திங்கள், 11 செப்டம்பர், 2017

Matrimony.com IPOவை வாங்கலாமா?

காளையின் பிடியில் இருக்கும் சந்தையில் தொடர்ச்சியாக ஐபிஒக்கள் வந்து கொண்டிருக்கிறது. அடுத்து, இன்று  செப்டம்பர் 11  முதல் matrimony.com நிறுவனத்தின் ஐபிஒ வரவுள்ளது.


எமது பிற கடந்த கால ஐபிஒ பரிந்துரைகளை இங்கு காணலாம்.



பலருக்கும் பரிட்சயமான matrimony.com நிறுவனத்தை பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

திருமண உறவுகளுக்கு இணைய தளம் வழியாக பந்தம் ஏற்படுத்துவது தான் நிறுவனத்தின் முக்கிய சேவை.

shaadi.com போன்ற மற்ற இணைய தளங்களை போல் அல்லாமல் மொழி, மதம், இனம் என்று மைக்ரோ அளவில் மேட்ரிமோனி சேவைகளை அளித்து வருகிறது.

அதனால் தென் இந்தியாவில் நன்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

முந்தைய காலங்களை போல் அல்லாமல் குடும்பங்களின் இடம்பெயர்தல் அதிகமாக உள்ளது.

அதனால் இனி வரும் காலங்களில் கல்யாண புரோக்கர்களை விட இந்த மாதிரியான இணைய தளங்கள் அதிக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

இது தவிர, திருமண நிகழ்வுகளுக்கு தேவையான அலங்கரித்தல், சமையல் போன்ற Value Added சேவைகளையும் அளித்து வருகிறது.

இதெல்லாம் இந்த நிறுவனம் தொடர்பான நேர்மறை காரணிகள்.

எதிர்மறையாக பார்த்தால்,

கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானம் அதிகரித்து வந்தாலும், தொடர்ந்து நான்கு வருடங்களாக நஷ்டத்தை கொடுத்து வந்துள்ளது.

இதற்கு அமெரிக்க நீதி மன்றத்தில் இருந்த சில காபிரைட் வழக்குகள் மற்றும் விளம்பர செலவுகள் அதிகரித்து வருவது போன்றவையும் ஒரு காரணம்.

அமெரிக்க வழக்குகள் தற்போது தீர்க்கப்பட்டு விட்டது. அதனால் அது தொடர்பான செலவுகள் இனி இருக்காது.

அதனால் செலவு முறைகளில் இனி முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது.

அடுத்து, போட்டியும் அதிகமாக உள்ளது. அதனால் Shaadi.com போன்ற வட இந்திய தளங்களை மிஞ்சுவதற்கு கடினமான சூழ்நிலை இருப்பதையும் மறுக்க இயலாது.

ஆனாலும் தென் இந்தியாவில் ஒரு வலுவான நிலையைக் கொண்டுள்ளது சாதகமான விடயம்.

ஒரு பங்கின் விலை 985 விலை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்த நிறுவனத்தின் லாபத்தைக் கணக்கிட்டால் P/E மதிப்பு 35க்கு அருகில் வருகிறது.

இது கொஞ்சம் அதிகமான மதிப்பீடு தான்.

அதே நேரத்தில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு 10% சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் 98 ரூபாய் குறைவாக கொடுத்தால் போதும்.

அந்த வகையில் ரீடைல் முதலீட்டாளர்கள் 10% வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

நிறுவனத்தின் நிதி அறிக்கைகளில் முன்னேற்றம் தெரிவதால் நீண்ட கால நோக்கிலும் முதலீடு செய்யலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக