புதன், 13 செப்டம்பர், 2017

Capacit’e Infra IPOவை வாங்கலாமா?

உச்சத்தில் இருக்கும் சந்தையில் ஐபிஒக்களின் எண்ணிக்கை வரிசையில் நிற்கிறது.


இன்றைக்கு செப்டெம்பர் 13ல் matrimony.com ஐபிஒ முடிவடைந்துள்ளது. அடுத்து உடனே தொடர்ச்சியாக Capacit’e Infrastructure Limited நிறுவனத்தின் ஐபிஒ வெளிவந்துள்ளது.



Capacit’e நிறுவனம் கட்டுமானத்துறையில் இயங்கி வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை காண்ட்ராக்ட் முறையில் செய்து வருகிறது.

இது தவிர, மெக்கானிகல், எலக்ட்ரிகல், ப்ளம்பிங் போன்ற வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது.

மும்பை, பெங்களூர், டெல்லி போன்ற நகரங்களில் இந்த நிறுவனத்தின் பணிகள் நடந்து வருகிறது.

ஒபரோய், கோத்ரேஜ், Brigade, Lodha Group, Prestige போன்ற பெரும்புள்ளிகள் இந்த நிறுவனத்தின் பெரிய வாடிக்கையாளர்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் 216 கோடியாக இருந்த இந்த நிறுவனத்தின் வருமானம் தற்போது 1100 கோடியாக உயர்ந்துள்ளது.

அதே போல், நான்கு கோடியாக இருந்த லாபம் 70 கோடியாக உயரந்துள்ளது.

அந்த வகையில் நிறுவனத்தின் வருமானம் வருடத்திற்கு 75% என்றும், லாபம் வருடத்திற்கு 154% என்றும் வளர்ந்துள்ளது. இது ஒரு அபரிமிதமான வளர்ச்சியே.

தற்போது  பங்குச்சந்தையில் 400 கோடி ரூபாய் முதலீட்டினை திரட்ட உள்ளது. ஒரு பங்கிற்கு 245-250 ரூபாய் வரை விலை நிர்ணயித்துள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால் P/E மதிப்பு 24க்கு அருகில் வருகிறது. இதே துறையில் உள்ள மற்ற நிறுவனங்கள் 20 என்ற அளவில் வர்த்தகமாகி வருகின்றன.

ஆனால் மற்ற நிறுவனங்களை விட இந்த நிறுவனத்தின் வளர்ச்சி பல மடங்கு அதிகமாக உள்ளது.

இதனால் இந்த 20% ப்ரீமியம் என்பதை ஒத்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் இந்த ஐபிஒவினை வாங்க பரிந்துரை செய்கிறோம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக