வெள்ளி, 11 அக்டோபர், 2013

தஞ்சாவூரை சேர்ந்த ஒரு இளம் சாதனைத் தமிழர்

"The Weekend Leader" பத்திரிக்கை மூலமாக 23 வயது ஒரு இளம் சாதனை தமிழரைப் பற்றி அறிய முடிந்தது. அவர் தஞ்சாவூரை சேர்ந்த பிரபாகரன் என்ற இளம் உயிர் தொழில்நுட்ப (Bio-Technology) விஞ்ஞானி.

அதன் பின் அவரிடம் மேலும் தகவல்கள் அறிவதற்காக தொடர்பு கொண்டோம். அவரைப் பற்றிய கட்டுரைகள் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்று பலவேறு மொழிகளில் வந்திருப்பதை பகிர்ந்து கொண்டார்.

அவரைப் பற்றி இங்கு எழுதுவது நமக்கு பயனாகவும், அவருக்கு உற்சாகமாகவும் இருக்கும்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

Mahindra பங்கு: சில நல்ல செய்திகள்

கடந்த ஆறு மாதமாக இந்திய பங்குச் சந்தையில் வாகன துறையும், வங்கித் துறையும் பயங்கர வீழ்ச்சி கண்டு வந்தன. தற்பொழுது நிலைமை ஓரளவு மாறத் தொடங்கியதாக எதிர் பார்க்கப்படுகிறது.

தொடர்பான பதிவு:
பங்கு ஒரு பார்வை: மகிந்திரா & மகிந்திரா

நாம் எமது பங்கு பரிந்துரையில் Mahindra & Mahindra நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம். அதனால் தற்போதைய மாற்றம் இந்த பங்கிலும் எதிரொலிக்கும் என்று நினைக்கிறோம்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

ரகுராம் ராஜன் அறிக்கை நியாயம் தானா?

கடந்த வாரம் RBI கவர்னர் ரகுராம் ராஜன் அவர்கள் தலைமயில் அமைக்கப்பட்ட ஒரு குழு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் ஒரு புதிய முறையை நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.

அதன்படி அவர்கள் மாநிலங்களை வளர்ச்சியின் அடிப்படையில் பிரித்துள்ளார்கள். பீகார், உத்திரப்ரதேசம் போன்ற சில மாநிலங்கள் மிக குறைவான வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் என்றும், அடுத்து ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் குறைவான வளர்ச்சி அடைந்தவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன,

வெள்ளி, 4 அக்டோபர், 2013

பங்கு ஒரு பார்வை: Finolex Cables

நாம் பரிந்துரை செய்த பங்குகளில் Britannia ஒரு மாதத்தில் 15% வரை லாபம் கொடுத்து இருப்பது மகிழ்ச்சி. நாம் நீண்ட கால நோக்கில் பரிந்துரை செய்தது. அதனால் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

விரைவில் பங்கு விலை ஆயிரம் தாண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அடுத்த மாதம் காலாண்டு முடிவுகள் வந்த பிறகு அதன் நிதி நிலை செய்திகளை பகிர்கிறோம்.

நமது போர்ட் போலியோவின் அடுத்த பங்காக Finolex Cables என்ற பங்கை இந்த பதிவில் பரிந்துரைக்கிறோம்.

வியாழன், 3 அக்டோபர், 2013

கொஞ்சம் சிரிக்கலாம்

சீரியஸ்ஸா போன நம்ம பதிவுகளுக்கு ஒரு சின்ன பிரேக்.

மன்மோகன் ஜிங்கு உண்மையிலேயே ராசிக்காரர்தான்.அமெரிக்க டாலருக்கு நிகரா இந்திய ரூபாய் மதிப்பு சரியுது என நாம கவலைப் பட்டுக்கொண்டிருந்தோம்.நம்ம சிங்கம் அமெரிக்காவுக்கு லேட்டஸ்ட்டா போய்ட்டு வந்தது.இப்போ அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் காணுது!

புதன், 2 அக்டோபர், 2013

இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட் (2)

பதிவு பெரிதாகி விட்டதால் கடந்த பதிவை இரண்டாக பிரித்து இருந்தோம். அதனுடைய தொடர்ச்சி இந்த பதிவு..

முந்தைய பதிவினைக் காண,
இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட்

கடந்த பதிவில் வாரன் பப்பெட் வாழ்வின் முதல் கட்டத்தைப் பார்த்தோம். இந்த பதிவில் அவரது அசுர வேக வளர்ச்சியைப் பற்றிய விடயங்கள் தொடர்கிறது.

இப்படி Berkshire Hathaway நிறுவனம் தொடங்கி அடுத்த பத்து ஆண்டுகளில் வாரன் பஃபட் முதலீடு மதிப்பு 1100% சதவீதம் அதிகரித்தது. இப்படி தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது.

இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட்

பங்குச் சந்தை என்றாலே சூதாட்டம் என்று பலர் ஒதுங்கிய காலத்தில்., இல்லை அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு என்று சொல்லி, அதை நிருபித்து பணமும் சம்பாதித்து காட்டியவர் வாரன் பஃபட்.

இவர் தான் இருபதாம் நூற்றாண்டின் பணக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். 100 டாலரில் முதலீடை ஆரம்பித்து இன்று பல பில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார்.