தற்போது இந்திய பங்குச்சந்தை 10800 NIFTY புள்ளிகளில் நின்று கொண்டு இருக்கிறது. டெக்னிகலாக இது ஒரு முக்கிய தடை புள்ளி என்று சொல்லலாம்.
கடந்த இரு வாரங்களாகவே NIFTY நிலையானது 10600 புள்ளிகள் முதல் 10800 புள்ளிகள் வரை ஊசலாடி கொண்டே தான் இருக்கிறது.
நிப்டியின் 200 DMA என்று சொல்லப்படும் 200 நாள் சராசரி நிலையான 10885 என்பது ஒரு முக்கியமான நிலையாகும். இதனை தாண்டும் போது மேலும் அதிக உயர்வை பார்க்கலாம்.
ஆனால் அந்த நிலையை தாண்டுவது எளிதல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.
கடந்த ஜூன் மாதத்தில் ம்யூச்சல் பண்ட் முதலீடுகளில் இருந்து பெருமளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் எங்கிருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது என்று பார்த்தால் Institution Investors என்ற பெரு முதலைகளிடம் இருந்து தான் வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகள் CRR போன்ற விகிதங்களை பெருமளவில் குறைத்து உள்ளது. இதன் விளைவாக பணம் அதிக அளவில் வங்கி சிஸ்டத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் தான் பங்குசந்தையில் உள்ளே வருகிறது.
அதனால் தான் நாம் முதலீடு செய்யாமல், நாட்டில் நல்லது எதுவும் நடக்காமல் பங்குச்சந்தை மட்டும் உயர்ந்து வருகிறது. இதனை Liquidity Driven Market என்று குறிப்பிடுகிறார்கள்.
அதே நேரத்தில் நிப்டியின் P/E மதிப்பை பார்த்தால் அடுத்த ஒரு வருட லாபத்தில் 20 மடங்கு அதிகமாக உள்ளது. இது பத்து வருடங்களில் இல்லாத அளவு உயர்வாக உள்ளது. அதாவது சந்தை மிகவும் Expensive என்ற நிலையில் உள்ளது என்று சொல்லலாம். ஆனால் கொரோனா மந்த நிலை நீண்ட நாள் நீடிக்காது என்று கணிக்கும் பட்சத்தில் இதனை விட்டு விடலாம்.
பார்க்க: P/E விகிதத்தால் பங்கினை எப்படி மதிப்பிடலாம்?
இந்த சூழ்நிலையில் சில நல்ல தகவல்களும் கண்ணை உறுத்தாமல் இல்லை.
ஜூன் மாத வேலை வாய்ப்பு தரவுகள் சிறிது முன்னேற்றத்தை அடைந்துள்ளது. கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலங்களான டெல்லி, மஹாராஷ்டிரா, தமிழ் நாடு போன்றவற்றில் கடந்த ஒரு வாரமாக அதிகரிப்பு விகிதம் பெரிதளவு இல்லை என்பதையும் காண முடிகிறது.
அதே நேரத்தில் கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாட்டில் 4000க்கும் குறைவாக வந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நேற்று மீண்டும் 4500க்கும் மேல் வந்து விட்டது.
அதனால் எந்த நல்ல தரவுகளையும் பார்த்தாலும் நீடித்து நிலைக்குமா? என்ற குழப்பம் அதிகமாக தான் இருக்கிறது.
தற்போது வெளிவந்த TCS, HDFC போன்ற பெரிய நிறுவனங்களின் நிதி முடிவுகள் அதிக அளவு பாதிப்பை காட்டவில்லை. TCS நிறுவனம் விரைவில் மீண்டு விடும் என்று சொல்லியுள்ளார்கள்.
இந்த நிலையில் சந்தையை பொத்தாம் பொதுவாக பார்க்காமல் துறை வாரியாக பார்த்து முதலீடு செய்வது நல்லது என்று நினைக்கிறோம்.
ஏனென்றால் சில துறைகள் கொரோனாவால் பலன் அடைந்துள்ளன. சில கொரோனாவால் விரைவில் மீண்டு வருகின்றன. சில துறைகளில் மீட்சி வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.
உதாரணத்திற்கு ஐடி துறை, நல்ல நிதி நிலையில் உள்ள சில தனியார் வங்கிகள் விரைவில் மீண்டு விடும் என்று நினைக்கிறோம். ஆட்டோ துறையில் ஒரு மறுமலர்ச்சியை காணலாம்.
அதே நேரத்தில் ஹோட்டல், உபசரிப்பு ,சுற்றுலா, பொழுது போக்கு போன்றவை மீண்டு வர நீண்ட காலம் ஆகலாம்.
ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வியாபார தன்மையின் மாறுதல்கள் மிக நீண்ட காலத்திற்கு ஒரு பயனையும் கொடுக்க போவதில்லை. ஐடி துரையின் Work From Home மாடல் பங்குசந்தையில் இருக்கும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பாதகமானது என்றே சொல்லலாம்.
இது போக கட்டமைப்பு, உலோகம், ஆற்றல் போன்றவை சார்ந்த துறைகளில் என்ன நடக்கும் என்பதை கொரோனாவை பொறுத்தே கணிக்க முடியும்.
ஆகஸ்ட் 15 அன்று இந்திய அரசு கொரோனவிற்கு மருந்து அறிமுகப்படுத்தும் என்ற வதந்தியும் சுற்றி வருகிறது. எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. இதனை எல்லாம் பொறுத்தே சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்க முடியும்.

அட்மின் அவர்களே !! நீங்கள் ஐடி துறையில் வேலை பார்ப்பதால் இந்த கேள்வியை எழுப்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக IOT துறையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. Tata Elxsi, L&T Technology services போன்ற நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக நல்ல நிலையில் வளர்ந்து வருகின்றன. இவைகள் பொதுவாக Embeded மற்றும் Engineering research development துறையில் இயங்கி வருகின்றன. கார் automation மற்றும் OTT communication மற்றும் medical devices துறைகளில் இவற்றின் வருமானம் அதிகமுள்ளது. என் கேள்வி என்னவென்றால் tcs மற்றும் இன்போசிஸ் போன்ற பெரு நிறுவனங்கள் இவற்றின் வளர்ச்சியை தடுக்க இயலுமா? இது பற்றி ஒரு கட்டுரை எழுத முடிந்தால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஇன்னும் TCS, Infosys போன்ற ஜாம்பவான்கள் web/cloud based ப்ராஜெக்ட்களில் தான் அதிக கவனம் செலுத்துவதாக கருதுகிறோம். IOT, Car Connectivity, Helathcare Devices, Embedded, VLSI போன்றவற்றில் அவர்கள் நிபுணத்துவம் குறைவு தான். ஆனாலும் எதிர்காலத்தில் வரலாம். அதே நேரத்தில் அவர்களின் குறைந்த பட்சம் ப்ராஜெக்ட் பட்ஜெட் மில்லியன்/பில்லியன் டாலர் அளவு இருக்கும். அந்த நேரத்தில் மற்ற விடங்களில் சிறிய நிறுவனங்களின் பங்களிப்பும் தேவைப்படும். பெரிய அளவு பாதிப்பு வராது என்றே கருதுகிறோம்.
நீக்கு