கடந்த முறை மோடி ஆட்சிக்கு வந்த போது இந்திய பங்குசந்தையை பார்த்தால் மிக குறுகிய காலத்தில் 30% வரை உயர்ந்து சென்றது.
ஆனால் இந்த முறை ஒரு சந்தேகக் கண்ணோடு இருப்பதால் புதிய உச்சத்தை தொடுவதற்கு நிறைய தடுமாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறது.
அதற்கு முக்கிய காரணமாக பார்த்தால்,
ஒரு பக்கம், கிராமப்புறங்களில் பணப்புழக்கம் என்பது மிகக் குறைந்து விட்டது.
அதனால் சோப்பு முதல் ஷாம்பூ வரை விற்பனை எண்ணிக்கை குறைந்து விட்டது.
மறு புறத்தில்,
வாகன உற்பத்தி துறையில் வாகனங்கள் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
விவசாய பொய்ப்பு போன்ற காரணங்களால் ட்ராக்டர், கனரக வாகனங்கள் விற்பனை கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் கார் விற்பனையும் குறைந்து விட்டது.
நாமும் இந்த வருடம் கார் வாங்கலாம் என்று தான் எண்ணி இருந்தோம்.
ஆனால் தேவை என்று பார்க்கும் போது சிட்டி ட்ராபிக்கில் உபர், ஓலாவே போதும் என்ற எண்ணம் தான் வந்து நிற்கிறது.
இது போக, எங்கும் Used Cars விளம்பரங்கள். நல்ல நிலையில் நல்ல மாடல்கள் அங்கு நிற்கின்றன.
அப்படி என்றால், எது விருப்பமாக இருக்கும் என்று பார்க்கும் போது புது கார்கள் தேவையில்லையோ என்ற நிலை தான் வருகிறது.
இது போக, இந்த வாகனங்கள் வாங்க கடன் கொடுக்கும் நிறுவனங்கள் ILFS போன்ற நிறுவனங்கள் வீழ்ச்சியால் பணம் திரட்ட மிக கஷ்டப்பட்டு வருகின்றன.
இன்னும் மூன்று மாதங்களில் பாருங்கள். பெரிய அளவில் தள்ளுபடிகளை பார்க்கலாம்.
இப்படி பல காரணங்கள் ரவுண்டு கட்டி அடித்து வருவதால் மோடி ரட்சகராக வந்து மீட்பார் என்ற எண்ணம் சந்தையில் உள்ளது.
அதற்கு பணப் புழக்கம் என்பதை முதலில் கொண்டு வர வேண்டும். வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு பணம் வருவதற்கு பல வழிகள் உருவாக்கப்பட வேண்டும்.
கடந்த சில வருடங்களில் மோடி அரசு புதிய வாகன சுமை கொண்ட விதி முறைகளை கொண்டு வந்தது.
அந்த மாதிரியான வாகனங்களை வாங்கும் போது அரசு சில மானிய உதவிகளை வழங்க வேண்டும்.
GST வரியை 28% என்பதில் இருந்து 18% என்று குறைக்க வேண்டும்.
இதெல்லாம் சாத்தியப்படும் பட்சத்தில் ஓரளவு மீட்சியை பார்க்கலாம்.
அதை எதிர்பார்த்து தான் ஜூலை 5 அன்று பட்ஜெட் உரையில் காத்து இருக்கிறது சந்தை...
இந்த நேரத்திலும் பாருங்கள்..
சில நிறுவனங்கள் தப்ப வாய்ப்பு இருக்கிறது.
உதாரணத்திற்கு கடந்த சில வருடங்களாக வாகன வளர்சசி என்பது மிகவும் அதிகமாக சென்று விட்டது.
அவ்வாறு வாங்கியவர்கள் வாகனங்களை எளிதில் மாற்ற மாட்டார்கள். ஆனால் உதிரி பாகங்களை மாற்றுவார்கள் அல்லவா...
அதனால் பேட்டரி தயாரிக்கும் Exide, டயர் தயாரிக்கும் MRF, JK Tyres போன்ற பங்குகளையும் கவனித்து வாருங்கள்.
முதலீடு என்பது சூழ்நிலைக்கு தக்க மாறுவது. எந்த சூழ்நிலையிலும் ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்துக் கொண்டே தான் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக