வெள்ளி, 3 ஜூலை, 2020

எட்டாவது வருடத்தில் முதலீடு தளம் ...

நண்பர்களுக்கு வணக்கம்!

2013ல் ஆரம்பிக்கப்பட்ட முதலீடு தளம் இந்த ஜூலை மாதத்தில் எட்டாவது வருடத்தை ஆரம்பிக்கிறது. தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!



முதலில் muthaleedu.blogspot.com என்ற பெயரில் சிறு முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தளம் அதன் பின் Revmuthal.com என்று பெயரில் மாற்றம் செய்யப்பட்டது.

அதில் இருக்கும் உச்சரிப்பு பிரச்சினை காரணமாக இறுதியில் Muthaleedu.IN என்ற பெயரில் இயங்க ஆரம்பித்துள்ளது.

எல்லா மாற்றங்களிலும் வாசகர்கள் உடன் இருந்த காரணத்தால் வளர்ச்சி என்பதும் மாற்றம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இது வரை 1015 பொருளாதாரம் மற்றும் முதலீடு சார்ந்த கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அதனை 28 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் பார்க்கப்பட்டுள்ளன. அதில் 1071 கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.

அதே போல் 25,000க்கும் மேற்பட்ட நண்பர்கள் Facebook, Twitter, Email போன்றவற்றில் முதலீடு தளத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

PPக்கு VV சிக்கன் ஊட்டுவதை மில்லியன் கணக்கில் பார்க்கும் இந்த காலக்கட்டத்திலும் ஒரு பொருளாதாரம் சார்ந்த தளம் இவ்வளவு வரவேற்பு பெற்றதற்கு உங்கள் வாசிப்பு தரமும் ஒரு முக்கிய காரணம்.

ஏனென்றால் எமது பல கட்டுரைகள் பாடப்புத்தகத்தில் இருப்பது போல் சூத்திரம் சார்ந்து இருந்ததுண்டு. அதற்கும் அதிக பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்கிறோம்.

மிக்க நன்றி!

இந்த கட்டுரைகள் எழுதுவது என்பது முழுநேர பணியல்ல. வேறு ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டே பகுதி நேரமாக எழுதுகிறோம். அதனால் சில மாதங்களில் பணிச்சுமை காரணமாக கட்டுரை இடைவெளி என்பதும் இருப்பதுண்டு.

அதனால் இந்த மாற்றங்களில் கட்டுரைகளை பெறுவதற்கு கீழே உள்ளே ஏதேனும் ஒன்றை தொடருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மின் அஞ்சல் வழியாகவும் கட்டுரைகளை உடனடியாக பெறலாம். கீழே படிவம் உள்ளது.



சில நண்பர்கள் உங்களது பழைய கட்டுரைகளை படிக்க முடியவில்லை. தளத்தில் தேடித் பார்ப்பது என்பது மிக கடினமாக உள்ளது என்று கூறி இருந்தார்கள். இனி நல்ல கட்டுரைகளை மீள் பதிவு செய்து ஒரு தொகுப்பாக தருகிறோம்.

இது போக Quora தளத்திலும் பதில்கள் எழுத ஆரம்பித்துள்ளோம். நல்ல வரவேற்பு இருக்கிறது. விரைவில் இந்த தளத்தில் ஒரு Forum வடிவில் தமிழ் நிதி மேலாண்மை விவாத களம் ஒன்றிற்கான சாத்தியங்களையும் ஆராய்ந்து வருகிறோம்.

கடந்த ஏழு வருடத்தில் கட்டுரைகளை பிளாக் வடிவில் எழுதி வந்தது தனிப்பட்ட முறையில் எமது Personality Development என்பதற்கு மிக அதிக அளவில் உதவி செய்து வந்துள்ளதையும் உணருகிறோம்.

பல நண்பர்களின் நட்பு, கருத்துக்களை பகிர்தல் போன்றவை தற்போது 65க்கும் மேற்பட்ட தொழில்முறை பணியாளர்களை மேலாண்மை செய்யுமளவிற்கு இந்த தளம் எம்மை உயர்த்தியுள்ளது என்றே சொல்வோம்.

அதனால் முடிந்தவரை உங்களுக்கு ஈடுபாடான பரிச்சயமான தலைப்புகளில் பதிவுகள் எழுத முயற்சி செய்யுங்கள்! நம்மை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும்.

கொரோனா என்பது சேமிப்பின், நிதி மேலாண்மையின் முக்கியத்துவத்தையும் நமக்கு தற்போது புரிய வைத்து இருக்கிறது. அதனால் முறையான திட்டமிடலை தொடருங்கள்!

எதுவாக இருந்தாலும் 2020ம் வருடம் என்பது நம்மை தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டமே.

ரத்தன் டாட்டா நிறுவனங்களுக்கு சொன்னது போல், 2020ம் வருடம் என்பது லாபம் சம்பாதிப்பதற்கான வருடம் அல்ல. நம்மை தக்க வைத்துக் கொண்டாலே அது லாபம் சம்பாதிப்பது என்பதையும் தாண்டி மேலானது என்று சொல்லி இருக்கிறார்.

அது தனி மனிதருக்கும் பொருந்தும். நமது உடல் நலன் என்பது எதையும் தாண்டி மேலானது. பாதுகாப்பாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறோம்!

நட்புடன்,
Muthaleedu.IN


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: