Flipkart லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Flipkart லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 அக்டோபர், 2015

பண்டிகை காலத்தில் அதிரடி தள்ளுபடி கொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்

ஆயுத பூஜை, தீபாவளி என்று பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் வேளையில் ஆன்லைனில் பொருட்களை விற்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளை கொடுக்க ஆரம்பித்துள்ளன.

செவ்வாய், 19 மே, 2015

சுய விருப்பத்தை நுகர்வோர் மீது திணிக்கும் ப்ளிப்கார்ட்

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக ப்ளிப்கார்ட் மாறியுள்ளது.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் ப்ளிப்கார்ட் வெற்றி

இதற்கு முன் நாணயம் விகடன் பத்திரிகை படிக்கும் போது சுயதொழில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கை எழுதி இருப்பார்கள். ஒவ்வொருவரது வாழ்க்கையை படிக்கும் போது ஒரு விடயம் பொதுவாக இருக்கும்.


அதாவது அதிக பொறுமை தேவை. உடனே யாரும் பணக்காரராகி விட முடியாது என்று தெளிவாக சொல்லி இருப்பார்கள். இது உண்மையானதாகவே இருந்தாலும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு தளர்வை கொடுக்கும் கருத்தாகவே இருக்கும்.

ஆனால் புதிய முயற்சியும் தெளிவான திட்டமிடுதலுடன் கூடிய பாதை இருந்தால் வெற்றியை சுவைக்க அவ்வளவு காலம் காத்து இருக்க தேவையில்லை என்பதை தற்போதைய ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வெற்றி சுட்டிக் காட்டுகிறது.

இதற்கு முன் பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா? என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரையை கருதிக் கொள்ளலாம்.



பின்னி பன்சால், சச்சின் பன்சால் என்ற 81ல் பிறந்த இரண்டு இளைஞர்கள் 2007ல் வெறும் 4 லட்ச முதலீட்டில் ஆரம்பித்த நிறுவனம் தான் ப்ளிப்கார்ட். ஆனால் இன்று நிறுவனத்தின் மதிப்பு 42,000 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த உயர்வை சதவீதத்தில் சொல்வதாக இருந்தால் கூட பல பூஜ்யங்களை போட வேண்டி உள்ளது.