ஞாயிறு, 4 ஜூன், 2017

PAN எண்ணை ஆதாருடன் எவ்வாறு இணைப்பது?

மத்திய அரசின் வருமான வரித் துறை அணைத்து வங்கி கணக்குகளை ஆதாருடன் இணைத்து வருகிறது.


இந்த நேரம் ஆதார் எண் இணைக்கப்படாத வங்கி கணக்குகள் ஆக்டிவ் நிலையில் இருந்து மாறி இருக்கலாம். அவ்வாறு இருப்பின் தொடர்புடைய வங்கி கிளையை அணுக வேண்டும்.அடுத்து, PAN எண்ணை ஆதாருடன் இணைக்க வருமான வரித்துறை உத்தரவிட்டு உள்ளது.

அவ்வாறு இணைக்காவிட்டால் இந்த வருடம் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ய முடியாது என்பது குறிப்பிட்டத்தக்கது.

ஆதார் எண்ணை இணைப்பதற்கு இரு வழிகள் உள்ளன.


முதல் வழி எளிமையானது. 

PAN அட்டையில் இருக்கும் பெயரும், ஆதாரில் இருக்கும் பெயரும் ஒன்றாக இருந்து விட்டால் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

www.incometaxindiaefiling.gov.in என்ற வருமான வரி தளத்திற்கு சென்று Link Aadhaar என்ற இணைப்பை சொடுக்கவும்.

அதில் கீழ் உள்ளவாறு வரும் திரையில் திரை PAN எண், ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணில் உள்ள பெயர் போன்றவற்றை உள்ளீடாக கொடுக்கவும்.இரு அட்டைகளிலும் உள்ள பெயரும் ஒன்றாக இருந்து விட்டால் எளிதாக பெயர் இணைக்கப்பட்டு விடும்.

ஒரு வேளை பெயரில் சிறிய அளவில் வித்தியாசங்கள் இருந்தால் நாம் இரண்டாவது முறையை பயன்படுத்த வேண்டும்.

அதிலும் தென் இந்தியர்களுக்கு ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன.

அதாவது Last Name என்பதில் இனிசியல் கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் ஆதார் எண்ணில் முழு பெயரும், அதாவது தந்தை/ தாய் பெயர் இருக்கலாம்.

இந்த சூழ்நிலையில் SMS மூலம் ஆதார் எண்ணெய் இணைத்துக் கொள்ளலாம்.

ஆதார் எண்ணில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு கீழ் உள்ளவாறு SMS அனுப்ப வேண்டும்.

UIDPAN<SPACE><12 digit Aadhaar><Space><10 digit PAN>

உதாரனத்திற்கு UIDPAN 111133333321 AAAAAEEEEE என்றவாறு அனுப்ப வேண்டும்.

இனி வரும் காலங்களில் ஆதார் எண் என்பது பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளது. அதனால் சிறு விடயங்களை கூட கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. பயனுள்ள பதிவு. Pan card லும் ஆதார் கார்டிலும் பெயர் வேறுவேறாக இருந்தாலும் ஆன்லைனிலேலே இனைக்கலாம். மேற்கண்ட URL ல் சென்று ஆதார் கார்டு நம்பரை என்றி செய்யவும். பின்பு பெயர் என்று பகுதி இருக்கும் அதில் ஆதார் கார்டில் உள்ள பெயரை எழுதினால் இனைந்துவிடும். இந்த ஆப்சன் மே 10 _ 15 தேதிக்கு வந்துள்ளது. அதற்குமுன் பெயர் என்ற ஆப்சன் இல்லை

    பதிலளிநீக்கு