முந்தைய பதிவுகளில் ஆட்டோ பிரிவில் மகிந்திரா & மகிந்திரா(Mahindra & Mahindra) நிறுவனத்தின் பங்குகளை பரிந்துரை செய்திருந்தோம். இந்த பதிவு இந்நிறுவனத்தின் வியாபார தொடர்புடைய ஒரு முக்கிய நடவடிக்கை பற்றிய செய்தி. அதனை பகிர்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இது தொடர்பான பதிவுகள்:
பங்கு ஒரு பார்வை: மகிந்திரா-மகிந்திரா
டிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா
இந்த வருட பட்ஜெட்டில் SUV(Sports Utility Vehicle) என்று சொல்லப்படும் ஆடம்பர கார்களுக்கு மத்திய அரசு 3% அதிக வரி விதித்தது.
இந்த விதிமுறை 4 மீட்டர் நீளமும், 1500 CC என்ஜின் சக்தியும், 170mm தரையிலிருந்து(Ground Clearance) உயரமுள்ள கார்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் மகிந்திரா நிறுவனத்தின் XUV-500, ஸ்கார்பியோ(Scorpoio), போலேரோ(Polero) கார்கள் இந்த பிரிவுக்குள் வந்தன. இந்த கார்களின் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போழுது முதல் கட்டமாக மகிந்திரா நிறுவனம் XUV-500 காரின் தரை உயரத்தை 200mmலிருந்து 170mm ஆக குறைக்க உள்ளது. இதனால் இந்த காரின் விலை 30000 ரூபாய் வரை குறைய உள்ளது. தற்போது XUV-500 12 லட்சத்துக்கு விற்கப்படுகிறது.
XUV-500 கார் விற்பனை கடந்த காலாண்டில் மட்டும் 44% குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் போல் ஸ்கார்பியோ, போலேரோ கார்களுக்கும் உள்ள சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறது.
இந்த நடவடிக்கை மகிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனையை அதிகரிக்க பெரிதும் உதவி செய்யும் என்றும் நம்பப்படுகிறது.
English Summary:
Mahindra XUV height is decreased to get Tax benefits.

I appreciate your efforts. Keep rocking.
பதிலளிநீக்குதங்கள் கருத்துகளுக்கு நன்றி!
நீக்கு