தற்போதைய பங்குச்சந்தை உயர்விற்கு எமது முந்தைய சந்தேகத்தில் நிற்கும் சந்தை கட்டுரையில் Liquidity Driven Market என்பதையும் குறிப்பிட்டு
இருந்தோம்.
அதன்படி பார்த்தாலும் கடந்த ஜூனில் நிகரமாக 2500 கோடி அளவு FIIகள்
வாங்கியுள்ளனர். தற்போதைய ஜூலையில் நேற்று வரை 3500 கோடி அளவு FIIகள் வாங்கியுள்ளனர்.
Bull Market என்பதில் கடந்த கால வரலாற்றை ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிய
தொகையல்ல. ஆனாலும் சந்தை ஏன் உயர்கிறது என்று பார்த்தால் அங்கு Robinhood
Investors என்று சொல்லப்படும் புதிய முதலீட்டாளர்கள் வந்து நிற்கின்றனர்.
முதலில் Robinhood Investors யார் என்று பார்ப்போம்.
அமெரிக்காவை பொறுத்தவரை பங்குச்சந்தை முதலீடு என்பது மிகவும் காஸ்டிலியானது.
ஆமாம். ஒரு 50$மதிப்புடைய பங்கு வாங்குவதற்கு 10$ புரோக்கர் கமிஷன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. நமது முதலீட்டில் 20% அளவு கமிஷனாக போகும்
போது ஆரம்பத்திலே முதலீட்டின் ஒரு பகுதி சென்று விடுகிறது. அதனை மீட்டு எடுப்பதே
ஒரு பெரிய வேலை.
இந்த சமயத்தில் தான் அமெரிக்காவில் 2014ம் வருடத்தில் Robinhood என்ற Stock
Brokerage நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். இருப்பவர்களிடம்
இருந்து இல்லாதவர்களுக்கு கொடுப்பது தான்
பிரபலமான ராபின்ஹூட் அவர்களது வேலை. அது போல் இந்த நிறுவனத்தில் Retail Investors
என்ற சில்லறை முதலீட்டாளர்களுக்கு மலிவாக பங்கு வாங்கும் வசதியை உருவாக்குவதே
இதன் முக்கிய நோக்கம். இந்தியாவில் நமது Zerodha புரோக்கர் நிறுவனத்திற்கு முன்னோடி என்றும் சொல்லி கொள்ளலாம்.