வெள்ளி, 12 அக்டோபர், 2018

அடிப்படையால் காளையின் எழுச்சியைக் கண்ட சந்தை

கடந்த சில வாரங்களுக்கு பின் இந்த வார சந்தை கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்தது.


நேற்று முன்தினம் புதனன்று சந்தை 600 சென்செக்ஸ் புள்ளிகள் வரை சென்றது.



ஆனாலும் அடிப்படைகளை (Fundamental) என்பதை விட Technical என்பதே அதில் மேலோங்கி இருந்தது.

அதாவது பங்கு வர்த்தகம் செய்பவர்கள் சரிவுகளின் தொடக்கத்தில் Short Positions என்பதை எடுத்து இருப்பார்கள்.

ஆனால் மிக அதிக அளவில் சந்தை தொடர்ந்து சரிந்து விட்டதால் இனி மேலும் Short Positions வைத்து இருந்தால் அவர்களுக்கு நஷ்டமாகி விடும்.

அதனால் Short Positions நிலையை விற்று விட முனைவார்கள். இதனை Short Covering என்று அழைப்பர்.


இது தான் புதனன்று நடந்தது.

ஆனால் ஏன் இந்த சந்தை இவ்வளவு சரிந்தது என்ற காரணத்தை பார்த்தோமானால் கச்சா எண்ணெய் விலை உயர்வு தான்.

அதில் பெரிதளவு மாற்றம் புதனன்று இல்லாததால் Fundamental இல்லாமல் Technical என்பதை மட்டும் சார்ந்து சந்தை உயர்ந்து இருந்தது.

அடிப்படைகள் வலுவில்லாத சமயத்தில் உயரும் சந்தை நீடித்து நிற்காது.

அதனால் நேற்று வியாழனன்று மீண்டும் சந்தை சரிந்தது.

அதற்கு அமெரிக்க பொருளாதரத்தில் சிறிது தொய்வு வரலாம் என்பதால் அமெரிக்க சந்தைகள் சரிந்து இருந்தன. அதன் தொடர்ச்சியாக நமது சந்தைகளும் முந்தைய தினம் பெற்ற லாபத்தை இழந்து இருந்தன.


இது நமக்கு அவ்வளவு தொடர்பில்லை. ஆனால் வீழ்ந்தது அடிப்படை வலுவில்லாமல் இருந்தது தான்.

இந்த நிலையில் நேற்றைய இரவு 85 டாலருக்கு சென்ற கச்சா எண்ணெய் விலை 81 டாலருக்கு கீழ் இறங்கி இருந்தது.

அமெரிக்காவின் இரான் தடை வலுவில்லாமல் போகலாம் என்பதும் இதற்கு இரு காரணம்.

இது தவிர, அமெரிக்காவும் சவுதியும் அதிகப்படியான எண்ணையினை சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதால் விலை குறையும் அபாயம் இருக்கிறது.

அவ்வாறு விலை குறைந்தால் ரூபாய் மதிப்பு கூடும்.

அதன் தாக்கத்தை இன்று பார்க்க முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு ரூபாய் அளவு மதிப்பு கூடியது.

இந்த அடிப்படை காரணத்தை சாதகமாக வைத்து சந்தை இன்று 700 சென்செக்ஸ் புள்ளிகளுக்கும் மேல் உயர்வை பார்த்தது.

தற்போது இந்த காளை சந்தை இன்னும் சில நாட்கள் தொடரும் போல் தான் தெரிகிறது.

தீபாவளி போன்ற பண்டிகை கொண்டாட்டங்கள், இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகள் போன்றவை சந்தைக்கு ஒரு குறுகிய காலத்திற்கு சாதகமாக இருக்கலாம்.

ஆனால் இந்த கச்சா எண்ணெய் விலை குறைவு என்பது நீடிக்குமா? என்பதிலும்,

வரும் மாநில தேர்தல்களில் பிஜேபி எந்த அளவு வெற்றி பெறும் என்பதிலும் தான் சந்தையின் அடுத்த கட்டம் இருக்கிறது.

அது வரை இந்த சந்தை உயர்வை ஒரு ஆறுதலாக எடுத்துக் கொள்ளலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக