திங்கள், 1 பிப்ரவரி, 2016

Team Lease ஐபிஒவை வாங்கலாமா?

Team Lease என்ற இ-காமர்ஸ் நிறுவனத்தின் ஐபிஒ நாளை (பெப்ரவரி 2, 2016) அன்று வெளிவருகிறது.

இந்த ஐபிஒவை வாங்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
Team Lease நிறுவனத்தின் வியாபாரத்  தன்மையும் Naukri போன்ற வேலைவாய்ப்பு தளங்களை போல் தான் அமைகிறது.

ஆனால்அவற்றில் இருந்து தற்காலிக பணியாளர்களை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு தேவையான பயிற்சி கொடுத்தல் போன்ற பணிகளையும் கூடுதலாக மேற்கொண்டு வருகிறது.

இது வேலை வழங்குபவர்களுக்கும், தேடுபவர்களுக்கும் இடையே ஒரு எளிதான இணைப்பு பிளாட்பார்ம் போன்று இருப்பதால் வருடத்திற்கு 30% என்ற வீதத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் Team Lease நிறுவனத்தின் வளர்ச்சி இருந்து வந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்த்தால் ஸ்டார்ட் அப் நஷ்டம் என்பதில் இருந்து மாறி கடைசி இரண்டு ஆண்டுகளாக லாப பாதையை அடைந்துள்ளது.

அதிக அளவு மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்றதொரு நாட்டில் இந்த மாதிரியான ஆன்லைன் தளங்கள் இன்னும் அதிக வளர்ச்சி அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

இதெல்லாம் இந்த நிறுவனத்தின் சாதகமான விடயங்கள் என்று கருதிக் கொள்ளலாம்.ஆனால் இதே துறையில் பல நிறுவனங்கள் நுழைந்து இருப்பதும், அவற்றின் மூலம் ஏற்பட்டிருக்கும் கடுமையான போட்டியும் லாப மார்ஜினை அதிக அளவு குறைக்க செய்கின்றன.

இது வியாபார ரீதியான ஒரு முக்கியமான பாதகமான விடயம்.

அதே நேரத்தில் ஒரு பங்கின் விலையை 785 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளார்கள்.

இதனை கடந்த ஒரு ஆண்டில் Team Lease நிறுவனம் அடைந்த லாபத்துடன் ஒப்பீட்டால் P/E மதிப்பு 49க்கு அருகில் வருகிறது.

அதே நேரத்தில் உலக அளவில் இதே துறையில் இருக்கும் நிறுவனங்களை பார்த்தால் P/E மதிப்பு 33க்கு அருகில் தான் வருகிறது.

அதனால் நல்ல நிறுவனம், நல்ல வியாபர ஐடியா, எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி போன்ற நல்ல விடயங்களை தாண்டி அதிகப்படியான பங்கு விலை இந்த ஐபிஒவை வாங்குவதை தடுக்கிறது.

இந்த ஐபிஒவைத் தவிர்க்க முயற்சிக்கலாம். அதே நேரத்தில் பங்குச்சந்தைக்கு வந்த பிறகு பங்கு விலை நன்கு குறையுமாயின் முதலீடு செய்ய முயற்சிக்கலாம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக