வெள்ளி, 8 செப்டம்பர், 2017

நல்ல முதலீடு வாய்ப்பு - பெட்ரோல், மின் சேமிப்பு, பேட்டரி கார், தொடர்புபடுத்துக! (1)

இதற்கு முன்பு ஒரு கட்டுரையில் விப்ரோ நிறுவனத்தில் 1000 ரூபாய்  முன்பு முதலீடு செய்து இருந்தால் இப்பொழுது 43 கோடியாக  திரும்ப பெற்றிருப்போம் என்று எழுதி இருந்தோம்.


கேட்க நம்ப முடியவில்லை என்றாலும் உண்மை அது தான்..

பார்க்க: விப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி

இதே போல் தான் மாருதி, ராயல் என்பில்டு உருவாக்கும் Eicher Motor போன்ற நிறுவனங்களில் பத்து வருடங்களுக்கு முன்பு முதலீடு செய்து இருந்தால் பல மடங்குகளில் ரிடர்ன் பெற்று இருப்போம்.




அதே நேரத்தில் தற்போது இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால் இதே அளவு ரிடர்ன் கிடைக்கும் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது.

அதற்கு அந்தந்த காலக் கட்டங்களில் வெளிப்புற சூழ்நிலைகள் காரணமாக சில நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வந்து விழும்.

கடந்த பத்து ஆண்டுகளில் தான் இந்தியாவில் கார் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் கூடியது. அதனால் மாருதி நிறுவனம் அதன் பலனை தானாக அனுபவித்தது.

முப்பது வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் எழுந்த ஐடி புரட்சி இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை கொட்டி கொடுத்தது.

இந்த சூழ்நிலைகளை முன் கூட்டியே அனுமானிப்பதில் தான் பங்குச்சந்தையில் மிகப்பெரிய வெற்றியும் அடங்கும்.

அந்த வகையில் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஒரு நல்ல Value Investing சூழ்நிலை உருவாகுவதை பகிர்கிறோம்.

சில ஆண்டுகள் முன்பு பாரிஸ் நகரில்  நடைபெற்ற G20 மாநாட்டில் இந்தியா ஒன்றை கையெழுத்திட்டது.

கரியமில வாயு வெளியிடுவதை கட்டுப்படுவதில் நாங்களும் துணைக்கு நிற்கிறோம். துணைக்கு நிற்கிறோம் என்றால் கையெழுத்து போட்டால் தான் வளர்ந்த நாடுகளிடமிருந்து நமக்கு சலுகைகள் கிடைக்கும்.

இது தான் மண்ணெண்ணெய் ரேசனில் வழங்குவதையும் தடுக்க முக்கிய காரணம்.

அடுத்து, NTPC போன்ற நிறுவனங்கள் தான் அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கின்றது. அவை எல்லாம் பெரும்பாலும் நிலக்கரியை எரித்தே பெறப்படுகின்றது.

அந்த புகையும் அதிக அளவு மாசு வாயுவை வெளியிடுவதால் அவற்றிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதனால் ஒரு தெர்மல் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனமான NTCP சோலார் மின்சார உற்பத்தியில் நாங்களும் ஈடுபடுகிறோம் என்று சொல்லி விட்டது.

இப்படி கடந்த மூன்றாண்டுகளில் மோடி அரசு இயற்கை மின்சாரத்திற்கு கொடுத்த பல சலுகைகள் காரணமாக சோலார், காற்று மின்சாரம் தயாரிக்கும் பல நிறுவனங்கள் இந்தியாவில் கடை விரித்தன.

இதனால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாக ஒரு யூனிட் மின்சாரம் 2.5 ரூபாய்க்கு வந்து விட்டது.

பார்க்க: குறையும் மின் கட்டணம், பவர் பங்குகளில் கவனம் தேவை

இது தற்போது கிரிட் வழியாக வரும் மின்சார செலவை விட குறைந்து விட்டது என்பது தான் ஆச்சர்யம்.

ஒரு பக்கம், அதிக மின்சார உற்பத்தி வர மற்றொரு பக்கம் மின்சார சிக்கனத்தையும் அரசு ஊக்குவித்தது.

மானிய விலையில் LED பல்புகள் அரசு மின்சார வாரியங்களிளாலே வழங்கப்பட்டன. தெரு விளக்குகளில் LED ஒளிர ஆரம்பிப்பது அதிக வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

ஆக, ஒரு பக்கம் சந்தையில் உபரி மின்சாரம் வரவிருக்கிறது. மறு பக்கம், மின்சாரம் சிக்கனப்படுத்தப்படுகிறது.

இதனை டிமேண்ட் - சப்ளை தியரி அடிப்படையில் பார்த்தால் கண்டிப்பாக மின்சார விலை வரும் காலங்களில் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.

இதில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்றால் அரசு  இனி மின்சாரத்தை பயன்படுத்த ஊக்கவிக்க ஆரம்பிக்கும்.

இனி எங்கு பெரிய அளவில் உபயோகமாக அதிகமாக பயன்படுத்தலாம் என்று யோசித்து பாருங்கள்.

பேட்டரி கார்.

அடுத்த பாகத்தில் தொடர்ச்சியை பார்க்கலாம்...

பார்க்க:
நல்ல முதலீடு வாய்ப்பு - கச்சா எண்ணெய், மின் சேமிப்பு, பேட்டரி கார், தொடர்புபடுத்துக! (2)


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக