செவ்வாய், 10 செப்டம்பர், 2013

தடங்கலுக்கு வருந்துகிறோம்

கடந்த 2 நாட்களாக பிளாக்கரில் ஏற்பட்ட பிரச்சினையால் பதிவிட முடியாமல் போய் விட்டது.  இது பிளாக்கர் அப்டேட்டால் வந்த பிரச்சினையாக அறியப் படுகிறது. யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தெரியப்படுத்தவும். ஒரு சின்ன பழுது பார்த்தல் மட்டும் தேவைப்படும்.

சனி, 7 செப்டம்பர், 2013

நாமும் எரிகிற வீட்டை அணைப்போம்


நாம் எம்முடைய பதிவுகளில் பல நேரங்களில் தற்போதைய மத்திய அரசை விமர்சித்துள்ளோம். ஆனால் சில அரசியல் வாதிகள், ஆட்சியாளர்கள் பண்ணும் தவறுகளால் 100 கோடி பாமர மக்களும் பாதிக்கப்படுவது கொடுமையானதே. கிட்டத்தட்ட 1991ல் இருந்த கடுமையான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

சூழ்நிலையை மிக எளிமையாக சொல்லும் ரத்தன் டாடா

ஒரு செய்தி தளத்தில் ரத்தன் டாடாவின் இந்த பேட்டி வாசிக்க நேரிட்டது. தற்போதைய இந்திய பொருளாதார சூழ்நிலையை மிக எளிமையாக கூறியுள்ளார். எமக்கு மிகவும் பிடித்திருந்ததால் பகிருகிறோம்.

"நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் கடுமையான நிதி நெருக்கடியின் போதும் இந்தியாவின் மரியாதையை உயர்த்தியவர் ஆனால் சமீப காலத்தில் நாம் அந்த மரியாதையை இழந்து விட்டோம்"

எமது ஒரு சிறிய அறிமுகம்

பல நேரங்களில் இந்த தளத்தில் எதைப் பற்றி எழுதலாம் என்று சிந்தித்து கொண்டிருக்கும் போது எமது வாசர்கள் பதிவிற்கான தலைப்பைக் கொடுத்து விடுகிறார்கள். அப்படித்  தான் இது வரை ஒரு ஐந்து பதிவுகளாவது எழுதப்பட்டிருக்கும்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

இந்திய மருந்து விலை கட்டுப்பாடு யாரை எப்படிப் பாதிக்கும்?

இந்திய அரசு கடந்த வருடம் மருந்து விலை கட்டுப்பாடு கொள்கையை(Drug Price Control Policy) அறிமுகப்படுத்தியது. அதன் படி 334 அடிப்படை மருந்துகளின் விலை 70% வரை குறைக்கப்படும்.

ஒரு இந்திய குடிமகனாக இந்த நடவடிக்கை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்க வேண்டிய நடவடிக்கை.

இது தான் இந்திய GDP வளர்ச்சி (FY14 Q1)

2013-14 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு GDP தரவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. மொத்த GDP 4.4% என்ற அளவில் வளர்ந்துள்ளது.கடந்த வருடம் இதே சமயத்தில் 4.8% என்ற அளவில் இருந்துள்ளது. 

திங்கள், 2 செப்டம்பர், 2013

தரை உயரம் குறைக்கப்படும் மகிந்திரா XUV-500

முந்தைய பதிவுகளில் ஆட்டோ பிரிவில் மகிந்திரா & மகிந்திரா(Mahindra & Mahindra) நிறுவனத்தின் பங்குகளை  பரிந்துரை செய்திருந்தோம். இந்த பதிவு இந்நிறுவனத்தின் வியாபார தொடர்புடைய ஒரு முக்கிய நடவடிக்கை பற்றிய செய்தி. அதனை பகிர்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.