வெள்ளி, 8 செப்டம்பர், 2017

நல்ல முதலீடு வாய்ப்பு - பெட்ரோல், மின் சேமிப்பு, பேட்டரி கார், தொடர்புபடுத்துக! (2)

இந்த கட்டுரையின் முந்தைய தொடர்ச்சியை இங்கு காணலாம்.
பார்க்க:
நல்ல முதலீடு வாய்ப்பு - கச்சா எண்ணெய், மின் சேமிப்பு, பேட்டரி கார், தொடர்புபடுத்துக! (1)

இதில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்றால் அரசு இனி மின்சாரத்தை பயன்படுத்த ஊக்கவிக்க ஆரம்பிக்கும்.


இனி எங்கு பெரிய அளவில் உபயோகமாக அதிகமாக பயன்படுத்தலாம் என்று யோசித்து பாருங்கள்.

பேட்டரி கார்.அதனால் தான் அரசு 2030க்குள் அணைத்து வாகனங்களும் மின்சாரம் மூலம் இயங்க வேண்டும் என்ற திட்ட கொள்கையை தற்பொழுது சொல்லி உள்ளது.

இதில் அரசுக்கு ஒரே கல்லில் பல மாங்காய்கள் என்று சொல்லலாம்.

ஒன்று,
உபரியாக கிடைக்க போகும் மின்சாரத்தை திருப்பி விட்டாச்சு.

இரண்டாவது,
பேட்டரி கார்கள் குறைந்த வகையில் புகை வெளியிடும் என்பதால் பாரிஸ் மாசு கட்டுப்படுதுதளுக்கு உதவியும் செய்தாச்சு.

மூன்றாவது,
பேட்டரி கார் வந்தால் பெட்ரோல், டீஸல் தேவை குறையும். இவற்றின் தேவை குறைந்தால் பெரிய அளவில் இறக்குமதி செய்வது குறையும். அதனால் இந்திய அந்நிய செலாவணியியையும் சேமித்தாச்சு.

இதன் தொடர்ச்சியைத் தான் மகிந்திரா, டாடா, அசோக் லேலேண்ட் போன்ற நிறுவனங்கள் செயல்படுத்த ஆரம்பித்துள்ளன.

இந்த நிறுவனங்கள் அதிக அளவில் மின்சார வாகன உற்பத்தியில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன.

அரசோ NTPC. Power Grid போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பேட்டரி ரிசார்ஜ் நிலையங்களை அமைக்க முடிவு எடுத்துள்ளது. இனி பெட்ரோல் பங்குகளுக்கு போட்டியாக இந்த ரீசார்ஜ் நிலையங்களையும் காணலாம்.

சரி. இதெல்லாம் ஒரு கற்பனை தான். தற்போது வெளிவரும் வித்தியாசமான புதிய தமிழ் படங்கள் போல் மூன்று வெவ்வேறு நிகழ்வுகள் ஒரு புள்ளியில் இணைகிறது என்றும் சொல்லலாம்.

அதில் ஒரு இணையும் புள்ளி நாம் செய்யும் முதலீடும்.

இந்த கற்பனை நிஜமாகினால் ஒரு லட்ச ரூபாய் முதலீடு ஒரு கோடியாகினாலும் ஆச்சர்யமில்லை.

இவ்வளவும் சொன்ன பிறகு  நீங்களே எங்கு முதலீடு செய்யலாம் என்பதை கண்டுபிடித்து இருப்பீர்கள்!

மொத்தமாக கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பெட்ரோலில் இருந்து பேட்டரிக்கு மாறுகிறார்கள். அவ்வளவு தான். பெரிய அளவில் வித்தியாசமில்லை.

ஆனால் வாகனங்களுக்கு பேட்டரி செய்யும் நிறுவனங்கள், எலெக்ட்ரிக் கார் உபகரணங்கள் செய்யும் நிறுவனங்கள் மொத்த பலனையும் அனுபவிக்க இருக்கின்றன.

இந்தியாவில் மொத்தமாக பார்த்தால் இரண்டு கார் பேட்டரி செய்யும் பெரிய நிறுவனங்களே உள்ளன. அவை இரண்டுமே அதிக அளவில் பலன் பெறும்.

எமது கட்டண சேவையில் அதில் ஒரு கார் பேட்டரி நிறுவனத்தை தொடர்ச்சியாக பரிந்துரை செய்து வருகிறோம். இந்த பங்கெல்லாம் அதிக அளவில் இந்த நிகழ்வில் பலன் பெறும் என்பது எமது எதிர்பார்ப்பு.

அதே போல் LED பல்பு செய்யும் நிறுவனங்கள் பெரிய அளவில் பலன் பெறும்.

உலக அளவிலும் பேட்டரி கார்கள் உபயோகம் அதிகரிக்கும் போது கச்சா எண்ணெய் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலையில் விமான எரிபொருளுக்கான விலைகளும் குறையும். அதனால் விமான பங்குகளும் கணிசமான அளவில் பலன் பெறும்.

இதே போல், கச்சா எண்ணையை மூலதனமாக கொண்டிருக்கும் உரம், பெயிண்ட் போன்ற நிறுவனங்களும் அதிக அளவில் பலன் பெற வாய்ப்பு உள்ளது.

மின்சாரம் மலிவாக கிடைத்தால் மக்கள் A/C, fridge போன்றவற்றையும் அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். அதனால் இந்த துளி இந்த நிறுவனங்களிலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கச்சா எண்ணையை சார்ந்து இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள், எண்ணெய் சுத்தகரிப்பு நிறுவனங்கள் போன்றவை கடுமையான எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

முன்பே சொன்னது போல், இதெல்லாம் உடனே நடக்கும் நிகழ்வுகள் என்று சொல்ல முடியாது. பத்து வருடங்களுக்கு காத்து இருந்தால் கற்பனைகள் நிஜமாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க இயலாது.

இறுதியாக இந்தக் கட்டுரையை நிகழ்வில் பயன்பெறுமளவு மாற்றுகிறோம். 900 ரூபாயில் நான்கு பங்குகளை Value Investing என்ற பெயரில் பரிந்துரை செய்கிறோம். விருப்பம் இருந்தால் muthaleedu@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக