செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

Apex Frozen Foods IPOவை வாங்கலாமா?

இன்று ஆகஸ்ட் 22 முதல் Apex Frozen Foods நிறுவனத்தின் ஐபிஒ விண்ணப்பங்கள் தொடங்குகின்றன.


கடந்த முறை கொச்சின் ஷிப்யார்ட் ஐபிஒவினை பரிந்துரை செய்து இருந்தோம். ஒரு குறுகிய இடைவெளியில் 25% லாபம் கிடைத்து இருப்பதில் மகிழ்ச்சி!

பார்க்க: Cochin Shipyard ஐபிஒவை வாங்கலாமா?ஆந்திராவை சார்ந்த Apex நிறுவனம் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

அதிலும் குறிப்பாக இறால் என்று சொல்லப்படும் பிராவ்ன் வகைகள் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இந்த ஐபிஒவில் பெறப்படும் முதலீடுகளும் இறால் பதப்படுத்தப்படவே பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த நிறுவனத்தின் ஏற்றுமதி பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையே சார்ந்து இருக்கிறது.

நிதி நிலை அறிக்கையை பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக 30% அளவு வளர்ச்சியைக் கொடுத்து வருகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பது கோடியாக இருந்த லாபம் தற்போது 24 கோடியாக மாறி உள்ளது.

இப்படி நிதி அறிக்கையின் வளர்ச்சி மிக நன்றாகவே உள்ளது.

இனி மதிப்பீடலை பார்ப்போம்.

Apex நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 171 முதல் 175 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மதிப்பில் நிறுவனத்தின் P/E மதிப்பு 17க்கு அருகில் உள்ளது.

பங்குச்சந்தையில் உள்ள Avanti Feeds, The Waterbase Limited, Zeal Aqua Limited போன்ற நிறுவனங்களை இந்த நிறுவனத்துடன் ஒப்பிடலாம்.

ஆனால் இந்த நிறுவனங்களின் P/E மதிப்பு குறைந்தது 30க்கு மேல் இருக்கும் சூழ்நிலையில் Apex நிறுவனத்தின் பங்கு விலை நல்ல மதிப்பீடலில் வருகிறது.

எதிர்மறை காரணிகளை பார்த்தால்,
தெற்கு ஆசியாவில் இறால்களுக்கு பரவி வரும் EMS என்ற நோய் தாக்கம் இருப்பது, அமெரிக்க ஏற்றுமதி கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்த நிறுவனத்தை பாதிக்கலாம்.

ஆனாலும் இவை நிறுவனம் சாராத பொதுவான காரணிகளே.

அதனால் நல்ல வளர்ச்சி மற்றும் மலிவான பங்கு விலை போன்றவற்றை கருதி Apex ஐபிஒவை பரிந்துரை செய்கிறோம்.

எமது வழியாக Angel Broking டிமேட் கணக்கு திறந்து உள்ளவர்கள் மொபைல் மற்றும் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டால் ஐபிஒ விண்ணப்பிக்க வழி முறைகளை தருகிறோம்.

டிமேட் கணக்கு இல்லாததால் ஐபிஒ விண்ணப்பிக்க முடியாதவர்களும் muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம். பங்கு பரிந்துரைகளுடன் எளிதான முறையில் டிமேட் கணக்கு திறக்க உதவி செய்கிறோம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக