பல நேரங்களில் இந்த தளத்தில் எதைப் பற்றி எழுதலாம் என்று சிந்தித்து கொண்டிருக்கும் போது எமது வாசர்கள் பதிவிற்கான தலைப்பைக் கொடுத்து விடுகிறார்கள். அப்படித் தான் இது வரை ஒரு ஐந்து பதிவுகளாவது எழுதப்பட்டிருக்கும்.
இன்று நண்பர் செங்கோவி கொடுத்த ஒரு பின்னோட்டம் இந்த பதிவிற்கு காரணமாக அமைந்துள்ளது.
இது தான் அந்த பின்னோட்டம்
செங்கோவிSeptember 5, 2013 at 11:08 PM
இன்று நண்பர் செங்கோவி கொடுத்த ஒரு பின்னோட்டம் இந்த பதிவிற்கு காரணமாக அமைந்துள்ளது.
இது தான் அந்த பின்னோட்டம்
செங்கோவிSeptember 5, 2013 at 11:08 PM
உங்களையப் பற்றிய சிறு அறிமுகப் பதிவு ஒன்று இடலாமே? (பெயர்/இருப்பிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.) உங்களுக்கு பங்குச் சந்தையில் உள்ள அனுபவம், முதலீட்டு ஆலோசகரா?...என்பது போன்று!
ஏனென்றால் உங்கள் வார்த்தையை நம்பி முதலீட்டில் இறங்க விரும்புவோர், உங்களைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை எதிர்பார்க்கலாம் இல்லியா? (உங்கள் பதிவுகளே, உங்கள் தகுதியைக் காட்டுகிறது.இருந்தாலும்...)
ஏனென்றால் உங்கள் வார்த்தையை நம்பி முதலீட்டில் இறங்க விரும்புவோர், உங்களைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை எதிர்பார்க்கலாம் இல்லியா? (உங்கள் பதிவுகளே, உங்கள் தகுதியைக் காட்டுகிறது.இருந்தாலும்...)
உண்மையில் எமது அறிமுகம் கொடுக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருந்து வந்தது. இந்த தளத்தின் முதல் பதிவும் எமது அறிமுக பதிவு தான். அதன் பிறகு வந்த கூச்ச சுபாவத்தால் அந்த பதிவினை நீக்கி விட்டேன்:).
நான் பதிவு எழுதுவது முதலில் என் மனைவிக்கும் தெரியாது. எனது பதிவை ஒரு நாள் அவரது முகநூலில் பார்த்து என்னிடம் இந்த ப்ளாக் நன்றாக இருக்கிறது என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு இப்படியே தொடரலாம் என்று முடிவு செய்தேன்.
ஆனால் நண்பரின் இன்றைய பின்னுட்டத்தை பார்த்த பிறகு கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று உடனே பதிவிட முடிவு செய்தேன்.
"Anonymous" பின்னூட்டம் போட்டாலே கோபம் வரும் போது "Anonymous" பதிவு எழுதுவதும் சரியல்ல. அதிலும் பொருளாதாரம் பற்றிய பதிவில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
இனி என்னுடைய ஒரு சிறிய அறிமுகம்.
எமக்கு பதிவிடுவதற்கு முழு சுதந்திரம் கிடைப்பதற்காக தனிப்பட்ட விவரங்களைத் தராமல் ஒரு சிறிய அறிமுகம் தருகிறேன்.
தற்போதைக்கு நாம் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர். "Fortune 500" பட்டியலில் இருபதுக்குள் வரும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். ஒரு நடுத்தர வருமான குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன்.
கடந்த எட்டு வருடமாக பங்கு சந்தை வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறேன். அதிலும் நீண்ட கால முதலீடு என்பது மிக பிடித்தமானது. தினசரி வர்த்தகம் சுத்தமாக பிடிக்காது. அதனை எம்முடைய நேரத்தை வீணாக்கும் ஒரு செயல் என்று கருதுகிறேன்.
NLC பங்கு மூலமாக பங்கு சந்தையில் நுழைந்தேன். இது வரை பங்கு சந்தையில் வருடத்திற்கு 20~30% வரை லாபம் கிடைத்து வந்துள்ளது. ஒரு பங்கை குறைந்தது இரண்டு வருடமாவது வைத்திருப்பேன். அது போல நஷ்டங்களையும் சந்தித்துள்ளேன். ஆனால் அந்த நஷ்டங்கள் சில வருடங்கள் பிறகு அல்லது மற்ற பங்குகள் மூலம் ஈடு கட்டப்பட்டது.
நாம் முதலீட்டு ஆலோசகர் கிடையாது. முதலீட்டு ஆலோசகராக வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது. சில வருடங்கள் பிறகு ஊரில் நவீன முறை விவசாயம் பண்ண வேண்டும் என்ற முயற்சியில் உள்ளேன்.
இந்த பதிவும் நாம் பரிந்துரைக்கும் பங்குகளும் எந்த வித வியாபார நோக்கம் காரணமாக இல்லை. இந்த தளம் நன்றாக போனால் அதனை ஒரு செய்தி தளமாக விரிவாக்கம் செய்யலாம் என்ற எண்ணம் மட்டுமே தற்போதைக்கு உள்ளது.
இந்த தளத்தை ஆரம்பிக்கும் முன் பங்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. எமது பெரும்பாலான பதிவுகள் பொருளாதார அலசல், முதலீடு அடிப்படை என்பதை மையப்படுத்தியே இருக்கும்.
சில நண்பர்கள் கேட்டதற்காக பங்குகளை பரிந்துரை செய்ய ஆரம்பித்தேன். பத்து பங்குகள் மட்டுமே குறைந்தது இரண்டு வருட முதலீட்டிற்கு பரிந்துரை செய்யலாம் என்று நினைக்கிறேன் . அதன் பிறகு அலசல்களே அதிகமாக இருக்கும்.
பங்குகளை பரிந்துரை செய்யும் போது முடிந்த வரை அது சம்பந்தப்பட்ட தரவுகளை அதிகமாக கொடுக்கிறேன். அதனை நீங்களும் ஒரு சுய ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள். அது சம்பந்தப்பட்ட எந்த கேள்விகளையும் பின்னூட்டமாக இடுங்கள்.
நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இது வரை எழுதியதில் நான் விரும்பும், அதே நேரத்தில் மற்றவர்களுக்கு அதிகம் பயன்படும் பதிவாக இந்த பதிவை நினைக்கிறேன்.
இப்படிப் பதிவு எழுதுவது முகம் தெரியாத நண்பர்களை அறிமுகம் செய்வது முதல் எமது தனிப்பட்ட மன அழுத்தத்தை போக்கும் கருவியாக இருப்பதால் ஆர்வமுடன் ஈடுபட விரும்புகிறேன்.
முடிவாக எம்மை பற்றி ஒரு சுய அறிமுகம் செய்ய வாய்ப்பு வழங்கிய நண்பர்
செங்கோவி அவர்களுக்கு நன்றிகள்! எனது சுய அறிமுகம் அறிய விரும்பும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிவதில் அதை விட மகிழ்ச்சி!
English Summary:
Self Introduction about myself..
Self Introduction about myself..
Thanks for your introduction and sharing the info on the purpose of starting a blog.
பதிலளிநீக்குJAN
Thanks sago for your comments!
நீக்கு
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நன்றி நண்பரே...தொடர்ந்து கலக்குங்கள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே! நீங்கள் தான் இந்த பதிவை தூண்டியது!
நீக்குReally nice to hear about you and as a starting point of anybody who would like to enter share market, i think you are making it as useful one..simple words & small /detailed information. Keep going..
பதிலளிநீக்குIt's nice to hear these kind of appreciation..Thanks sri appa::)!
நீக்குHello,
பதிலளிநீக்குI am able to read this article only today. Thanks. All the best. Do this as a service. Your prediction / analysis may not always be correct /as anticipatd. For that matter, do not stop writing the articles. Ensure that the analysis / intention is always bonafide. Again, all the best.
Yes. Ganesh. Some problem in the site for 3 days. Sure. I will continue this as service. I am trying to keep my analysis more reliable. Thanks for your comments!
நீக்கு