புதன், 7 ஜூன், 2017

ரிசர்வ் வங்கியின் நிதி நிலை அறிக்கை சொல்வது என்ன?

சந்தை இன்று வெளியாகி இருந்த ரிசர்வ் வங்கியின் நிதி நிலை அறிக்கையை அதிக அளவு எதிர்பார்த்து இருந்தது.


கடந்த மூன்று முறையாக ரிசர்வ் வங்கி எந்த வட்டிக் குறைப்பையும் செய்து விடவில்லை. இதனால் ஏதாவது ஒரு வட்டி குறைப்பு என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது.ஆனால் இன்று வெளியாகிய நிதி அறிக்கையில் எந்த வட்டிக் குறிப்பையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை.

அதற்கு பதிலாக SLR என்று சொல்லப்படும் விகிதத்தை மட்டும் அரை சதவீதம் குறைத்துள்ளது.

அதாவது வங்கிகள் தங்களிடம் டெபாசிட்களாக வைத்து இருக்கும் பணத்தில் ஒரு பகுதியை அரசு கடன் பத்திரங்களில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஒரு விதி உள்ளது.

மக்களின் பணத்திற்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை இது. அதனை தான். 20.5% என்பதில் இருந்து 20% என்பதாக குறைத்துள்ளது.

மற்றபடி, CRR, Repo Rate, Reverse Repo Rate போன்றவற்றில் எந்த வித மாற்றமும் இல்லை.

இதற்கு இந்த ஆண்டில் பருவ மழையின் தாக்கம் எவ்வாறு இருக்கும்? மற்றும் புதிய வரித் திட்டமான GST எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும்? என்பதில் இன்னும் தெளிவு எதிர்பார்ப்பதாக கூறி உள்ளது.

ஆனாலும் மறைமுகமாக பார்த்தால் ரூபாய் ஒழிப்பு நடவடிக்கையின் போது வங்கிக்குள் வந்த பணத்தில் பெரும்பகுதி வெளியே எடுக்கப்படவில்லை.

உதாரணமாக எஸ்பிஐ வங்கியில் உள் வந்த டெபாசிட்களில் 60% வங்கிக்குள்ளே தான் இருக்கிறது.

இவ்வாறு அதிக அளவு பணம் உள்ளே இருக்கும் நிலையில் கடன் கொடுப்பவர்களுக்கு வட்டியில் சலுகை கொடுக்கும் நிலைக்கு வங்கிகள் தானாகவே தள்ளப்பட்டு உள்ளன,

அதனால் அரசின் கடன் பத்திரங்கள், பல வங்கிகளின் வட்டி விகிதங்கள் ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை சாராமலே குறைந்து வருகின்றன.

இது பண வீக்கத்தில் பெரிய அளவு தாக்கம் ஏற்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

அதனால் மேலும் வட்டி விகிதங்களை குறைத்து தம்மிடம் உள்ள பணவீக்க கட்டுப்பாட்டை இழக்க ரிசர்வ் வங்கி தயாராக இல்லை.

GDP வளர்ச்சியில் ஏற்ப்பட்ட குறைபாட்டையே சந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில் இதனை சந்தையும் பெரிய அளவு எடுத்துக் கொள்ளாமல் மேலே தான் சென்றது.

எமது தனிப்பட்ட கருத்தாக தற்போதைய சந்தை நிலவரங்கள் முதலீட்டிற்கு ஏற்றதாக இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் ஒரு இறக்கத்தை காணலாம்.

அதனால் அதிக லாபம் அடைந்த பங்குகள் மதிப்பீடலையும் தாண்டி சென்றால் விற்று விட்டு இறக்கங்களை மற்ற பங்குகளில் நுழையும் வாய்ப்பாக கருதிக் கொள்ளலாம்.

தொடர்புடைய பதிவுகள்:
CRR, Repo, Reverse Repo..அப்படின்னா என்ன?

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக