% வருமானம் வருகிறது. Animal nutrition பொருட்கள் வழியாக 10% வருமானம் வருகிறது.
இந்தியா போக, வியட்நாம், பங்களாதேஸ், மொரிசியஸ் என்று 18 நாடுகளில் வியாபாரம் செய்து வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானம் 200 கோடியில் இருந்து 600 கோடியாக உயர்ந்துள்ளது. லாபம் 14 கோடியில் இருந்து 65 கோடியாக உயர்ந்துள்ளது. கடனும் மிக குறைவாகவே உள்ளது.
Balance Sheet என்பதும் நல்ல நிலையிலே உள்ளது. தொழிற்சாலைகள் முழு அளவில் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பதால் மார்ஜின் நிலையிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
இந்த வளர்ச்சியின் காரணமாக ஒரு பங்கு விலை 425 ரூபாய் என்று நிர்ணயித்துள்ளது. இதனை லாபத்தின் அடிப்படையாக வைத்து பார்த்தால் Price-To-Earning(P/E) மதிப்பு 32க்கு அருகில் வருகிறது.
பங்குசந்தையில் இதே துறையில் இருக்கும் மற்ற நிறுவனங்களான Arti Industries, Vinati Organics, Fine Organics, Atul Ltd மற்றும் Galaxy Surfactants போன்ற நிறுவனங்களின் மதிப்பீடலை விட அதிகம். அதனால் பங்கு விலை மலிவானது அல்ல.
தற்போதைய கொரோனா சூழ்நிலையில் இந்த மதிப்பீடல் என்பது அதிகமே. என்ன தான் பழைய வரலாறு நன்றாக இருந்தாலும் அதே வளர்ச்சி வருங்காலங்களில் நீடிக்கும் என்பதற்கு உத்தராவதம் எதுவுமில்லை. தொழிற்சாலைகள் முழு அளவில் உபயோகப்படுத்தப்படாமல் இருந்தால் மார்ஜினும் குறைவாக செல்ல வாய்ப்பு உள்ளது.
Grey Market வெளிப்புறத்தில் 100 ரூபாய் அதிகமாகவே விற்கப்படுகிறது. ஆனால் லிஸ்ட் செய்யும் போது பங்குச்சந்தை வெளிப்புற சூழ்நிலைகளை பொறுத்து எதிர்மறை மாற்றங்கள் கூட அதிகம் நிகழ வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாகவே பங்குசந்தையில் தற்போது Mid மற்றும் Small Cap பங்குகளை தவிர்த்து வருகிறோம். பங்குச்சந்தை Secondary Market சூழ்நிலையில் பல பங்குகள் ஆராயப்பட்டு மலிவாக கிடைக்கும் சூழ்நிலையில் Rossari Biotech IPOவை தவிர்த்து விடுவது நல்லது.
நாளை மறுநாள் ஜூலை 15 அன்று IPO வெளியீடு விண்ணப்பங்கள் முடிவடைய உள்ளது.
perfect analysis. great job
பதிலளிநீக்கு