இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக ப்ளிப்கார்ட் மாறியுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் அவர்கள் எடுக்கும் முடிவுகளால் வரும் சொதப்பல்கள் தொடரவே செய்கின்றன.
பில்லியன் டாலர் விற்பனை, நெட் சமநிலை என்று சர்ச்சைகளில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
தற்போது தனது சுய விருப்பத்தை நுகர்வோர் மீது கட்டாயமாக திணிக்கும் முடிவை எடுத்துள்ளார்கள்.
இங்கு ஒரு முடிவை எடுக்கும் போது அதனை எவ்வளவு ஆய்ந்து பார்ப்பார்கள் என்பதில் தான் சந்தேகம் வருகிறது.
ஒரு மாதம் முன்பு தங்களது கணிப்பொறி சார்ந்த இணைய தளம் மூடப்படும் என்றும் மொபைல் சார்ந்த ஆப்களை பயன்படுத்தியே பொருட்களை வாங்க வேண்டும் என்று அறிவித்தார்கள்.
என்ன நினைத்தார்களோ தெரியவில்லை.
அதனை தற்போது தாங்கள் வாங்கிய myntra தளத்திற்கு மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
இது கணினி சார்ந்த நுகர்வோர்கள் மீது கோபத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சாம்பிள் வேண்டும் என்பதற்காக எமது தளத்தின் தரவுகளையும் பார்த்தோம். இன்னும் 60% அளவு நண்பர்கள் கணினி மூலமே வந்து தளத்தை பார்வையிடுகின்றனர்.
ப்ளிப்கார்ட் சொல்வது போன்று 40% வாடிக்கையாளர்கள் மட்டும் கணினியில் வருவதாக எடுத்துக் கொண்டாலும் அந்த 40% என்பது மிகப்பெரியதாக இருக்கும்,
அவர்களை ஒரு குறுகிய காலத்தில் மொபைலை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று நிர்பந்த வைப்பது நல்ல வியாபரத்தன்மை ஆகாது.
ஏன் இந்த அளவு பத்து சதவீதம் என்று இருந்தால் கூட அவர்களை புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இன்னும் அதிக அளவில் கேட்ஜெட் பயன்படுத்துபவர்கள் கூட பணப் பரிவர்த்தனைகளுக்கு மொபைலை பயன்படுத்துவது கிடையாது. கணினி அளவு பாதுகாப்பு விடயங்கள் இன்னும் மொபைலில் வரவில்லை.
இந்த சூழ்நிலையில் ஏன் இந்த அவசர முடிவு எடுக்க வேண்டும்?
மொபைலை பயன்படுத்தும் போது பொருட்களின் விலைகளை மற்ற தளங்களின் விலைகளோடு ஒப்பிடுவது கடினம். அதனால் தான் மொபைலுக்கு மாறுகிறார்கள் என்றும் ஒரு செய்து வருகிறது.
இது உண்மை என்றால் இதனை விட மோசமான முடிவு கிடையாது என்றும் சொல்லலாம். இந்த குறிப்பே எதிர்மறை விடயமாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
தற்போது அமேசான், ஸ்னேப்டீல், ஜபாங் போன்ற நிறுவனங்கள் தாங்கள் மொபைல் மட்டும் என்ற கொள்கைக்கு போக மாட்டோம். எல்லா நுகர்வோர்களுக்கும் வாய்ப்பு வழங்குவோம் என்று கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ப்ளிப்கார்ட்டின் இழப்புகள் இந்த நிறுவனங்களுக்கு சாதகமாக மாறப் போகிறது.
மொபைல் ஆப் இல்லாத ஒருவர் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் மொபைல் ஆப் டவுன்லோட் செய்து வாங்குவாரா? அல்லது எளிதில் வெப் மூலம் கிடைக்கும் பொருளை வாங்குவாரா?
இந்த அளவு குறுகிய கால வளர்ச்சி எல்லா நிறுவனங்களுக்கும் கிடைத்திருக்குமா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அதனை ப்ளிப்கார்ட் வீணடிக்கிறது.
தொடர்புடைய பதிவு:
திருவிழாவை நடத்தி அதிருப்தியை சம்பாதித்த ப்ளிப்கார்ட்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக