ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

Quick Heal IPOவை வாங்கலாமா?

கடந்த வாரம் Team Lease என்ற நிறுவனத்தின் IPO வெளிவந்தது. அது தொடர்பான நமது பார்வையை பகிர்ந்து இருந்தோம்.

பார்க்க: Team Lease ஐபிஒவை வாங்கலாமா?


நாளை (பிப்ரவரி 08, 2016) Quick Heal என்ற மென்பொருள் நிறுவனத்தின் ஐபிஒ வெளிவருகிறது. அதனை வாங்கலாமா? என்பது பற்றி பார்ப்போம்.



Quick Heal என்பது ஆண்டி வைரஸ் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஒரு சில இந்திய நிறுவனங்களில் ஒன்று.

இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் ஒரு சாதாராண கணினி ஹார்ட்வேர் சர்வீஸ் துறையில் இருந்து இன்று இந்திய சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஆண்டி வைரஸ் நிறுவனமாக உயர்ந்து உள்ளார்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது.

இந்திய சந்தையில் Quick Heal 30% சந்தையை பிடித்து முதல் இடத்தில் உள்ளது என்பதும் ஒரு முக்கியமான விடயம்.



நிதி அறிக்கையைப் பார்த்தால் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து 15%க்கும் மேற்பட்ட விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஆனால் தற்போது உலக ஆண்டி வைரஸ் நிறுவனங்களும் இந்தியா பக்கம் பார்வையை திருப்பி உள்ளதால் ஒரு கடுமையான போட்டி சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால் இந்த நிறுவனத்தின் விளம்பரம், விஸ்தரிப்பு போன்ற செலவுகளும் கூடியுள்ளதால் லாப மார்ஜின் சிறிது குறைந்துள்ளது. ஆனாலும் இன்னும் உள்ள 18% மார்ஜின் என்பது குறைவானதல்ல என்றே கருதலாம்.

இந்தியாவில் அதிக அளவில் இன்டர்நெட் பயன்பாடு கூடி வருவது Quick Heal போன்ற நிறுவனங்களுக்கு சாதகமான விடயமாகும். அதிலும் டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, போன்றவை இந்த நிறுவனத்திற்கு சாதகமான ஒன்று.

அதனால் இதே வேகத்தில் இன்னும் விற்பனை வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.



Infosys, Wipro என்று பல மென்பொருள் நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் உள்ளன. ஆனால் இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் மென்பொருள் சேவை துறையிலே ஈடுபட்டு வருகின்றன.

Quick Heal தான் மென்பொருளை சொந்தமாக தயாரிக்கும் முதல் ஆண்டி வைரஸ் நிறுவனமாக பங்குச்சந்தைக்குள் வருகிறது. அதனால் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பீட முடியாது.

ஆனாலும் அவர்கள் குறிப்பிட்ட பங்கு விலையான 321 ரூபாய் என்பது கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. இதில் இருந்து பார்த்தால் P/E மதிப்பு நாற்பதுக்கு அருகில் வருகிறது.

இந்த மதிப்பில் பார்த்தால் பங்கு விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் குறைவே.

அதனால் Quick Heal IPOவை தவிர்க்கலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: