வெள்ளி, 16 ஜூன், 2017

CDSL IPO பங்கை வாங்கலாமா?

வரும் ஜூன் 19 முதல் CDSL நிறுவனத்தின் IPO பங்கு வெளிவருகிறது.


CDSL என்பது BSE என்று சொல்லப்படும் மும்பை பங்குச்சந்தை வர்த்தக நிறுவனத்தின் துணை நிறுவனம் தான். இதன் விரிவாக்கம் Central Depository Services (India) Ltd,



இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சென்று பார்த்தால் எல்லா பங்குச்சந்தை வர்த்தகங்களும் காகிதத்திலே தான் நடக்கும்.

இதனால் தேவையற்ற தாமதங்கள், ஏகப்பட்ட முறைகேடுகள், அதிக அளவு புரோக்கர் கட்டணங்கள் என்று எதிர்மறை விடயங்கள் அதிகம் இருந்தன.

அதில் இருந்து மாறுவதற்காக தான் எலெக்ட்ரானிக்ஸ் வடிவத்தில் பங்கு பரிமாற்றங்கள் மாற்றப்பட்டது.

அப்பொழுது உருவாக்கப்பட்டது தான் CDSL நிறுவனம்.

நாம் டிமேட் கணக்கு துவங்கும் போது கொடுக்கும் விவரங்கள், பங்கு பரிமாற்றம் பற்றிய தகவல்கள் இந்த மைய சர்வரில் தான் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும்.

அந்த நிறுவனத்தின் ஒரு பகுதி தான் தற்போது ஐபிஒவாக வெளிவருகிறது. 500 கோடி அளவு பணம் சந்தையில் திரட்டப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் வருமானம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பங்கு முதலீட்டாளர்கள், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் என்று பல வழிகளில் வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக வருடந்தோறும் 15% அளவில் வருமானம் உயர்ந்து வருகிறது. லாபமும் அதே விகித்தில் கூடி வருகிறது.

P/E மதிப்பை பார்த்தால் 18க்கு அருகிலும், P/B மதிப்பு 2.9 என்றும் வருகிறது.

இதே போன்று பங்கு இது வரை பட்டியலிடப்படாததால் ஒப்பீடு செய்ய முடியாது. ஆனால் மேலே சொன்ன தரவுகள் பங்கினை நல்ல மதிப்பீடலில் காட்டுகிறது.

இதனால் CDSL ஐபிஒவை பரிந்துரை செய்கிறோம்.

ஒரு பங்கின் மதிப்பு 145 முதல் 149 வரை நிர்ணயித்துள்ளார்கள். 149 ரூபாய்க்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஜூன் 21, 2017.

இந்த ஐபிஒ பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஐபிஒ. அதனால் அதிக அளவு விண்ணப்பங்கள் வரலாம். கிடைப்பது கடினம் என்றாலும் முயற்சி செய்யலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக