திங்கள், 17 மார்ச், 2014

பங்குகளை விற்கும் போது இதனை மறவாதீர்..(ப.ஆ- 7)

இந்தக் கட்டுரை பங்கு வர்த்தகத்தின் போது முதலீட்டாளர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணங்களைப் பற்றி விரிவாகப் பகிர்கிறது.


நீண்ட நாட்களுக்கு பிறகு 'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரை மீண்டும் தொடர்கிறோம். இந்த தொடரின் தனமையானது கிட்டத்தட்ட 'தினத்தந்தி சிந்துபாத்' கதை மாதிரி தான். முற்றுப் பெறுவது மிகக் கடினம்.

அதனால் நண்பர்களுக்கு திகட்டல் வராத அளவு வேறு பகுதிகளையும் அவ்வப்போது தொட்டு இதனையும் தொடகிறோம்.

இந்த தொடரின் கடந்த பதிவுகளில், டிமேட் கணக்கு என்பது என்ன? அதனை எவ்வாறு ஆரம்பிக்க? எப்படி பயன்படுத்துவது? என்ற தலைப்புகளில் தொடரை எழுதி இருந்தோம்.

இந்த பதிவுகளை இங்கு பார்க்கலாம்.

டிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது? (ப.ஆ - 5)

டிமேட் கணக்கு எவ்வாறு ஆரம்பிக்க?(ப.ஆ- 6)


தற்போது அதன் தொடர்ச்சியாக டிமேட் கணக்குகளில் பிடிக்கப்படும் சில கட்டண விகிதங்களைப் பற்றி பார்ப்போம்.



இந்த கட்டுரை மிக அவசியமாது என்று கருதுகிறோம். ஏனென்றால் டிமேட் சேவை வழங்கும் தரகர்கள் கட்டணங்கள் பற்றிய விவரங்களை  ஓரிடத்தில் எளிதில் புரியாத வகையில் அழகாக மறைத்து வைத்து இருப்பார்கள்.

அதனை  நாமும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் சில சமயங்களில் நஷ்டத்தையும் லாபம் என்று கருதிக் கொண்டு இருப்போம்.

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டால் புரிவது எளிதாக இருக்கும்.

கணேசன் என்பவர் 1000 ரூபாய்க்கு பங்குகளை வாங்குகிறார். சில நாட்கள் பிறகு அவரது பங்கு முதலீட்டின் மதிப்பு 1005 ரூபாயாக மாறுகிறது. அப்படி என்றால் அவர் ஐந்து ரூபாய் லாபம் அடைந்து இருக்கிறார் என்று கருத முடியுமா?

முடியாது..

ஏனென்றால் அவர் பங்குகளை வாங்கும் போதும் விற்கும் போதும் சில கட்டணங்களை அரசுக்கும் டிமேட் சேவை தருபவர்களுக்கும் செலுத்த வேண்டி இருக்கும். இந்த கட்டணங்களையும் லாபத்தைக் கணக்கிடும் போது உள்ளடக்க வேண்டும். இல்லையென்றால்  மிகக் குறைந்த அளவு லாபத்தில் விற்கப்படும் பங்குகள் நஷ்டமாக மாறி விடும்.

கீழ் உள்ள அட்டவணையில் தற்போது மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பெறப்படும் கட்டணங்களை பட்டியலிட்டு உள்ளோம்.

பெரிதாகத் தெரிய சொடுக்கவும் 

மேல் உள்ளவற்றில் Brokerage Charges தவிர மீதியனைத்தும் எல்லா  முதலீட்டார்களுக்கும் பொதுவானது. Brokerage Charges மட்டும் டிமேட் சேவை தருபவர்களைப் பொருத்து  மாறுபடும்.

மேலே உள்ள பட்டியலின் படி, ஒவ்வொரு பணப் பரிமாற்றத்துக்கும் மொத்தமாக 0.52% என்பது கட்டணமாக நம்மிடம் பிடிக்கப்படுகிறது.

அப்படி என்றால்,
ஒவ்வொரு பங்கு வர்த்தகத்தின் போது இரண்டு விதமான பணப் பரிமாற்றம் நடக்கும். ஒன்று வாங்கல், மற்றொன்று விற்றல்.

இந்த இரண்டு பணப் பரிமாற்றத்துக்கும் மொத்தமாக நாம் 0.52% * 2 = 1.04% என்ற அளவு கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்.

தற்பொழுது மீண்டும் 'கணேசன்' உதாரணத்துக்கு செல்வோம்.

கணேசன் ஐந்து ரூபாய் லாபம் அடைந்துள்ளார்.

ஆனால் அவர் 1000 ரூபாய்க்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் 10 ரூபாய்.

அதாவது, 1000*1.04% = 10 ரூபாய்.

மொத்த பங்கு முதலீட்டு தொகை = 1000 + 10 = 1010 ரூபாய்.

ஆனால் பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த தொகை = 1005 ரூபாய்.

அப்படி என்றால் கணேசன் ஐந்து ரூபாய் நஷ்டம் அடைந்து உள்ளார்.

இந்த நஷ்டம் மறைந்து காணப்படுவதால் பலர் கண்டு கொள்வதில்லை. ஆனால் அடிக்கடி பங்குகளை வாங்கி குறைந்த லாபத்தில் விற்பவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால் தான் ICICI Direct, ShareKhan போன்ற டிமேட் தரகர்கள் அடிக்கடி ட்ரேடிங் பண்ணுவதை உற்சாகப்படுத்துவார்கள்.

அவர்களது பரிந்துரை பட்டியலில் நீண்ட கால முதலீட்டிற்கான பங்குகள் இருக்காது. தின வர்த்தகம், குறைந்த கால வர்த்தகம் போன்றவை தொடர்பான பரிந்துரைகளே அதிகமாக இருக்கும். இதன் மூலம் அவர்களுக்கு அதிக கட்டணங்கள் வசூலாகும்.

இதனால் முதலீட்டாலர்களாகிய நாம் குறைந்த பட்சம் 10% லாபத்தை உறுதி செய்த பிறகு பங்குகளை விற்பது நமக்கு அதிக பலன் தரும்.

தோராயமாக நமது முதலீட்டின் ஒரு சதவீதத்தைக் கழித்து  விட்டு லாபத்தைக் கணக்கிடுங்கள்.

அடுத்த பதிவில் பல தரப்பு பங்கு தரகர்களின் கட்டண விவரங்களை ஒப்பீட்டுப் பார்க்கலாம்.

'பங்குச்சந்தை ஆரம்பம்' என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

English Summary:
Demat account charges and service charges to be considered while calculating profit in stock investments.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

5 கருத்துகள்: