நேற்று தான் Dixon Technologies நிறுவனத்தின் ஐபிஒவை பற்றிய எமது பார்வையை வைத்து இருந்தோம்.
இந்த ஐபிஒவோடு Bharat Road Network என்ற நிறுவனத்தின் ஐபிஒவிற்கும் விண்ணப்பங்கள் இன்று செப்டம்பர் 06 முதல் ஏற்கப்படுகின்றன.
Bharat Road Network நிறுவனமானது சாலை கட்டுமானத்துறையில் இயங்கி வருகிறது.
கேரளா, மகாராஷ்டிரா, உபி போன்ற மாநிலங்களில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை செய்து வருகிறது.
சாலை அமைப்பதுடன் சுங்க வரி வசூலிப்பதன் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறது.
கடந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் போது ஊழல் போன்ற சில காரணங்களால் சாலை கட்டுமான வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டது.
அதனால் பாதிப்பு ஏற்பட்ட நிறுவனங்களில் Bharat Road நிறுவனமும் ஒன்று.
அப்பொழுது ஏற்பட்ட நஷ்டம் இன்னும் முடிந்த பாடில்லை. 2015ல் எட்டு கோடியில் தொடங்கிய நஷ்டம் தற்போது 36 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
அதிக அளவில் கடனுக்கு வட்டி கட்டி வருவது தான் இந்த நிறுவனத்தின் சுமை.
ஐபிஒ சந்தையில் 600 கோடி அளவு நிதி திரட்ட வருகிறது. இந்த நிதியில் பெரும்பான்மை கடனை அடைக்கத் தான் பயன்பட செல்கிறது.
அதனால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இந்த நிதி உதவ போவதில்லை.
நஷ்டத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்திற்கு P/E மதிப்பீடல்கள் உதவதில்லை. அதனால் பங்கு விலையான 205 ரூபாய் என்பது அதிக பட்சமாகவே தெரிகிறது.
மோடியின் அரசில் சாலை கட்டுமானத்திற்கு முக்கியத் துவம் கொடுத்தாலும், இந்த நிறுவனத்தின் அடிப்படைகள் சரியில்லாததால் Bharat Road ஐபிஒவை தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக