செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பங்கு முதலீட்டு வரி விலக்கிற்கு காலத்தை உயர்த்த திட்டமிட்டமிடும் அரசு

இந்த செய்தி பங்குச்சந்தையை முதலீடு என்ற பார்வையில் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும்.


பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு இரண்டு விதமாக வரிப் பலன்கள் கிடைப்பதுண்டு.



ஒன்று, ஒரு வருடத்திற்குள் பங்குகளில் முதலீடு செய்து விற்று விட்டால் 15% அளவில் கிடைக்கும் லாபத்திற்கு STCG என்ற பெயரில் வரி கட்ட வேண்டும்.

அதே நேரத்தில் இரண்டாவதாக, ஒரு வருடத்திற்கு மேல் பங்குச்சந்தை முதலீடுகளை வைத்து இருந்தால் LTCG என்ற பெயரில் வரி எதுவும் கட்ட வேண்டிய தேவையில்லை.

இதனால் ஒரு வருடத்திற்கு மேல் பங்குகளை வைத்து இருப்பவர்களுக்கு லாபம் என்பது முழுமையாக கிடைத்து விடுகிறது.

ஆனால், அரசு இந்த வருட பட்ஜெட்டில் மேல் சொன்ன வரிப் பலன்களில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதாக யூகங்கள் உலா வருகிறது.

இதன்படி, ஒரு வருடத்திற்கு மேல் என்பதற்கு பதிலாக மூன்று வருடம் என்று மாற்றத் திட்டமிட்டுள்ளது

அதாவது இனி மூன்று வருடங்களுக்கு மேல் வைத்து இருந்தால் தான் லாபத்திற்கு வரி கட்ட வேண்டிய தேவை இருக்காது.

பிற வளர்ந்த நாடுகளில் மூன்று வருடங்கள் என்பது தான் LTCG வரி விலக்கிற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதனைத் தான் இந்திய அரசும் அடிப்படையாக எடுத்துக் கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்.

பொதுவாக பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் பங்குகளை மூன்று வருடத்திற்கு மேல் வைத்துக் கொள்வது கிடையாது.

அந்த சூழ்நிலையில் இந்த முடிவு என்பது முதலீடு என்ற பார்வையில் உள்ளவர்களுக்கு பாதகமாகவே அமையும்.

தற்போது தான் இந்தியாவில் பலர் பங்குச்சந்தை முதலீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வரிப் பலன்களை கொடுத்து ஆதரிக்க வேண்டிய நேரமிது. அந்த நிலையில் இப்படிப்பட்ட முடிவுகள் என்பது தேவையில்லாத ஒன்று.

இந்த முடிவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் சரி சம விகிதத்தில் இருப்பதால் வராமல் போகவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வந்தால் அதனை மிகவும் மகிழ்வான செய்தியாக கருதலாம்.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக