வியாழன், 1 ஜூன், 2017

மாட்டு இறைச்சிக்கு தடை, எந்த பங்குகளை பாதிக்கலாம்?

தற்போது மோடி அரசு மாட்டினை இறைச்சிக்கு விற்பனை செய்வதை தடை செய்துள்ளது. அதாவது மறைமுகமாக, மாட்டு இறைச்சி உண்பதை தடை செய்து உள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.


தனி மனிதனின் உணவு பழக்க வழக்கங்களில் ஒரு ஜனநாயக அரசு எந்த அளவு தலையிட முடியும் என்பதில் அளவுகோல் குழப்பங்கள் நிறையவே வருகின்றன.



தனிப்பட்ட முறையில் இந்த தடை தேவையில்லை என்று மனம் சொல்கிறது. ஆனால் அரசியல் சார்பு இல்லாத இந்த தளத்தில் முதலீட்டு பார்வையில் பார்ப்போம்.

இந்த தடை என்ன சொல்கிறது என்றால், இறைச்சிக்காக மாட்டினை விற்க கூடாது. அப்படி என்றால் தோலுக்காகவே, ஏற்றுமதிக்காகவோ விற்க முடியும்.

இதனால் மற்ற பயன்பாடுகளுக்கு அதிக அளவில் சப்ளை வர வாய்ப்பு உள்ளது. டிமேண்ட் - சப்ளை தியரி படி பார்த்தால் இந்த நிறுவனங்களுக்கு மூலப் பொருட்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

அடுத்து, மாட்டினை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் என்று பார்த்தால் பால் மற்றும் பால் சார்ந்த பேக்கரி நிறுவனங்கள் தான்.

பொதுவாக பால் நின்று போன பசுக்கள் தான் சந்தையில் இறைச்சிக்காக விற்பனைக்கு வருகின்றன. அந்த விற்பனை மூலம் பசுவினை வளர்க்கும் விவசாயி இறுதி கட்ட பலனை பெறுகிறான்.

உதாரனத்திற்கு மகாராஷ்டிராவில் கடந்த வருடம் மாட்டு இறைச்சி தடை வந்த போது, 70,000 ரூபாய்க்கு விற்ற மாடுகள் 30,000 ரூபாய்க்கு விலைக்கு போயின.

இந்த நஷ்டத்தினை அந்த விவசாயி எப்படி சமநிலைப் படுத்த முடியும் என்று பார்த்தால் பாலில் தான்.

அதனால் மோடியின் உத்தரவு நீதி மன்ற படிக்கட்டுகளையும் தாண்டி நிற்கும் நிலையில் பால் விலை மேலும் கூடினாலும் ஆச்சர்யம் இல்லை.

அவ்வாறு பால் விலை கூடினால் பால் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை விற்பனை செய்யும் Hetirage Foods போன்ற Dairy நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

இது போக, பாலினை மூலப் பொருட்களாக கொண்ட பிஸ்கட் நிறுவனங்களுக்கு கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

முதலீட்டு முறையில் பார்த்தால் இந்த நிறுவனங்களை தவிர்க்கலாம். மற்ற படி, F&O முறையில் வர்த்தகம் செயபவர்கள் இந்த நிறுவனங்களில் PUT முறையில் பலன் பெற முடியும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக